Featured post

Varalaxmi Sarathkumar Glows with Grace in Sri Lanka Photoshoot! A Symbol of

 Varalaxmi Sarathkumar Glows with Grace in Sri Lanka Photoshoot!  A Symbol of Strength, Style, and Stellar Talent Actress Varalaxmi Sarathku...

Thursday, 31 July 2025

சமகால அரசியலை பேச வரும் "நாளை நமதே"*

 *சமகால அரசியலை பேச வரும்  "நாளை நமதே"*






ஸ்ரீ துர்கா கிரியேஷன்ஸ் V.ரவிச்சந்திரன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் வெண்பா கதிரேசன் இயக்கத்தில் உருவாகும் நாளை நமதே திரைப்படம்

சம கால அரசியலை வெளிப்படையாக பேசும் விதமாக படமாக்கப்பட்டுள்ளது.


 அறிமுக இயக்குனர் வெண்பா கதிரேசன் இந்தபடத்தை இயக்கியிருக்கிறார்.



தமிழ் திரையுலகில் அரசியல் படங்களுக்கென்று வரவேற்பு உண்டு,  ஜனரஞ்சகமாக எல்லோரும் ரசிக்கும் விதத்தில்  அரசியல்படங்கள் பெரு வெற்றியையும் பெற்றிருக்கின்றன.


நாளை நமதே படம் முழுக்க கிராமத்து பின்னணியில் உருவாக்கப்பட்டிருக்கிறது. 


தமிழக கிராமங்களில் மக்கள் அரசியல்படுத்தப்படவேண்டிய அவசியத்தையும், அதிலும் பெண்கள் அரசியல்படுத்தப்படுவதும் , அரசியல்படுவதும்  காலத்தின் கட்டாயம் . அந்த கருத்தை இந்தப்படம் வலியுருத்துகிறது.


அரசியல் படம் என்றால் எப்போதும் ஆர்ப்பாட்டம், அழுகை என்றில்லாமல்  நகைச்சுவையும், நையாண்டியும் எளிய மனிதர்களின் வாழ்வியலும் மிக அழகாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.



கிராமத்து மனிதர்களின் குரூரமான பக்கங்களும் இன்னும் ஆழமாக பதிந்திருக்கும் பிற்போக்குத்தனங்களையும் இந்தப்படம் கேள்விக்குள்ளாக்குகிறது.


நடிகர்களோடு நிஜ கிராமத்து மனிதர்கள் பலரும் இதில் நடித்திருக்கிறார்கள்.


இத்திரைப்படம் பல உலக சினிமா விழாக்களில் பங்கு பெற்று தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது,  சிவகங்கை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் படமாக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்தில் நடித்தவர்களில் பெரும்பாலோர்  புதுமுகங்களாக இருப்பது படத்திற்கு பெரும் பலம்.


நிஜமான ஒரு கிராமத்து வாழ்வியலை காட்சிப்படுத்தியிருக்கிறார்கள் படக்குழுவினர். விரைவில் திரையில் வெளிவரவிருக்கிறது  நாளை நமதே திரைப்படம்.

No comments:

Post a Comment