Featured post

No Celebrity. No Digital Launch. "Enna Vilai" Lets an Entire Village Unveil Its First Look

 *No Celebrity. No Digital Launch. "Enna Vilai" Lets an Entire Village Unveil Its First Look* _*The people who welcomed our story ...

Thursday, 14 December 2023

மீண்டும் இணைந்த 'ஈரம்

 மீண்டும் இணைந்த 'ஈரம்' கூட்டணி

7ஜி ஃபிலிம்ஸ் சிவா தயாரிக்க, 

இயக்குனர் அறிவழகனின் 'ஆல்பா ஃப்ரேம்ஸ்'  சார்பில் இணைந்து தயாரிக்கும் ஹாரர், திரில்லர் படம் 'சப்தம்.'




தனது மேக்கிங் மற்றும் கதை சொல்லலில் அனைவரையும் ஈர்த்த, வெற்றிப்பட இயக்குனர் அறிவழகன் ஈரம் படத்திற்கு அடுத்து இயக்கி இருக்கும் ஹாரர் திரில்லர் படம் இது. 


இதில் இயக்குனர் அறிவழகன், 

நடிகர் ஆதி, இசையமைப்பாளர் தமன் ஆகியோர் மீண்டும் இணைந்து  இருக்கிறார்கள்.


ஈரம் திரைப்படம் முழுவதும் மழை மற்றும் மழை சார்ந்த காட்சிகளை மையப்படுத்தி உருவானது. இதில் சிறப்பு பேய் தண்ணீரின் வழி வரும்.


அதுபோல், சப்தம்  திரைப்படம் மலை மற்றும் குளிர் பிரதேசம் சார்ந்த பகுதிகளை மையப்படுத்தி காட்சியமைக்கப்பட்டுள்ளது. மேலும், சப்தத்தை மையப்படுத்தியும் காட்சிகளை உருவாக்கியுள்ளனர்.


மும்பை, மூணாறு, சென்னை உள்ளிட்ட இடங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. படத்தின் இடைவேளை மற்றும் இறுதிக்கட்ட காட்சிக்காக ரூபாய் 2 கோடி செலவில்,120 வருட பழமையான கல்லூரி நூலகம் போன்ற  பிரம்மாண்டமாக செட் உருவாக்கி படம் பிடித்துள்ளனர். குறிப்பாக சவுண்ட் எஃபெக்ட்ஸ் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ்க்கு முக்கியத்துவம் கொடுத்து இப்படத்தை உருவாக்கி வருகிறார்கள். இப்படத்தின் பின்னணி இசைக்காக தமன் மற்றும் படக்குழுவினர் ஹங்கேரி செல்ல உள்ளனர். 


இப்படத்தில் ஆதியுடன் சிம்ரன், லைலா, லட்சுமி மேனன், ரெடின் கிங்ஸ்லி, எம்.எஸ்.பாஸ்கர், ராஜீவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். மகாமுனி படம் மூலம் கவனம் பெற்ற அருண் பத்மநாபன் ஒளிப்பதிவு செய்ய, இதே இயக்குனருடன் ' வல்லினம்' படத்திற்காக தேசிய விருது பெற்ற 'சாபு ஜோசப்'  படத்தொகுப்பு செய்துள்ளார்.


சப்தம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாக உள்ள நிலையில், டீசர் மற்றும் டிரைலர் பற்றிய அறிவிப்பை படக்குழுவினர் விரைவில் அறிவிக்க உள்ளனர்.

No comments:

Post a Comment