Featured post

யோகி பாபு அப்படி செய்யும் நடிகர் இல்லை " ஸ்கூல் " பட இயக்குனர்

 யோகி பாபு அப்படி செய்யும் நடிகர் இல்லை " ஸ்கூல் " பட இயக்குனர் R. K. வித்யாதரன் Quantum Film Factory என்ற பட நிறுவனம் சார்பில் R....

Wednesday, 24 February 2021

பிரபலங்கள் கலந்து கொண்ட சினிமா மக்கள் தொடர்பாளர்

 *பிரபலங்கள் கலந்து கொண்ட சினிமா மக்கள் தொடர்பாளர் MP ஆனந்த் திருமணம்..!*


விஜயகாந்த், கேப்டன் டிவி மற்றும் கேப்டன் சினி கிரேஷன்ஸ் ஆகியவைகளுக்கு மக்கள் தொடர்பாளராக இருந்து வருவபர் எம்.பி.ஆனந்த். இவரின் திருமணம் இன்று காலை சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்றது. 































தேமுதிக கழக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் மற்றும் அவரின் மனைவி தலைமையில் எம்.பி.ஆனந்த் - நித்யா அவர்களின் திருமணம் நடைபெற்றது. எல்.கே.சுதீஷ் தாலி எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார். 


நேற்று தேமுதிக கழக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வந்திருந்து மணமக்களை வாழ்த்தினார்.  தேமுதிககட்சியை சேர்ந்த பலரும் திருமணத்தில் பங்கேற்றனர்.


மேலும் நடிகர்கள் பிக் பாஸ் புகழ் ஆரி, செந்தில், சௌந்தர்ராஜா, 'லொள்ளு சபா' ஜீவா, எம் எஸ் பாஸ்கர்,சம்பத் ராம், சண்முக பாண்டியன், ரமேஷ் கண்ணா, 'விஜய் டிவி' புகழ் அமுதவாணன், ஹரிஷ் இயக்குனர்கள் பாக்யராஜ் , ஆர் வி உதயகுமார், விக்ரமன், சுப்ரமணிய சிவா, சரவணன், பார்த்திபன் தேசிங்கு, தயாரிப்பாளர் கே ஆர் பிலிம்ஸ் சரவணன் மற்றும் ஜாகுவார் தங்கம், சினிமா மக்கள் தொடர்பாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

No comments:

Post a Comment