Featured post

Maanbumigu Parai Movie Review

Maanbumigu Parai Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம manmubigu parai படத்தோட review அ தான் பாக்க போறோம். Leo Siva Kumar, Gayathri rema ...

Wednesday, 8 May 2024

மாஸ்டர்செஃப் ஆஸ்திரேலியா புகழ் சஷி செலியா, மாஸ்டர்செஃப் இந்தியா

 மாஸ்டர்செஃப் ஆஸ்திரேலியா புகழ் சஷி செலியா, மாஸ்டர்செஃப் இந்தியா தமிழின் இம்யூனிட்டி பின் சவாலில் சமையல் கலை ஜுவாலையை எழுப்புகிறார்!

 


மாஸ்டர்செஃப் ஆஸ்திரேலிய சீசன் 10-இன் வெற்றியாளரான புகழ்பெற்ற செஃப் சஷி செலியா, இந்த சீசனின் முதல் இம்யூனிட்டி பின் சவாலைத் தொடங்கி சமையலறையை அலங்கரிப்பதைக் காண, மாஸ்டர்செஃப் இந்தியா தமிழில் ஒரு மகா சமையல் போட்டிக்குத் தயாராகுங்கள்!

 

சமையல் கலைஞர் சஷி, 1 இஞ்ச் கியூப் பிளைன்ட் டேஸ்ட் டெஸ்ட்டை அறிமுகப்படுத்தி, இல்லத்தின் சமையல்காரர்களின் திறன்கள் மற்றும் உணர்வுகளின் வரம்புகளை விஸ்தரிக்கிறார். ஐந்து தைரியமான போட்டியாளர்கள் மட்டுமே களத்தில் இறங்குவதால், கடைசி இருவர் மட்டுமே சமையல்கலை மேஸ்ட்ரோவை எதிர்கொள்ளும் அந்த லட்சிய வாய்ப்பைப் பெறுவார்கள்!

 

சுவைகள் மற்றும் நுணுக்கங்களின் பரபரப்பான போரில், கடைசியாக நிற்கும் இரண்டு இல்ல சமையல்காரர்கள், வழங்கப்பட்ட சரக்கு அறையில் உள்ள பொருட்களை ஆயுதமாய்க் கொண்டு செஃப் சாஷியுடன் நேருக்கு நேர் நின்று மோதுவார்கள். மேலும் பெறுவதற்கு என்ன இருக்கிறது? பெரிதும் விரும்பப்படும் இம்யூனிட்டி பின் தவிர வேறென்ன? ஆனால் இங்கே ஒரு திருப்பம்: சமையல்காரர் சஷி தனது தலைசிறந்த சமையல் கலை படைப்பை வழங்க இல்லத்தின் சமையல்காரர்களை விட குறிப்பிடத்தக்க அளவாக 15 நிமிடங்கள் குறைவான நேரமே கொண்டிருப்பார். நீதிபதிகள் பின்பு யாருடைய உணவை அவர்கள் ருசிக்கிறார்கள் என்பதை அறியாமல், மூன்று உணவுகளையும் ருசித்து, சவாலுக்கு கூடுதல் உற்சாகத்தையும் விறுவிறுப்பையும் அளிக்கிறார்கள்!

 

இது சமையல் கலை ஜாம்பவான்களின் மோதல். இங்கு மிகச்சிறந்த உணவுவகைகள் மட்டுமே வெற்றி பீடத்தை அடைந்து அதன் படைப்பாளிக்கு விலைமதிப்பற்ற இம்யூனிட்டி பின்னைப் பெற்றுத் தரும். நிகழ்வில் சிறப்பாகத் திறனை வெளிப்படுத்தி யார் வெற்றி பெறுவார்கள்? இதயத் துடிப்பை அதிகரிக்கும் இச்செயல்பாட்டைத் தவறவிடாதீர்கள் - இந்த விறுவிறுப்பான மோதலைக் காணவும், இறுதி வெற்றியாளரைக் கண்டறியவும் மாஸ்டர்செஃப் இந்தியா தமிழில் இணைந்திருங்கள்!

 

மாஸ்டர்செஃப் இந்தியா தமிழ் திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 1 மணிக்கு சோனி LIV-இல் கண்டுகளிக்கவும்.

No comments:

Post a Comment