Featured post

The RajaSaab Trailer: Prabhas Starrer Horror Fantasy Drama is a Visual Spectacle Blended with Laughter, Drama & Emotions

 *The RajaSaab Trailer: Prabhas Starrer Horror Fantasy Drama is a Visual Spectacle Blended with Laughter, Drama & Emotions* Rebel Star P...

Wednesday, 20 December 2023

பூஷன் குமார் & சந்தீப் ரெட்டி வங்கா ஆகிய இருவரும் சினிமாவின்

 *பூஷன் குமார் & சந்தீப் ரெட்டி வங்கா ஆகிய இருவரும் சினிமாவின் சரித்திரத்தை விரிவுபடுத்துகிறார்கள். கபீர் சிங்கிலிருந்து பிரபாஸின் 'ஸ்பிரிட்', 'அனிமல் பார்க்' மற்றும் அல்லு அர்ஜுன் நடிக்கவிருக்கும் புதிய படம் என அற்புதமான வரிசையுடன் ஒரு வளமான கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.




தயாரிப்பாளர் பூஷன் குமார் மற்றும் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா ஆகிய இருவரும் வழக்கமான கூட்டணியாக இல்லாமல், ஒரு அசாதாரணமான கூட்டாண்மையை உருவாக்கி இருக்கிறார்கள்.‌ 'கபீர் சிங்' மற்றும் 'அனிமல்' போன்ற படங்களில் தொடர்ந்த இவர்களின் வெற்றிகரமான கூட்டணி... படைப்பு சுதந்திரத்திற்கான ஆழ்ந்த நம்பிக்கையும், அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது. இது தொடர்பாக சந்தீப் ரெட்டி வங்கா பேசுகையில், '' பூஷன் குமாருடன் இணைந்து பணி புரிவது என்பது ஒரு தொழில் முறையான ஒத்துழைப்பு மட்டுமல்ல, வழக்கமான கூட்டாண்மைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு வலுவான பிணைப்பாகும் '' என்றார். பூஷன் குமார் ஒரு தயாரிப்பாளர் மட்டுமல்ல.. அவருடைய உறுதியான ஆதரவையும் விவரிக்கிறார் இயக்குநர்.‌

வங்கா தொடர்ந்து பேசுகையில், '' பூஷன் குமாரின் அசைக்க முடியாத ஆதரவே இதற்கு காரணம். 'அனிமல்' படத்தை உருவாக்கும் போது அவர் பின்பற்றிய மென்மையான செயல் முறை பாராட்டத்தக்கது'' என்றார்.


எந்த ஒரு பாடலையும் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் உட்பட படைப்பாற்றலை ஆராய்வதற்காக கொடுக்கப்பட்ட சுதந்திரத்தால் வங்கா தனது படைப்புகளில் மட்டுமே கவனம் செலுத்தக்கூடிய சூழலை ஏற்படுத்தியது.‌ இதனை வங்காவின் வார்த்தைகளில் குறிப்பிட வேண்டும் என்றால், '' எனது படைப்பாற்றலின் அடிப்படையில் அவர் கொடுக்கும் சுதந்திரம் மற்றும் எந்த ஒரு பாடலையும் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் என்பது என்னை டி-சீரிஸ் குடும்பத்தில் ஒருவராகவே உணர வைக்கிறது.‌ இது தான் ஒரு இயக்குநருக்கு தேவைப்படுகிறதே தவிர.. வேறு எதுவும் இல்லை'' என்கிறார்.


படைப்பாற்றல் மற்றும் வணிக ரீதியான நம்பகத்தன்மையின் ஒருங்கிணைப்பு பெரும்பாலும் சவாலாக கருதப்பட்டாலும்... இந்த இரட்டையர் மேலே குறிப்பிட்ட இரு அம்சங்களின் நிறைவு தன்மையை உணர்ந்து, வேறுபாடுகளை சிரமமின்றி வழிநடத்துகிறார்கள்.


வங்காவும், குமாரும் படைப்பாற்றலை தொடர்வதற்கு முன்னுரிமை அளிக்கின்றனர். சில தருணங்களில் பட்ஜெட் கட்டுப்பாடுகளை மிஞ்சும்.  இது தொடர்பாக வங்கா பேசுகையில், '' நாங்கள் பட்ஜெட்டை பற்றி விவாதித்ததில்லை என்பதை திரைப்படம் தயாரிக்கப்பட்ட பிறகு தான் நான் முழுமையாக உணர்ந்தேன்'' என்றார்.


சில கதைகளின் காலமற்ற தன்மையை ஒப்புக் கொண்டு பூஷன் குமாருக்கு ஆதரவாக நின்று படைப்பாற்றல் பார்வையில் முழுமையான நம்பிக்கையை வெளிப்படுத்தியதற்காக வங்கா மனப்பூர்வமான பாராட்டை தெரிவிக்கிறார். இந்த நம்பிக்கையும், ஆற்றலும் தான் பிரபாஸ் உடனான 'ஸ்பிரிட்', 'அனிமல் பார்க்' மற்றும் அல்லு அர்ஜுனுடனான புதிய திரைப்படம் உள்ளிட்ட எதிர்கால படைப்பின் உருவாக்கத்திற்கான ஒத்துழைப்புகளுக்கு வழிவகுக்கிறது.


சந்தீப் ரெட்டி வங்காவின் படைப்பு பார்வையை பூஷன் குமார் மதிக்கிறார். மேலும் அதன் மீது முழுமையான நம்பிக்கையும் கொண்டிருக்கிறார். மேலும் அவர்களது பிணைப்பு வலுவடைந்து வங்கா மற்றும் பிரனய் ரெட்டி வங்காவை ஒரு குடும்பம் போல் உணர வைக்கிறது.


எதிர்காலத்தில் மக்களுக்கு மகிழ்ச்சியை கொண்டு வருவதில் கவனம் செலுத்தி, இந்திய பார்வையாளர்களுக்காக உயர்தரமிக்க திரைப்படங்களை தயாரிப்பதில் பூஷன் குமார் உறுதி பூண்டுள்ளார்.  


'அனிமல்' அதன் அர்த்தமுள்ள தந்தை- மகன் இடையேயான உறவின் கருப்பொருளைக் கொண்டுள்ளது. இதனை பூஷன் குமார் ஆர்வத்துடன் ஏற்றுக்கொண்டதற்கு மேலும் ஒரு முக்கிய காரணம் பிரனய் ரெட்டி வங்கா போன்ற ஒத்த எண்ணம் கொண்ட இணை தயாரிப்பாளரை  கண்டுபிடித்தது தான். இதனால் பூஷன் குமார் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்.


மேலும் வரும் ஆண்டுகளில் பார்வையாளர்களுக்கு ரசிக்கத்தக்க புதிய பாணியிலான சினிமா அனுபவங்களை வழங்குவதையும், உருவாக்குவதையும் அவர்கள் நோக்கமாக கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment