Featured post

கர்நாடக சக்கரவர்த்தி' டாக்டர் சிவராஜ் குமாரின் பெயரிடப்படாத புதிய படத்தின் கேரக்டர் லுக் வெளியீடு

 *'கர்நாடக சக்கரவர்த்தி' டாக்டர் சிவராஜ் குமாரின் பெயரிடப்படாத புதிய படத்தின் கேரக்டர் லுக் வெளியீடு*  தமிழ் ரசிகர்களிடத்திலும் பிரப...

Sunday, 13 July 2025

வீரவணக்கத்தின் புரட்சிப் பாடலை டாக்டர் திருமாவளவன் எம்.பி. வெளியிட்டார்

 வீரவணக்கத்தின் புரட்சிப் பாடலை டாக்டர் திருமாவளவன் எம்.பி. வெளியிட்டார்..... 



அனில் வி.நாகேந்திரன் இயக்கிய வீரவணக்கம்  திரைப்படத்தின் இரண்டாவது பாடலை  விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் டாக்டர் தொல்.  திருமாவளவன் எம்.பி.

சென்னையில் வெளியிட

படத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரித்தேஷ் பெற்றுக்கொண்டார்.

"நுகத்தடியை தோளில் சுமந்த உழைப்பாளிகளே..." என்று தொடங்கும் இந்தப் பாடலை யாசின் நிசார் பாடியுள்ளார். பாடல் வரிகளை நவீன் பாரதி எழுத ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்துள்ளார்.


சாதி அடிப்படையிலான அநீதிகளாலும் உரிமைகள் மறுக்கப்பட்டதாலும் பாதிக்கப்பட்ட கீழ் வகுப்பினரின் போராட்டத்தின் நேரடி பிரதிபலிப்பு இந்தப் பாடல் என்று டாக்டர். தொல். திருமாவளவன் கருத்து தெரிவித்தார்.


'வீரவணக்கம்' திரைப்படம் தமிழ்நாட்டில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படும், மிகப்பெரும் வெற்றி திரைப்படமாக அமையும்  என்றும் அவர் கூறினார்.

இந்தப் பாடலை படத்தின் தயாரிப்பு நிறுவனமான VISARAD CREATIONS யூடியூப் சேனலில் கண்டு களிக்கலாம்.



கடந்த வாரம் வெளியான "தென்றலே மலை தென்றலே.." பாடலை இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். அடுத்தடுத்த பாடல்கள், டிரெய்லர்கள் போன்றவற்றை விஷாரத் கிரியேஷன்ஸ் யூடியூப் சேனலில் காணலாம். 

இந்த நிகழ்வில் இயக்குனர் அனில் வி. நாகேந்திரன்,  ஒளிப்பதிவாளர் டி. கவியரசு, இணை இயக்குநர் கே. ஜி. ராம்குமார், நடிகர் ரித்தேஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொது செயலாளர் வன்னி அரசு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment