Featured post

ஒரே கூரையின் கீழ் 3 மெகா நிகழ்ச்சிகளுடன் ‘சம்மர்

 *ஒரே கூரையின் கீழ் 3 மெகா நிகழ்ச்சிகளுடன் ‘சம்மர் கார்னிவல் 2024’* *மே-10 முதல் ஜூன்-24 வரை கோடை கொண்டாட்டத்திற்கு தயாராகுங்கள்*  சினிமா அல...

Thursday 24 June 2021

அழகிய கண்ணே" படத்திற்காக பாடல்

 "அழகிய கண்ணே" படத்திற்காக பாடல் பாடிய GV பிரகாஷ் குமார் !


பிரபல திரைப்பட தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ "எஸ்தல் எண்டர்டெய்னர்" நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கும் திரைப்படம் "அழகிய கண்ணே". இத்திரைப்படத்தை இயக்குநர் சீனு ராமசாமியின் துணை இயக்குனர் R.விஜயகுமார் இயக்குகிறார்.





அறிமுக நடிகர் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடிக்கிறார் . கதாநாயகியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபு சாலமன்,விஜய் டிவி புகழ் ஆண்ட்ரூஸ் ஆகியோர்  நடிக்கிறார்கள் .


N.R.ரகுநந்தன் இசையமைப்பில் உருவாகும் இப்படத்திற்காக நடிகர் ,பாடகர் , இசையமைப்பாளர் என பன்முக திறமை வாய்ந்த GV பிரகாஷ் குமார் ஒரு பாடல் ஒன்றை பாடியுள்ளார் . இப்பாடல் மிகவும் அருமையாக உருவாகியுள்ளது என நடிகர் லியோ சிவக்குமார் கூறியுள்ளார் .



நடிகர்கள் :லியோ சிவக்குமார், சஞ்சிதா ஷெட்டி,பிரபு சாலமன், விஜய் டிவி புகழ் ஆண்ட்ரூஸ் 


தொழில்நுட்பக்குழு :

இயக்கம்  - R.விஜயகுமார்

தயாரிப்பு - சேவியர் பிரிட்டோ ( எஸ்தல் எண்டர்டெய்னர்)

பாடல்கள் - வைரமுத்து

இசை - N.R.ரகுநந்தன்

ஒளிப்பதிவு - A.R.அசோக் குமார்

படத்தொகுப்பு - சங்கத் தமிழன்

நடனம் - ராதிகா

சண்டை பயிற்சி : மாஸ்டர் புகழ் ஸ்டண்ட் சில்வா .

தயாரிப்பு மேற்பார்வை - இளையராஜா செல்வம்

மக்கள் தொடர்பு - ரியாஸ் கே அஹ்மத்

No comments:

Post a Comment