Featured post

From the desk of Actor Vichu

 From the desk of Actor Vichu ஒரு கலைஞனின் வாழ்வில் விருதுகள் என்பது உற்சாக ஊற்று. என் நீண்ட நெடிய கலை வாழ்வில் நந்தினி தொலைக்காட்சி தொடரில்...

Monday, 25 April 2022

வேலம்மாள் பள்ளி மாணவன் சதுரங்கப் போட்டியில் ஓஸ்லோ

வேலம்மாள் பள்ளி மாணவன் சதுரங்கப் போட்டியில் ஓஸ்லோ எஸ்போர்ட்ஸ் கோப்பையை வென்று சாதனை!

சென்னை முகப்பேரில் அமைந்துள்ள வேலம்மாள் முதன்மைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பில் பயிலும்  கிராண்ட் மாஸ்டர்- ஆர்.


பிரக்ணானந்தா என்ற மாணவர் மெல்ட்வாட்டர் சாம்பியன்ஸ்  சதுரங்க வீரர் சுற்றுப் பயணத்தில் ஆஸ்லோ எஸ்போர்ட்ஸ் கோப்பையை சமீபத்தில்  செஸ் 24 இல் இணையம் வழியாக நடைபெற்ற  2 சுற்றுகளில் நடந்த 2 போட்டிகளிலும் வெகு திறமையாக விளையாடி மூத்த வீரர் ஷக்ரியார் மமேத்யரோவ்  அவர்களை வென்று முதல் வெற்றியைப் பதிவு செய்தார். இவ்வெற்றி அவருடைய முதல் முக்கிய நிகழ்வாக அமைந்தது


தொடர்ந்து அவரது இரண்டாவது தெளிவான வெற்றியைப் பதிவுசெய்து ,ரேபிட் கேம் வெற்றிக்காக 3 புள்ளிகளைச் சேர்த்து, $7,500 ரொக்கப் பரிசை வென்றார். அவரது ஈர்க்கக்கூடிய வெற்றி, 'இளைஞன் வேகமாக ஒரு உண்மையான சக்தியாக மாறுகிறான்' என்ற அறிக்கையை வெளிப்படுத்தியுள்ளது.

இம்மாணவனின்

தொடர்ந்த சாதனைக்குப்  பள்ளி நிர்வாகம் வாழ்த்து தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment