Featured post

Basil Joseph, Tovino Thomas & Vineeth Sreenivasan Unite for the Ultimate Mass Entertainer – 'Athiradi'. Title Teaser out now

 *Basil Joseph, Tovino Thomas & Vineeth Sreenivasan Unite for the Ultimate Mass Entertainer – 'Athiradi'. Title Teaser out now* ...

Friday, 18 June 2021

‘ஜகமே தந்திரம்’: இன்று முதல் ரகிட ரகிட ஆரம்பம்...

ஜகமே தந்திரம்’: இன்று முதல் ரகிட ரகிட ஆரம்பம்...

கொரோனா பெருந்தோற்று காலத்தில் திரைப்படங்களை ஸ்டீரிமிங் முறையில் ரசிகர்களின் வீடுகளுக்கே கொண்டு சேர்ப்பது தான் பொழுதுபோக்குத் துறை வணிகத்தில் நீடித்து நிற்க சிறந்த வழியாகிவிட்டது .

Netflix OTT தளத்துடன் கைகோர்த்ததன் மூலம், எங்களின் கனவு தயாரிப்பான ‘ஜகமே தந்திரம்’ இன்று 17 மொழிகளில். 190 நாடுகளில்,  200 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களை சென்றடைய இருக்கிறது.

இந்தப் படத்திற்கு உறுதுணையாக இருந்த பங்குதாரர்கள், இயக்குநர், நடிகர்கள், துறைத் தலைவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், ஒத்துழைப்பாளர்கள், சேவை வழங்குநர்கள் மற்றும் அனைத்து பங்களிப்பாளர்களும் எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.



பல்வேறு தடைகளை தாண்டி  இந்த கனவு படத்தை எந்த ஒரு குறையும் இல்லாமல் படக்குழுவினர் நிஜமாக்கியுள்ளனர்.

இரண்டு ஆண்டுகள் முன்பு 'ஜகமே தந்திராம்' அதிகாரபூர்வமாக அறிவிக்க பட்டதிலிருந்து இன்று வரை படத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வரும் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

படம் வெளியாவதற்கு தாமதம் ஆனாலும் எங்கள் மீது அன்பு செலுத்திய உலகெங்கிலும் உள்ள ரசிகர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். உங்கள் அனைவரின் ஊக்கமே எங்களை மேலும் உற்சாகப்படுத்தியது.


உங்கள் அன்பை நீங்கள் எவ்வாறு பொழிந்தீர்கள், இந்த படம் தொடங்கியதிலிருந்தே எவ்வாறு கொண்டாடினீர்கள் என்பதை நாங்கள் எப்போதும் நினைவில் கொள்வோம்.


'ஜகமே தந்திராம்' இன்று உங்கள் இல்லம் தேடி வந்துவிட்டது. நீங்கள் அனைவரும் இதை பார்த்து, ரசித்து உற்சாகம் அடைவீர்கள் என்று நம்புகிறோம்!





No comments:

Post a Comment