Featured post

From the desk of Actor Vichu

 From the desk of Actor Vichu ஒரு கலைஞனின் வாழ்வில் விருதுகள் என்பது உற்சாக ஊற்று. என் நீண்ட நெடிய கலை வாழ்வில் நந்தினி தொலைக்காட்சி தொடரில்...

Monday, 25 April 2022

பயோகிராபி இந்தியா பதிப்பகத்தின் புத்தக வெளியீடு விழா

 பயோகிராபி இந்தியா பதிப்பகத்தின் புத்தக வெளியீடு விழா

நடிகை பூர்ணிமா பாக்கியராஜின் சுயசரிதை  புத்தகத்தை தமிழச்சி தங்கபாண்டியன் வெளியிட ரம்யாகிருஷ்ணன் மற்றும் சினேகா பெற்றுக்கொண்டனர்

நடிகை பூர்ணிமா பாக்கியராஜின் சுயசரிதை  'தன்னை உணர்ந்தனள் தகைமை உயர்ந்தனள்' புத்தக வெளியீட்டு விழா சென்னை இராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள முத்தமிழ்ப் பேரவையில் நடைபெற்றது.

 





 

'தன்னை உணர்ந்தனள் தகைமை உயர்ந்தனள்' புத்தகத்தை சென்னை தெற்கு தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் வெளியிட, நடிகை சினேகா பிரசன்னா பெற்றுக்கொண்டார். இந்த புத்தகத்தின் ஆங்கில பதிப்பான 'Aesthetics Recaptured'  நூலை நடிகை ரம்யாகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார்.

'தன்னை உணர்ந்தனள் தகைமை உயர்ந்தனள்' புத்தகத்தை திருமகள் ராஜாராம் எழுதியுள்ளார். 'Aesthetics Recaptured'  நூலை ஹேமாமாலினி குணாநிதி எழுதியுள்ளார். 20 தலைப்புகளுடன், 20 பகுதிகளாக  இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது.

தமிழ் நூலின் திறனாய்வை ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் விஜயலட்சுமி இராமசாமி மேற்கொண்டார், ஆங்கில நூலின் திறனாய்வு பணியை V மாத இதழின் தலைமை நிர்வாக அதிகாரி
சுமதி ஸ்ரீநிவாஸ் செய்தார்.

இது பயோகிராபி இந்தியா பதிப்பகத்தின் முதல் புத்தக வெளியீட்டு விழாவாகும்.

பூர்ணிமா பாக்கியராஜ் தமிழ்,மலையாளம், தெலுங்கு என்று பல மொழி  திரைப்படங்களில் நடித்துள்ளார். பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் பாக்கியராஜின் மனைவியான இவர் திரைத்துறை பிரபலங்கள் ஆன சாந்தனு மற்றும் சரண்யாவின் தாயார் ஆவார்.

No comments:

Post a Comment