Featured post

A Lifelong Love for Cinema: Yuva Pushpakar Set to Return to the Silver Screen

 A Lifelong Love for Cinema: Yuva Pushpakar Set to Return to the Silver Screen Chennai: After establishing himself as a successful entrepren...

Saturday, 27 February 2021

மேல்அயனம்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளியின்

 மேல்அயனம்பாக்கம் வேலம்மாள்  வித்யாலயா பள்ளியின் சாதனைச் சதுரங்க வீரருக்குப் பாராட்டு விழா.


 மேல்அயனம்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவன் D.குகேஷ்


  சதுரங்க வரலாற்றில் இரண்டாவது இளம்வயது


 கிராண்ட் மாஸ்டராக பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். அவரது   அசாத்திய திறமை அவரை இந்த உச்சத்திற்கு உயர்த்தியுள்ளது. பன்னிரெண்டாவது வயதில் அவர் செய்த  இந்த மகத்தான சாதனையை அங்கீகரித்த  நமது மாண்புமிகு முதலமைச்சர் திரு எடப்பாடி கே .பழனிசாமி அவர்கள்  அண்மையில்


தலைமைச் செயலகத்தில்
5 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கி கவுரவித்தார். பல கிராண்ட்
மாஸ்டர்களை உருவாக்கியுள்ள வேலம்மாள் கல்விக் குழுமத்தின் சாதனைகளில் இது மற்றுமொரு மைல்கல்லாகும்.


மாணவரின்  இந்த வியப்பிற்குரிய சாதனையைப் புகழ்ந்துரைத்த பள்ளி நிர்வாகம் அவரை வாழ்த்துகிறது மேலும்
எதிர்காலத்தில் பல விருதுகளைப் பெறும் வகையில் அவரை
ஊக்குவித்தது.

No comments:

Post a Comment