Featured post

The RajaSaab Trailer: Prabhas Starrer Horror Fantasy Drama is a Visual Spectacle Blended with Laughter, Drama & Emotions

 *The RajaSaab Trailer: Prabhas Starrer Horror Fantasy Drama is a Visual Spectacle Blended with Laughter, Drama & Emotions* Rebel Star P...

Friday, 22 December 2023

4 ஆம் ஆண்டு மார்கழியில் மக்களிசை! KGF மற்றும் ஓசூரில் பிரம்மாண்டமாக

 4 ஆம் ஆண்டு மார்கழியில் மக்களிசை!  KGF மற்றும் ஓசூரில் பிரம்மாண்டமாக துவங்க உள்ளது!



இயக்குநர் பா.இரஞ்சித் அவர்களின் நீலம் பண்பாட்டு மையம் கடந்த 2020 முதல் 2022 வரை நடத்திய மார்கழியில் மக்களிசை கலை நிகழ்ச்சி சென்னை, மதுரை மற்றும் கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில்  500க்கும் மேற்பட்ட கலைஞர்கள்,100க்கும் மேற்பட்ட திரைபட பிரபலங்கள் , அரசியல் தலைவர்கள், மற்றும் 15,000க்கும் மேற்ப்பட்ட பார்வையாளரோடு மிக பிரம்மாண்டமாக நடைபெற்று மக்களிடையே மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. 


இதனைத் தொடர்ந்து இந்த வருடம் 2023 க்கான மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி, கோலார் தங்க வயல் (kgf),  ஓசூர் உள்ளிட்ட இடங்களில் டிசம்பர் 23,24  ஆகிய தேதிகளில் கோலாகலமாக நடைபெற உள்ளது. 


இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியின் முதல் நாளான 23ஆம் தேதி கோலார் தங்க வயலில் பறையிசை, நாட்டுப்புற பாடல்கள், ராப் இசை, கானா இசை மற்றும் அறிவு & அம்பாசா  குழுவினருடன் மிக பிரம்மாண்டமாக துவங்க உள்ளது. இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியின் 2 -ஆம் நாளில் ஓசூரில் நாட்டுப்புற பாடல்கள், ராப் இசை, கானா இசை மற்றும் பிளாக் பாய்ஸ் ஆகியோரின் இசை ஆரவாரத்துடன் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 


நாள் 01- நாட்டுப்புற பாடல்கள், ராப் இசை, கானா இசை, ஒப்பாரி, JK பறையிசை குழு  மற்றும் அறிவு & அம்பாசா


நாள் 02-  நாட்டுப்புற பாடல்கள், ராப் இசை, கானா இசை , ஒப்பாரி, JK பறையிசை குழு  மற்றும் பிளாக் பாய்ஸ் 


முழு விவரங்களுக்கு மார்கழியில் மக்களிசை சமூக வலைத்தளத்தை அணுகவும். 


நேரம்; மாலை 3மணி முதல் இரவு 9வரை..


கோலார் தங்க வயல், (kgf) முகவரி; முனிசிபல் கிரவுண்ட், ராபர்ட்சன்பேட்டை, கோலார் மாவட்டம் - KGF -563122

ஓசூர் முகவரி; லாவண்யா மஹால் பின்புறம், மத்திகிரி கூட்டு ரோடு-ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம்


அனுமதி இலவசம் !

அனைவரும் வாருங்கள் !

மார்கழியில்  

மக்களிசையை !

கொண்டாட தயாராவோம் !

No comments:

Post a Comment