Featured post

When love travelled through letters and lived on cassettes

 *When love travelled through letters and lived on cassettes* _Habeebi to Premiere on 25th September on Sony LIV_ Before messages to loved o...

Wednesday, 20 May 2026

கங்கணம்' பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

 *'கங்கணம்' பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு* 






கல்யாணி இ என்டர்பிரைஸ் சார்பில் கல்யாணி கே மற்றும் சிரஞ்சன் கே.ஜி. தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கங்கணம்’. அ.இசையரசன் இதன் கதை எழுதி இயக்கியுள்ளார். தேசிய நாடகப்ப பயற்சிப்பள்ளி மற்றும்  தென்னகப் பண்பாட்டு மையம் பயிற்சி பெற்ற இவர், ‘என் கண்ணே’ என்கிற குறும்படத்தை இயக்கி ஐந்து விருதுகளையும் பெற்றவர்.


இப்படத்தில் கதாநாயகனாக கூத்துப்பட்டறை சௌந்தர் நடிக்க, கதாநாயகிகளாக அஸ்வினி சந்திரசேகர், பிராணா ஆகியோர் நடிக்கின்றனர்.. முக்கிய வேடத்தில் பருத்திவீரன் சரவணன் நடிக்கிறார். பான் இந்தியா நடிகர் சம்பத்ராம் வில்லனாக நடித்துள்ளார். இவர்கள் தவிர  விஜய் டிவி ராமர், சேதுபதி, ஜெயச்சந்திரன், கயல் மணி, KM..பாரி வள்ளல், ராட்சசன் யாசர், அர்ச்சனா மாரியப்பன், ஸ்ரீ மகேஷ் மற்றும் சிரஞ்சன் கே.ஜி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.


இப்படத்தின் பாடல்களை யுகபாரதி எழுத, செல்வா இசையமைத்துள்ளார். பின்னணி இசையை தமீம் அன்சாரி அமைத்துள்ளார். ஒளிப்பதிவை G.A.சிவசுந்தர் கவனிக்க, படத்தொகுப்பை ஜோ.ஜெயபாலன் மேற்கொண்டுள்ளார். நடனத்தை தினா மற்றும் ஜாய் மதி கவனித்துள்ளனர்.

.

படம் குறித்து இயக்குநர் இசையரசன் கூறும்போது, “தன் குடும்பத்தில் வில்லனால் ஏற்பட்ட கொடூரத்திற்காக கதாநாயகனும்,தனக்கு வில்லனால் ஏற்பட்ட உச்சகட்ட அவமானத்திற்காக சரவணனும், தன் மக்களுக்கு நிகழும் அடக்குமுறைக்கும் வன்கொடுமைக்காகவும் தலித் இளைஞர்கள் ஒரு குழுவாகவும். மூன்று துருவங்களாக பழி தீர்க்க முயற்சிப்பதை சமூக சிந்தனையோடு உருவாக்கப்பட்டுள்ளது” என்றார்.. 


இதன் படப்பிடிப்பு மேலூர், தேனி, அதிராம்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் சென்னை ஆகிய இடங்களில் கிட்டத்தட்ட 56 நாட்கள் நடைபெற்றுள்ளது. இப்படத்தில் நாடக கலைஞர்கள் பூமி ராஜன், பந்தா பசுபதி ஆகியோரை பயன்படுத்தியுள்ளோம்.. விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகும்” என்றார்.


தற்போது ‘கங்கணம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு வெளியிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இயக்குநர் அமீர், நடிகர் சத்யராஜ், நடிகை ரோகிணி மற்றும் தஞ்சாவூர் மகாராஜா ரெடிமேட்ஸ் உரிமையாளர் டாக்டர் S ஆசிப் அலி ஆகியோர் அடுத்தடுத்து ‘கங்கணம்’ படத்தின் போஸ்டர்களை வெளியிட இருக்கின்றனர்.

.

*நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்*


*நடிகர்கள்* : கூத்துப்பட்டறை சௌந்தர், அஸ்வினி சந்திரசேகர், பிராணா, பருத்திவீரன் சரவணன், சம்பத் ராம், விஜய் டிவி ராமர், சேதுபதி, ஜெயச்சந்திரன், கயல் மணி, K.M பாரி வள்ளல், ராட்சசன் யாசர், அர்ச்சனா மாரியப்பன், ஸ்ரீ மகேஷ், சிரஞ்சன் கே.ஜி.


*தொழில்நுட்ப கலைஞர்கள்*


இயக்குநர் : அ.இசையரசன்

ஒளிப்பதிவு ;: G.A சிவசுந்தர்

இசை : செல்வா

இசை (பின்னணி ): தமீம் அன்சாரி

பாடல்கள் : யுகபாரதி

படத்தொகுப்பு : ஜோ.ஜெயபாலன்

தயாரிப்பு மேலாளர் : ஏ.ஆர். கார்த்திகேயன்

பாடகர்கள் : தெருக்குரல் அறிவு, ஸ்ரீ நிஷா, வி.எம்.மகாலிங்கம், கயல் கோபு

நடனம் : தினா, ஜாய் மதி

கலை இயக்குனர் : கல்லை தேவா

சண்டைக்காட்சி : மிரட்டல் செல்வா

ஒப்பனை ; இதயா ஜேம்ஸ் 

ஸ்டில்ஸ் ; ரங்காராவ் 

மக்கள் தொடர்பு : A. ஜான்

No comments:

Post a Comment