Featured post

Sony Entertainment India releases trailer of action-thriller, Sisu: Road to Revenge; releases on

 *Sony Entertainment India releases trailer of action-thriller, Sisu: Road to Revenge; releases on 21st November, 2025 in English, Hindi, Ta...

Thursday, 17 September 2020

EMBARGOED UNTIL 15th September: 12 NOON ON 15th SEPTEMBER 2020

EMBARGOED UNTIL 15th September: 12 NOON ON 15th SEPTEMBER 2020
டைம் என்ன பாஸ் - தமிழ் சிட்காம் டிரெய்லரை அமேசான் ப்ரைம் வீடியோ வெளியிடுகிறது

கவிதாலயா புரொடக்ஷன்ஸ் பேனரில் உருவாக்கப்பட்ட டைம் என்ன பாஸில் ரோபோ சங்கர், பாரத் நிவாஸ், பிரியா பவானிஷங்கர், அலெக்சாண்டர் பாபு, சஞ்சனா சரதி, மாமதி சாரி மற்றும் கருணாகரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்தியாவிலும் 200 நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் உள்ள ப்ரைம்  உறுப்பினர்கள்  செப்டம்பர்18-ஆம் தேதி பிரத்தியேகமாக  அமேசான் ப்ரைம் வீடியோவில் டைம் என்ன பாஸின் 10-பகுதிகளையும்  ஸ்ட்ரீம் செய்யலாம்

அமேசான் ப்ரைமின் சமீபத்திய மற்றும் பிரத்யேக திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்-அப் காமெடிகள், அமேசான் ஒரிஜினல்ஸ், அமேசான் ப்ரைம் மியூசிக்கில் விளம்பரமில்லா இசை, இந்தியா முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புக்களின் விரைவான டெலிவரி, டாப் டீல்களை உடனடியாக பெறுதல், பிரைம் ரீடிங்கில் வரம்பற்ற வாசிப்பு மற்றும் பிரைம் கேமிங் கண்டெண்ட் அனைத்தும் ஒரு மாதத்திற்கு ரூ.129 ரூபாயில் பெறலாம்.


மும்பை, இந்தியா, 15 செப்டம்பர் 2020 -  ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் சிட்காம் டைம் என்ன பாஸின் டிரெய்லரை  அமேசான் பிரத்யேகமாக தனது ஸ்டீரிமிங் தளத்தில் வெளியிட்டது. கவிதாலயா புரொடக்க்ஷன்ஸ் பேனரில் உருவான, இந்த 10 பகுதியும் உங்களை சிரிப்பு கடலில் ஆழ்த்த வருகிறது.  வெவ்வேறு காலக்கட்டத்தை சேர்ந்த நான்கு பேருடன் தனது அறையை பகிர்ந்து கொள்ளும் ஐ.டி துறையில் பணியாற்றும் நபரைச் சுற்றி கதை நகர்கிறது.
இந்த நிகழ்ச்சியில் ரோபோ ஷங்கர், பாரத் நிவாஸ், பிரியா பவானிஷங்கர், அலெக்சாண்டர் பாபு, சஞ்சனா சரதி, மாமதி சாரி மற்றும் கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்தியாவிலும் 200 நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் உள்ள ப்ரைம் உறுப்பினர்கள் செப்டம்பர் 18 முதல் அதிரடி நகைச்சுவையை ஸ்ட்ரீம் செய்யலாம்.

டைம் என்ன பாஸின் கதைக்களம் புதிது மற்றும் டைம்-டிராவலை மையமாகக் கொண்டு நகைச்சுவை அமைந்துள்ளது. வாழ்க்கையின் இலகுவான பக்கத்தை  நிறைய மகிழ்ச்சி தரும் தருணங்கள் மற்றும் நகைச்சுவையுடன் எடுத்துக்காட்டுகிறது.
இந்த புதிய ப்ராஜெக்டை பற்றி கவிதாலயாவின் எம்.டி புஷ்ப கந்தசாமி கூறும்போது, "இந்த டைம் என்ன பாஸின் கதைக்கரு புதுமையானது, பார்வையாளர்களை சிரிக்க வைத்துக் கொண்டே, ஒரு புத்துணர்ச்சியூட்டும் காலத்தை கடந்து செல்லும் பயணத்திற்கு அழைத்து செல்லும். ஏ.ஆர்.ரஹ்மானுடனான ஹார்மோனிக்குப் பிறகு அமேசான் ப்ரைம் வீடியோவுக்காக மீண்டும் இணைந்திருப்பது  மிகவும் மகிழ்ச்சியை தருகிறது-- டைம் என்ன பாஸ் தெற்கில் உள்ள பார்வையாளர்களையும் மகிழ்விக்கும் என்று நம்புகிறோம். இந்த கஷ்டமான காலக்கட்டத்தில் மக்களை மனதை கொஞ்சம் இலகுவாக்க திரைப்படத்துறையில் முன்னணியில் உள்ள கலைஞர்களை அழைத்து வந்துள்ளோம். இதை நாங்கள் ரசித்து உருவாக்கியது போலவே தமிழ் பார்வையாளர்களும் இதை அனுபவித்து பார்ப்பார்கள் என்று நம்புகிறேன் என்றார்."
டைம் என்ன பாஸ் ப்ரைம் வீடியோ மற்றும் கவிதாலயா புரொடக்ஷன்ஸ் இடையேயான இரண்டாவது இணைவு. ஸ்டுடியோஸ் மெய்டன் டிஜிட்டலின்- 'ஹார்மோனி வித் ஏ.ஆர்.ரஹ்மான்',  ப்ரைம் வீடியோவில் பிரத்தியேகமாக 2018 -ல் வெளியிடப்பட்டது. இந்தத் தொடர் பார்வையாளர்களை ரஹ்மானுடன் ஒன்றாக பயணிக்க வைத்தது, இதில் அவர் நான்கு கலைஞர்களுடன் சேர்ந்து இந்திய இசை பாரம்பரியத்தின் வேரை ஆராய்ந்தார்.

Watch the trailer here:
டிரெய்லரை இங்கே பாருங்கள்:


கதை சுருக்கம்:
டைம் என்னா பாஸ் என்பது, தற்செயலாக சென்னையில் வந்து மாட்டிக் கொள்ளும் வெவ்வேறு காலக்கட்டத்தை சேர்ந்த நான்கு பேருடன் தனது அப்பார்ட்மெண்டை பகிர்ந்து கொள்ளும் ஒரு சராசரி ஐ.டி. பையன்  அன்றாடம் தன் வாழ்வில் எதிர்கொள்ளும் சாகசங்களைக் எடுத்துக்காட்டும் தமிழ் சிட்காம் காமெடி ஆகும்.

ப்ரைம் வீடியோவின் பட்டியலில் ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டின் ஆயிரக்கணக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களுடன் டைம் என்ன பாஸும் சேருகிறது. அமேசான் ஒரிஜினல் தொடர்களான பந்திஷ் பண்டிட்ஸ், ப்ரீத்: இன் டு த ஷேடோஸ், பாட்டல் லோக், ஃபோர் மோர் ஷாட்ஸ் ப்ளீஸ், தி ஃபேமிலி மேன், இன்சைட் எட்ஜ், மற்றும் மேட் இன் ஹெவன் மற்றும் விருது பெற்ற மற்றும் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட உலகளாவிய அமேசான் ஒரிஜினல் தொடர்களான டாம் க்ளான்சியின் ஜாக் ரியான், தி பாய்ஸ், ஹண்டர்ஸ், பிளேபாக் மற்றும் தி மார்வெலஸ் மிஸஸ் மைசெல் போன்ற போன்றவற்றுடன் இந்திய படங்களான குலாபோ சிட்டாபோ, சகுந்தலா தேவி, பொன்மகள் வந்தாள், லா, பிரஞ்சு பிரியாணி, சுஃபியும் சுஜாதாவும் மற்றும் பென்குயின் ஆகியவையும் அடங்கும். அமேசான் ப்ரைம் உறுப்பினர்கள் கூடுதலாக இதற்கு செலவழிக்க தேவையில்லை. இந்த சேவையில் ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி மற்றும் பெங்காலி மொழிகளிலும் உள்ளன.
ஸ்மார்ட் டிவிகள், மொபைல் சாதனங்கள், ஃபயர் டிவி, ஃபயர் டிவி ஸ்டிக், ஃபயர் டேப்லெட்டுகள், ஆப்பிள் டிவி, ஏர்டெல், வோடபோன் போன்றவற்றிற்கான ப்ரைம் வீடியோ ஆப்பில் ப்ரைம் உறுப்பினர்கள் டை என்ன பாஸை எங்கும், எந்த நேரத்திலும் பார்க்க முடியும். ப்ரைம் உறுப்பினர்கள் தங்கள் மொபைல் சாதனங்கள் மற்றும் டேப்லெட்களில் ப்ரைம் வீடியோ ஆப்-பில் அத்தியாயங்களைப் பதிவிறக்கம் செய்து  கூடுதல் கட்டணமின்றி ஆஃப்லைனில் எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம்.

ப்ரைம் வீடியோ இந்தியாவில் ப்ரைம் உறுப்பினருக்கு ஆண்டுக்கு ரூ.999 அல்லது மாதத்திற்கு ரூ.129-க்கு கிடைக்கிறது, புதிய வாடிக்கையாளர்கள் www.amazon.in/prime-ல் மேலும் தெரிந்துகொண்டு 30 நாள் இலவச சேவைக்கு சப்ஸ்கிரைப் செய்யலாம்.

No comments:

Post a Comment