Featured post

உலகின் தலைசிறந்த கேன்ஸ் திரைவிழாவின் அதிகாரபூர்வ போட்டியில்

 *உலகின் தலைசிறந்த கேன்ஸ் திரைவிழாவின் அதிகாரபூர்வ போட்டியில் பங்கு பெற்ற தமிழ்ப்படம் “மாண்புமிகு பறை”   *“மாண்புமிகு பறை”  திரைப்படம் கேன்ஸ...

Tuesday, 5 May 2020

தேசிய அளவிலான திறனாய்வு


தேசிய அளவிலான திறனாய்வு தேர்வு(NTSE 2019)
மாநில  அளவில் முதலிடம்
ஸ்ரீ சைதன்யா பள்ளி மாணவர் சாதனை

        தேசிய அளவிலான திறனாய்வு (NTSE) தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் தமிழ்நாடு அளவில் ஸ்ரீ சைதன்யா பள்ளி மாணவர் இரா.நி ஷோக்  மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார் .அவர் 200-க்கு 179 மதிப்பெண் பெற்று சாதனை படைத்து உள்ளார். மேலும் 47 மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.  சாதனை படைத்த மாணவர்களை பள்ளி தாளாளர் சீமா போபன., ஸ்ரீ சைதன்யா பள்ளிகளின் தமிழ்நாடு பொறுப்பாளர் திரு ஹரிபாபு ,  பள்ளி முதல்வர், துணை மேலாளர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.


     இந்த வெற்றி குறித்து மாணவர் நிஷோக் கூறுகையில் ,பெற்றோர்கள், பள்ளி முதல்வர் ஆசிரியர்கள் கொடுத்த ஊக்கமும் ஆலோசனையும் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. மேலும் பள்ளியின் சிறப்பு  பயிற்சி வகுப்புகள் மற்றும் பயிற்சி தேர்வுகள்    நான் மாநில அளவில் முதல் மதிப்பெண் எடுப்பதற்கு காரணம் என்றார்.

No comments:

Post a Comment