Featured post

KRG கண்ணன் ரவியின் தயாரிப்பில் நடனப்புயல் பிரபு தேவா மற்றும் வைகைப் புயல் வடிவேலு நடிக்கும் "பேங் பேங்" (Bang Bang )

 *KRG கண்ணன் ரவியின் தயாரிப்பில் நடனப்புயல்  பிரபு தேவா மற்றும் வைகைப் புயல் வடிவேலு நடிக்கும் "பேங் பேங்" (Bang Bang ) படத்தின் ட...

Sunday, 4 September 2022

அன்புள்ள பத்திரிகைத் துறை, தொலைக்காட்சி, வானொலி, இணைய நண்பர்களே,

 அன்புள்ள பத்திரிகைத் துறை, தொலைக்காட்சி, வானொலி, இணைய நண்பர்களே,

 

திரு, மணி ரத்னம் அவர்கள் இயக்கத்தில், லைகா புரொடக்‌ஷன்ஸ் திரு.சுபாஸ்கரன் அவர்கள் வழங்கும்,   “பொன்னியின் செல்வன் பாகம்-1” திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா, வரும் செப்டம்பர் 6, 2022 மாலை 6 மணிக்கு சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது.

 

இந்தியத் திரையுலகின் இரு பெரும் தூண்களான திரு. கமல்ஹாசன் அவர்கள் மற்றும் திரு. ரஜினிகாந்த் அவர்கள் ஆகியோரின் முன்னிலையில், இசை மேதை திரு.ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் “பொன்னியின் செல்வன் பாகம்-1” திரைப்படத்தின் பாடல்களை தனது இசைக்குழுவோடு சேர்ந்து அரங்கேற்றுகிறார். 

இசை நிகழ்ச்சியோடு இணைந்து நம் திரையுலகின் மூத்த கலைஞர்களும், தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும், விநியோகஸ்தர்களும், நம் படத்தின் நட்சத்திரங்களும், தொழில் நுட்பக் கலைஞர்களும் தமது நல்வாழ்த்துக்களை வழங்குவார்கள்.

 

இந்த இனிய  நிகழ்வில் நீங்கள் கலந்துகொண்டு உங்கள் வாழ்த்துக்களை வழங்கி சிறப்பிக்குமாறு உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

 

“பொன்னியின் செல்வன் பாகம்-1”  செப்டம்பர் 30-ஆம் தேதி அன்று உலகெங்கிலும் திரையரங்குகளில் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், மற்றும் கன்னட மொழிகளில் வெளியாக உள்ளது.

 

நன்றி!


தங்கள் வரவை எதிர்பார்க்கும்,

சுபாஸ்கரன்,

லைக்கா புரொடக்சன்ஸ்.

மணி ரத்னம்,

மெட்ராஸ் டாக்கீஸ்.

No comments:

Post a Comment