Featured post

Draupathi 2 Movie Review

 Draupathi 2 Tamil Movie Review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம draupathi 2 படத்தோட review அ பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது  mohan g...

Thursday, 10 July 2025

சையாரா' படத்தை முதல் நாள் பார்க்க ஆர்வமாக உள்ளேன்"-சந்தீப் ரெட்டி வாங்கா

 *"சையாரா' படத்தை முதல் நாள்  பார்க்க ஆர்வமாக உள்ளேன்"-சந்தீப் ரெட்டி வாங்கா!*




இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா 'சையாரா'  படத்தை முதல் நாள் பார்க்க ஆவலாக உள்ளார் என பதிவிட்டுள்ளார் .யஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரித்து மோஹித் சூரி இயக்கியுள்ள படம் 'சையாரா'. 'அஹான் பாண்டே'  என்பவரை ஹீரோவாக அறிமுகப்படுத்தியுள்ளனர். 'பிக் கேர்ள்ஸ் டோன்ட் க்ரை' என்கிற மிகவும் பாராட்டப்பட்ட தொடரின் மூலம் தனது அற்புதமான நடிப்பால் இதயங்களைக் கொள்ளையடித்த' அனீத் பத்தாவை'  கதாநாயகியாக  தேர்வு செய்துள்ளனர். இந்த வார தொடக்கத்தில் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. மேலும், அனிமல் பட இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா படத்தைப் பார்க்க ஆவலாக இருப்பதாக பதிவிட்டுள்ளார். 


சந்தீப் ரெட்டி வங்கா சையாரா பட ட்ரெய்லரைப் பகிர்ந்துள்ளார். பிறகு X தளத்தில் பதிவு செய்துள்ளார். அதன்படி , "ஒரு இதயப்பூர்வமான காதல் கதையை சாட்சியாகக் கொண்டுள்ளது சையாரா படம் . முதல் நாளில் இந்த படத்தை காண ஆர்வமாக காத்திருக்கிறேன். அறிமுக நடிகர்களுக்கு நல்வாழ்த்துக்கள் . இது முற்றிலும் மோஹித் சூரியின் மேஜிக் " என்று பதிவிட்டுள்ளார். 


இந்தப் பதிவிற்கு மோஹித் சூரி பதிலாக, "மிக்க நன்றி ! என்று பதிலளித்துள்ளார். 


அஹானும், அனீத்தும் அவரது சமூக வலைதள பக்கத்தில் சந்தீப் ரெட்டி வாங்காவுக்கு நன்றி தெரிவித்தனர்."உங்களிடமிருந்து பெற்ற வாழ்த்து மிகவும் அர்த்தம் கொண்டது சார், மேலும் இதற்கு இரட்டிப்பு நன்றி என அஹான் பதிலளித்துள்ளார் . "இது மிகவும் அற்புதமானது! சந்தீப் சார் நன்றி.. எங்கள் பணி உங்களை அடைந்தது என்பது மிகவும் அர்த்தம் கொண்டது," என்று அனீத் பதிலளித்துள்ளார். 

சையாரா படத்தை யஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அக்ஷய் விதானி தயாரித்துள்ளார். இத்திரைப்படம் வருகின்ற ஜூலை 18ம் தேதியன்று அன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியாகிறது .

No comments:

Post a Comment