Featured post

Basil Joseph, Tovino Thomas & Vineeth Sreenivasan Unite for the Ultimate Mass Entertainer – 'Athiradi'. Title Teaser out now

 *Basil Joseph, Tovino Thomas & Vineeth Sreenivasan Unite for the Ultimate Mass Entertainer – 'Athiradi'. Title Teaser out now* ...

Wednesday, 23 June 2021

புரட்சி வாலிபனாக.. நட்புக்காக முக்கிய கதாபாத்திரத்தில்

 புரட்சி வாலிபனாக.. நட்புக்காக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார் அதர்வாமுரளி. 

இராஜமோகன் இயக்கத்தில் உண்மை கதையாக “அட்ரஸ்”.  

காக்டைல் சினிமா சார்பில் அஜய் கிருஷ்ணா தயாரிக்கும் புதியபடம்! 

தனது முதல் பட டைரக்‌ஷனான  “குங்கும பூவும் கொஞ்சும் புறாவும்” படத்தில் அனைவரிடமும் நல்ல விமர்சனத்தை பெற்றவர் இயக்குனர் இராஜமோகன். இதை அடுத்து 



 “வானவராயன் வல்லவராயன்” படத்தை  இயக்கினார்.

இதை தொடர்ந்து “அட்ரஸ்” என்ற புதிய படத்தை இயக்கிவருகிறார். 

இந்த நாட்டில் ‘அட்ரஸ்’ இல்லாத ஒரு ஊர். ஆமாம்.. 1956-ல் மொழிவாரி மாநிலமாக பிரிக்கிற போது தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் நடுவில் சிக்கி கொண்டு தனது ‘அட்ரஸை’ தொலைத்த கிராமத்துக்கு அட்ரஸ் கிடைத்ததா இல்லையா என்பதே இப்படத்தின் கதை. உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தை மிக திரில்லாக இயக்கிவருகிறார் இராஜமோகன். 

 கதை திரைக்கதை வசனம் எழுதி  இந்த படத்தை இயக்குகிறார்.

இதில் ஒரு புரட்சிகரமான ‘காளி’ என்கிற ஒரு இளைஞன் வேடம். இந்த கேரக்டரில் அதர்வாமுரளி நட்புக்காக நடித்து கொடுத்து அசத்தியுள்ளார். உண்மை சம்பவத்தில்.. முக்கிய கேரக்டரான இதை கேட்டவுடன் நடித்துக் கொடுத்துள்ளார், அதர்வாமுரளி. இவருக்கு ஒரு காதல் பாடல் காட்சியும், இரண்டு ஸ்டண்ட் காட்சியும், புரட்சிகரமான பல காட்சிகளும் இதில் இடம் பெற்றுள்ளது. இந்த கேரக்டர் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பு பெறும். இவரது ஜோடியாக பூஜா ஜவ்வேரி நடிக்கிறார். 

மேலும், இசக்கி பரத், புதுமுகம் தியா,

தம்பிராமையா, தேவதர்ஷினி,  ஏ.வெங்கடேஷ், மெட்ராஸ் நந்தகுமார், நாகேந்திரன்,  கோலிசோடா முத்து

 மற்றும் பலர் நடிக்கிறார்கள். 


இந்த படத்திற்கு 

கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசை அமைக்கிறார். இவர் ‘மெரீனா’, ‘மூக்குத்திஅம்மன்’ , ‘நெற்றிக்கண்’ படங்களுக்கு இசை அமைத்துள்ளார். 

பாடல்கள்:சினேகன்,மோகன் ராஜன், ‘கானா’ ஹரி,

எடிட்டிங்:தியாகு,

 ஸ்டில்ஸ்: குமார், சண்டைப்பயிற்சி:சில்வா, 

 மக்கள் தொடர்பு: ஜான்சன் 


இதனுடைய படப்பிடிப்பு, மலையும்.. மலை சார்ந்த பகுதிகளில் நடைபெற்றது. கொடைக்கானலில் இருந்து 8 கிலோமீட்டர் நடந்து நடந்து சென்று வெள்ளக் கவி என்ற கிராமத்தில் படப்பிடிப்பு நடத்தியுள்ளார்கள். படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது. 

இதன் பர்ஸ்ட் லுக் & டீசர் இன்று பரபரப்பாக வெளியாகியது.

No comments:

Post a Comment