*கர்நாடக சக்கரவர்த்தி சிவராஜ்குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு, ‘பெத்தி’ படத்திலிருந்து அவரது அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது!!*
குளோபல் ஸ்டார் ராம் சரண், நடிப்பில், கிராமிய பாணியில் உருவாகும் ஸ்போர்ட்ஸ் ஆக்சன் திரைப்படம் ‘பெத்தி’ . பர்ஸ்ட் லுக்கிலேயே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இப்படத்தினை, இயக்குநர் புஜ்ஜி பாபு சனா இயக்கியுள்ளார். இந்தப் படத்தினை, வெங்கட சதீஷ் கிலாருவின் விருத்தி சினிமாஸ் தயாரிக்க, முன்னணி பேனர்களான மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் வழங்குகிறார்கள்.
இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவரும் கர்நாடக சக்கரவர்த்தி சிவராஜ்குமார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, இன்று அவரது காதாப்பத்திரத்தை வெளிப்படுத்தும் ஃபர்ஸ்ட் லுக்கை, படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். கம்பீரமான பார்வை, கன்னத்தில் திருத்தப்பட்ட மீசை மற்றும் உருக்கமான தோற்றத்துடன், 'கௌர்நாயுடு' எனும் வீரமிகுந்த கதாபாத்திரத்தில் அவர் மிரட்டும் வகையில், ஃபர்ஸ்ட் லுக் அசத்தலாக அமைந்துள்ளது.
இந்தப் படத்தில் ஜான்வி கபூர் கதாநாயகியாகவும், ஜகபதி பாபு மற்றும் திவ்யேந்து சர்மா ஆகியோர் முக்கிய துணை வேடங்களிலும் நடிக்கின்றனர்.
பிரபல ஒளிப்பதிவாளர் ஆர். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார், ஆஸ்கார் விருது பெற்ற மேஸ்ட்ரோ ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். தேசிய விருது பெற்ற எடிட்டர் நவீன் நூலி எடிட்டிங் செய்கிறார்.
ராம் சரணின் பிறந்தநாள் கொண்டாட்டமாக , மார்ச் 27, 2026 அன்று "பெத்தி" படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர். ஃபர்ஸ்ட் லுக், வித்தியாசமான ராம்சரண் லுக், சிவராஜ்குமார் லுக் என, "பெத்தி" படம் பற்றிய எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
நடிகர்கள்: குளோபல் ஸ்டார் ராம் சரண், ஜான்வி கபூர், சிவ ராஜ்குமார், ஜெகபதி பாபு, திவ்யேந்து சர்மா
தொழில்நுட்பக் குழு:
எழுத்து, இயக்கம் : புஜ்ஜி பாபு சனா
வழங்குபவர்கள் : மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ்
தயாரிப்பு நிறுவனம் : விருத்தி சினிமாஸ்
தயாரிப்பாளர் : வெங்கட சதீஷ் கிலாரு
இசையமைப்பாளர் : AR ரஹ்மான்
ஒளிப்பதிவு : ஆர் ரத்னவேலு
தயாரிப்பு வடிவமைப்பு : அவினாஷ் கொல்லா
எடிட்டர் : நவின் நூலி
நிர்வாக தயாரிப்பாளர் : V. Y.பிரவீன் குமார்
மார்க்கெட்டிங்க் : ஃபர்ஸ்ட் ஷோ
மக்கள் தொடர்பு : யுவராஜ்
No comments:
Post a Comment