Featured post

Shanthi Talkies Announces “Production No. 4” Starring Finally Bhaarath & Saanve Megghana

 *Shanthi Talkies Announces “Production No. 4” Starring Finally Bhaarath &  Saanve Megghana* Shanthi Talkies, led by the enterprising pr...

Monday, 15 February 2021

செம திமிரு' படத்தைப் பிரம்மாண்டமாக

செம திமிரு' படத்தைப் பிரம்மாண்டமாக வெளியிடும் ராக்போர்ட் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம்*


ஒரு படம் தயாரிப்பது மட்டும் பெரிய விஷயமல்ல, அதைச் சரியான விநியோகஸ்தரின் கையில் கொடுத்து வெளியிடுவது தான் மிகவும் முக்கியம். அவ்வாறு பல நல்ல படங்களைத் தயாரிப்பது மட்டுமன்றி, நல்ல படங்களை விநியோகித்தும் வெற்றிகண்டு வரும் நிறுவனம் தயாரிப்பாளர் முருகானந்தம் அவர்களின் ராக்போர்ட் எண்டர்டையின்மெண்ட். 



மிஷ்கின் இயக்கி வரும் 'பிசாசு 2' மற்றும் அதர்வா நடித்துள்ள 'குருதி ஆட்டம்' உள்ளிட்ட படங்களைப் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்து வருகிறது. தற்போது 'செம திமிரு' என்ற படத்தை தமிழகத்தில் விநியோகம் செய்யவுள்ளது ராக்போர்ட் எண்டர்டையின்மெண்ட்.


கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் துருவா சர்ஜா. இவர் ஆக்‌ஷன் கிங் அர்ஜூனின் உறவினர். இவர் நாயகனாக நடித்துள்ள படம் தான் 'செம திமிரு'. பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தப் படம் தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியிட ராக்போர்ட் எண்டர்டையின்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் தீர்மானித்துள்ளது. இந்தப் படத்தைத் தான் பிப்ரவரி 19-ம் தேதி தமிழகத்தில் வெளியிடுகிறது.


இந்தப் படத்தின் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இப்படத்தை பி.கே.கங்காதர், எஸ்.சிவா அர்ஜூன் தயாரிக்க நந்தகிஷோர் இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்குத் தன் ஒளிப்பதிவால் அழகூட்டியுள்ளார் விஜய் மில்டன். 'செம திமிரு' படத்தில் சந்தன் ஷெட்டி இசையில் உருவான 'காராபோ' பாடல் நீண்ட நாட்களாக சமூக வலைதளத்தில் பேசப்படும் பாடலாக இருந்தது நினைவு கூரத்தக்கது. 


இந்தப் படம் தவிர்த்து டீஸர், ட்ரெய்லர் ஆகியவற்றால் சமூக வலைதளத்தில் இப்போதும் பேசப்படும் 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தையும் ராக்போர்ட் எண்டர்டையின்மெண்ட் நிறுவனம் மார்ச் 5-ம் தேதி வெளியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது. சமூக வலைதளத்தில் பேசப்படும் படங்களைக் குறிவைத்து வெளியிட்டு ராக்போர்ட் எண்டர்டையின்மெண்ட் நிறுவனம் தொடர்ச்சியாக வெற்றிக் கொடி நாட்டி வருகிறது.


No comments:

Post a Comment