Featured post

Prompt Diagnosis Ends An Eight-Year-Old Girl’s Medical Mystery

Prompt Diagnosis Ends An Eight-Year-Old Girl’s Medical Mystery Kauvery Hospital, Radial Road, performed a one-of-its-kind Bilateral Intraves...

Tuesday, 23 February 2021

பெரும் வெற்றி க்கு காத்திருக்கும் கால்ஸ் படத்தின் பாடல் இரண்டே

 பெரும் வெற்றி க்கு காத்திருக்கும் கால்ஸ் படத்தின் பாடல் இரண்டே தினங்களில்  1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை


வி.ஜே சித்ரா  அவர் இறப்பிற்கு முன் நடித்த  படம் கால்ஸ் இப்படத்தின் ட்ரெய்லர்கள் ஏற்கனவே  வெளியாகியிருந்தது..  வெளிவந்த இரண்டு நாட்களில் இந்த ட்ரெய்லர் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது  அப்படத்தின் "காலங்கள் கரைகிறதே" எனும் பாடல் ஒன்றும் வெளியாகி  உள்ளது.  அதுவும் வெளிவந்த  இரண்டே தினங்களில் தற்போது 1 மில்லியன்  பார்வையாளர்களை கடந்து ட்ரெண்டிங் #4 ல் உள்ளது.  மக்கள் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தொடங்கி தற்போது வெளியிட்ட பாடல் வரை மகத்தான ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இப்படம் வரும் 26 ஆம் தேதியன்று  திரைக்கு வர தயாராகவுள்ளது.  இப்படக்குழு மக்களிடம் திரையரங்குகளில் சென்று பார்க்க வேண்டும் என்றும் மறைந்த நடிகை சித்ராவிற்காகவும் இப்படத்தை பார்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். 



மேலும் இப்படத்தின் இயக்குனர் திரு. சபரிஷ் அவர்கள் பேசுகையில் வி. ஜே சித்ராவின் மரணத்திற்கு பிறகும் மக்கள் அவர் மீதும் அவர் படத்தின் மீதும் அளவற்ற அன்பினை பொழிந்துள்ளனர். அனைவரும் படத்தை திரையரங்குகளில் சென்று பார்க்க வேண்டும் மற்றும் இப்படத்திற்காக உழைத்த நடிகர்கள், தொழில் நுட்ப உதவியாளர்கள், தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி என அவர் குறிப்பிட்டுள்ளார்

No comments:

Post a Comment