Featured post

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்

 தமிழ்நாடு  இயல்  இசை  நாடக  மன்றம்  பொங்கல்  கலைவிழா    கலைச்  சங்கமம்  தமிழக அரசால்  1955 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்ட்ட தமிழ்நாடு சங்கீத நாடக...

Wednesday, 10 February 2021

தூங்காமல் விழித்து இருந்து "லைவ்

 தூங்காமல் விழித்து இருந்து "லைவ் டெலீகாஸ்ட்" வெப் தொடரில் பணி புரிந்த காஜல் அகர்வால்!!!


டிஸ்னி ஹாட் ஸ்டாரில் விரைவில் வெளி வர இருக்கும் "லைவ் டெலிகாஸ்ட்" தொடர் பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க , காஜல் அகர்வால் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புடன் வருகிற 12 ஆம் தேதி உலகெங்கும் ஒளிபரப்பு ஆக உள்ளது.  

மாந்த்ரீக சக்திகள் நிறைந்த , ஒரு ஆள் அரவமற்ற வீட்டில் ஒரு தொலைக் தொடர் ஒன்றை படமாக்கப் படும் போது ஏற்படும் வினோத அனுபவங்களின் தொகுப்பே "லைவ் டெலிகாஸ்ட்".




தொடரில் நடித்த அனுபவத்தை பகிர்ந்துக் கொண்ட காஜல் அகர்வால் "நாங்கள் படப்பிடிப்புக்கு தேர்ந்து எடுத்த இடம் மிக மிக பொருத்தமானது.

இயக்குனர் வெங்கட் பிரபுவின் தோழர் ஒருவருடைய வீடு அது.மலையின் உச்சியில் இருக்கும் அந்த வீடு அங்கு தனித்து இருந்த வீடாகும். படப்பிடிப்பு பெரும்பாலும் அங்கேயே தான் நடந்தது. படப்பிடிப்புக்கு பின்னரும் அந்த இடம்  தந்த அச்சம் காரணமாக என்னால் தூங்க கூட முடியவில்லை. படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் கூட அந்த வீட்டிலேயே நான் இருப்பதாக ஒரு பிரமை என்னை அச்சுறுத்திக் கொண்டே இருந்தது. இன்று நினைத்தாலும் என் குலை நடுங்குகிறது. தொடரை பார்க்கும் ரசிகர்களுக்கும் அந்த உணர்வு உண்டாகும்" என்று திகில் மாறா உணர்வுடன் கூறினார். 


வெங்கட் பிரபு இயக்கத்தில் காஜல் அகர்வாலுடன் வைபவ் ரெட்டி, "கயல்" ஆனந்தி, ப்ரியங்கா, செல்வா, டேனியல் போப், சுப்பு பஞ்சு அருணாசலம், மற்றும் பலர் நடித்து இருக்கும் இந்த தொடர்   ஏகத்துக்கும் எதிர்பார்ப்பை எகிற வைத்து உள்ளது 

வருகிற  12 ஆம் தேதி"லைவ் டெலிகாஸ்ட்" டிஸ்னி ஹாட் ஸ்டார் விஐபி  மற்றும் டிஸ்னி +ஹாட் ஸ்டார் பிரீமியம் ஆகிவற்றில் ஒளிபரப்பு ஆக உள்ளது.

No comments:

Post a Comment