Featured post

Hari Hara Veera Mallu Movie Review

Hari Hara Veera Mallu Movie Review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம most expecting telugu படம் Hari Hara Veera Mallu: Part 1 - Sword vs Spirit  ன்...

Thursday, 24 July 2025

Hari Hara Veera Mallu Movie Review

Hari Hara Veera Mallu Movie Review

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம most expecting telugu படம் Hari Hara Veera Mallu: Part 1 - Sword vs Spirit  ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது  Krish Jagarlamudi and A. M. Jyothi Krishna. இந்த படத்துல  Pawan Kalyan , Bobby Deol, Nidhhi Agerwal, Nargis Fakhri, Nora Fatehi அப்புறம் Sathyaraj னு பலர் நடிச்சிருக்காங்க. இது ஒரு period action adventure கதை. 17 ஆம் நூற்றாண்டு ல இந்த கதை நடக்கற மாதிரி காமிச்சிருக்காங்க. முகலாயர்கள் கிட்ட இருந்து kohinoor diamond அ எடுத்துட்டு வரதுக்காக தான் veera mallu போவாரு. இவரோட இந்த journey தான் இந்த படத்தோட கதையை இருக்கு. ஆரம்பத்துல இந்த படத்தோட release தள்ளி போயிட்டே இருந்தது, ஆனா promotions , press events ல pawan kalyan பேசின விதத்துல இருந்து இந்த படத்தோட expectation இன்னும் அதிகமா ஆயிருச்சு னே சொல்லலாம்.



 இந்த படம் இன்னிக்கு release ஆகி theatre ல வெற்றிகரமா ஓடிட்டு இருக்கு.  சோ வாங்க இந்த படத்தோட கதை என்னனு பாப்பபோம். 


இந்த கதை 1650 ல நடந்த மாதிரி காமிச்சிருக்காங்க. hari hara vera mallu வா நடிச்சிருக்காரு pawan kalyan. இவரு கிட்ட தட்ட அந்த ஊர்ல இருக்கற robin hood னே சொல்லலாம். இதுனால இவரு ரொம்ப famous ஆயிடுறாரு, அது மட்டும் கிடையாது kollur ஓட ராஜா  வரைக்கும் இவரை பத்தி தெரியும். ராஜாவை ஏமாத்தி பஞ்சமி அ நடிச்சிருக்க niddhi  agarwal ஓட தப்பிச்சு வந்துடுறாரு. veera mallu ஓட புத்திசாலிதனத்த பாத்து Qutub Shah ஆவா நடிச்சிருக்க Dalip Tahil ஒரு முக்கியமான வேலைய ஒப்படைக்குறாரு. அப்படி என்ன முக்கியமான வேலை னு பாத்தீங்கன்னா kohinoor  diamond அ கொண்டு வர்ரது தான். இந்த வேலைய செய்றத ஒத்துக்கிட்ட veera  mallu  வும் delhi  அ நோக்கி பயணம் பண்ணுறாரு. இந்த kohinoor  diamond முகலாயர்களோட அரசர் ஆனா aurangazeb  கிட்ட தான் இருக்கும். இந்த aurangazeb  அ நடிச்சிருக்கறது bobby deol தான். veera  mallu இங்க வரதுக்கு இன்னொரு காரணமும் இருக்கு. இந்த panchami யாரு? veera எந்த நோக்கத்துக்காக delhi க்கு வராரு? இவருக்கும் aurangazeb க்கும் என்ன சம்பந்தம்? qutab shah எதுக்காக veera மேல நம்பிக்கை வச்சு இந்த வேலைய குடுத்தாரு ன்ற பல கேள்விகளுக்கு இந்த படம் தான் பதில் அ தான் இருக்கு. 


இந்த படத்துக்கு பக்க பலமா இருக்கிறது pawankalyan ஓட acting தான். இவரோட performance ஒரு impact குடுக்கற விதமா இருந்தது. அது மட்டுமில்ல இவரோட action sequences எல்லாமே electrifying அ இருந்தது. இவரோட dialogue delivery, தர்மத்துக்காக சண்டை போடுறது, emotional scenes னு எல்லாமே பக்கவா நடிச்சிருக்காரு னு தான் சொல்லணும். இந்த படத்தோட மிக பெரிய plus point ண அது கண்டிப்பா action sequences தான். அவ்ளோ super அ action stunts அ chereograph பண்ணிருக்காங்க, stunt masters ஆனா Nick Powell, Ram-Laxman, and Peter Hein . படத்தோட first half ல பாத்தீங்கன்னா மொத்தம் மூணு fight sequences இருக்கும். அதெல்லாம் அதிரடியா இருக்கும்னே சொல்லலாம். ஒன்னு மச்சிலிபட்டணத்துல நடக்கும், ரெண்டு charminar fight கடைசியா கொல்லூர் ல நடக்கற குஸ்தி சண்டை. அப்புறம் second half ல முகலாயர்கள் ஆட்சி செய்யற ஒரு ஊர்ல வச்சு ஒரு action block scene வரும் அது இன்னும் அட்டகாசமா இருக்கும். இந்த fight scenes எல்லாமே audience  அ seat ஓட edge ல உட்கார வைக்கிற  மாதிரி தான் இருக்கும்.  


bobby  deol  யும் pawankalyan  யும் face  to face பாத்துக்குற scenes  கம்மியா தான் இருக்கும் . second half க்கு lead குடுத்து படத்தை முடிச்சிருக்காங்க. supporting  actors அ நடிச்சிருக்க  Sathyaraj, Raghu Babu, Sunil, Kabir Duhan Singh, னு எல்லாருமே அவங்க role அ புரிஞ்சுகிட்டு நல்ல perform பண்ணிருக்காங்க. இந்த படத்துல use  பண்ணிருக்க cgi , vfx works எல்லாமே super அ தான் இருந்தது. இந்த கதைக்கு ஏத்த மாதிரி நெறய detailing அ குடுத்து படத்தை ரொம்ப interesting அ கொண்டு வந்திருக்காங்க. இந்த படத்துக்கு ரெண்டு cinematographers இருக்காங்க. Gnana Sekhar VS and Manoj Paramahamsa ஓட cinematography  ரொம்ப colourful ஆவும் attractive ஆவும் இருந்தது. இந்த படத்துக்கு இசை அமைச்சிருக்கறது MM keeravani. இவரோட songs and bgm எல்லாமே super அ இருந்தது. முக்கியமா action sequences க்கு வர bgm எல்லாமே intense அ இருந்தது. praveen kl ஓட editing யும் நல்ல இருந்தது. 


மொத்தத்துல ஒரு நல்ல visual experience தான் இந்த hari hara veera mallu part one.  

கண்டிப்பா இந்த படத்தை உங்க family and friends ஓட சேந்து theatre ல போய்  பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.


No comments:

Post a Comment