Featured post

ParAsakthi Movie Review

ParAsakthi Tamil Movie Review  *ParAsakthi Movie Rating: 4.5//5* ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம parasakthi படத்தோட review அ தான் பாக்க போறோம். இ...

Saturday, 10 January 2026

ParAsakthi Movie Review

ParAsakthi Tamil Movie Review 

*ParAsakthi Movie Rating: 4.5//5*

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம parasakthi படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது sudha kongara . இந்த படத்துல sivakarthikeyan, sreeleela, jayam ravi , atharva  னு பலர் நடிச்சருக்காங்க. ரொம்ப நாலா நம்ம காத்துகிட்டு இருந்த படம் இன்னிக்கு release  ஆயிருக்கு. சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம்.



ஒரு language அ மக்களுக்கு அரசாங்கம் திணிக்கும்போது மக்கள் எப்படி கஷ்டப்படுறாங்க. அவங்களோட வாழக்கை எப்படி பாதிக்கப்படுது ன்றது தான் parasakthi . இந்த படத்தோட 1960 ல நடக்கற மாதிரி காமிச்சிருக்காங்க. எடுத்த ஒடனே கதைக்குள்ள போயிடுறாங்க. hindi திணிப்பு க்கு எதிரா செயல் படுறாங்க புறநானுறு ன்ற ஒரு gang . இதுல தான் sivakarthikeyan இருக்காரு. போராட்டத்துக்காக ஒரு train யா எரிச்சுடுறாரு sivakarthikeyan யும் அவராக team மும். இப்போ இந்த கூட்டத்தை பிடிக்கணும் ட்றதுக்காக ravi mohan தீவிரமா இருக்காரு. இப்போ இந்த train accident ல sivakarthikeyan ஓட friend இறந்து போய்டுறாரு. அதுனால இனிமே இந்த மாதிரி வன்முறைல ஈடுபடக்கூடாது னு முடிவு எடுத்து இந்த team அ விட்டு வெளில வந்துடுறாரு. ஆனா sivakarthikeyan ஓட தம்பிய நடிச்சிருக்க adharva இந்த கூட்டத்துல சேந்துடுறாரு. இப்போ sivakarthikeyan  hindi படிச்சு delhi ல வேலைக்கு போகலாம் னு நினைக்குறாரு. 


hindi படிச்சா தான் வேலை கிடைக்கும் னு நிலைமை வருது, அதுனால sivakarthikeyan  க்கு முன்னாடியே ஒரு பையன் இறந்து போயிடுறேன். sivakarthikeyan க்கும் வேலை கிடைக்காம போயிடுது. அதுனால மறுபடியும் புறநாநூறு ல சேருறாரு. இதுக்கு அப்புறம் என்ன ஆச்சு ன்றது தான் படத்தோட மீதி கதையை இருக்கு. 


படத்தோட first half னு பாக்கும்போது sivakarthikeyan அப்புறம் sreeleela ஓட romantic portions எல்லாம் நல்ல இருந்தது. அதே மாதிரி hindi language க்கு எதிரா நடக்கற போராட்ட scenes எல்லாம் ரொம்ப interesting அ கொண்டு போயிருக்காங்க. படத்தோட second half கொஞ்சம் slow போனாலும் மக்களுக்கு சொல்ல வர விஷயத்தை பக்காவா சொல்லிட்டாங்க. அதாவுது ஹிந்தி திணிப்பு க்கு எல்லாரும் எதிரா இருக்காங்களே தவிர hindi மொழி க்கு கிடையாது. இதை ரொம்ப தெளிவா இந்த படத்துல சொல்லிருக்காங்க. அப்புறம் dialogues , art direction , actors போட்ருக்க costumes னு எல்லாமே super அ இருந்தது. 

actors ஓட performance னு பாக்கும்போது sivakarthikeyan chezhiyan  அ ஒரு wonderful ஆனா performance அ குடுத்திருக்காங்க. மக்களுக்கு ஒரு impact அ குடுக்கற மாதிரி இவரோட character அமைச்சிருக்கு. என்னதான் போராட்டத்தால உயிர் போகுது னு நினைச்சு கைவிட்டாலும் கடைசில இந்த நாட்டுல எது கிடைக்கணும் நாலும் போராடி தான் ஆகணும் னு எடுக்கற எல்லா முடிவும் அருமையா இருந்தது.  ravimohan எப்பவும் போல அவரோட style ல அசத்திட்டு  போயிருக்காரு னு தான் சொல்லணும். ஒரு villain அ நல்ல நடிச்சிருக்காரு. ஒரு officer அ அரசாங்கத்துக்கு மட்டும் தான் support பண்ணுறாரு மக்கள் இறந்து போனாலும் பரவாயில்லை நம்ம நினைச்சது தான் நடக்கணும் னு நினைக்குறாரு. adharva தான் இந்த கதைக்கு முக்கியமான character ல நடிச்சிருக்காரு. இவரோட performance யும் நல்ல இருந்தது. sreeleela ஓட acting யும் நல்ல இருந்தது. இவங்களோட character க்கு இன்னும் detail குடுத்திருந்த இன்னும் நல்ல இருந்திருக்கும். படத்துல நடிச்சிருக்க மத்த supporting  actors  யும் அவங்களோட role  அ புரிஞ்சுகிட்டு நல்ல perform பண்ணிருக்காரு. rana dagubathi cameo  role ல நடிச்சிருக்காரு. 


படத்தோட technical aspects  னு பாக்கும்போது gv prakash ஓட music and  songs எல்லாமே super அ இருந்தது. இது ஒரு period drama movie இதுக்கு ஏத்த மாதிரி bgm அ பக்காவா set பண்ணிருக்காரு. Ravi K. Chandran ஓட  cinematography யும் நல்ல இருந்தது. முக்கியமா visuals எல்லா பக்காவா குடுத்திருக்காங்க. sathish surya ஓட editing யும் crisp அ இருந்தது. 

மொத்தத்துல ஒரு நல்ல கதைக்களம் தான் இது. சோ miss பண்ணாம இந்த படத்தை theatre ல போய் பாருங்க.

No comments:

Post a Comment