Featured post

From the desk of Actor Vichu

 From the desk of Actor Vichu ஒரு கலைஞனின் வாழ்வில் விருதுகள் என்பது உற்சாக ஊற்று. என் நீண்ட நெடிய கலை வாழ்வில் நந்தினி தொலைக்காட்சி தொடரில்...

Saturday, 2 April 2022

பள்ளிக்கரணை குப்பை கிடங்கில் இயற்கை பாதுகாப்பின் முக்கியத்துவத்தை

 பள்ளிக்கரணை குப்பை கிடங்கில் இயற்கை பாதுகாப்பின் முக்கியத்துவத்தை  உணர்த்தி அதனை மாற்றும் விதமாக புதுமையான ஓவியக் கலைப் படைப்புகளை வரைந்த சன்ஸைன் பள்ளி மாணவ மாணவிகளை ஐக்கிய நாடுகள் சபையின்  ஆறாவது நிர்வாக இயக்குனர் திரு.எரிக் சொல்ஹெய்ம் வியந்து பாராட்டினார்


  11 மற்றும் 9ம் வகுப்பு சன்சைன் சென்னை சீனியர் செகண்டரி பள்ளி மாணவர்கள் பள்ளிக்கரணை குப்பை கிடங்கில் தங்கள் ஓவிய  படைப்புகளின் மூலம் இயற்கையை பாதுகாக்கும் விதமாக ஓவியத்தை  வரைந்தனர்.

 இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஐக்கிய நாடுகள் சபையின்  ஆறாவது நிர்வாக இயக்குனர் திரு.எரிக் சொல்ஹெய்ம்
 கலந்து கொண்டார்.

































 சுற்றுச்சூழல் திட்டம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் துணைச் செயலாளர் திரு.எரிக் சொல்ஹெய்ம்
 சன்ஷைன் சென்னை சீனியர் செகண்டரி பள்ளி மாணவர்களுடன் சென்று பள்ளிக்கரணை மார்ஸ்லாண்ட் பூங்காவை பார்வையிட்டார்.

 பள்ளிக்கரணை குப்பை கிடங்கில் இயற்கை பாதுகாப்பு முக்கியத்துவத்தை உணர்ந்தும் வகையில் 11 மற்றும் 9 ஆம் வகுப்பைச் சேர்ந்த 21 மாணவ மாணவிகள் தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்தினர்.

 குப்பை கிடங்கை பசுமையான முற்றமாக மாற்றும் பார்வையை இந்த கலைப்படைப்புகள் சித்தரிக்கிறது.

 சொல்ஹெய்ம்  பேசுகையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவம் மற்றும் அனைத்தையும் விரிவாக எடுத்துரைத்தார்.

 இயற்கைக்கு திரும்ப மாணவர்களால் எடுக்கக்கூடிய சிறிய நடவடிக்கைகள்  குறித்து அப்போது மாணவர்கள்
 பள்ளிக்கரணை குப்பை கிடங்கை சீரமைக்க புதுமையான யோசனைகளை முன்வைத்தனர்.

 சுற்றுச்சூழலை மேம்படுத்துவதில் இளைய தலைமுறையினரின் பங்கு என்பதன் அவசியத்தை பள்ளியின் தாளாளர் திருமதி எஸ்.எழிலரசி வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் திரு.அப்துல்கனி, சன்ஸைன் பள்ளியின் முதல்வர் திருமதி தேவிகா தினேஷ் மற்றும் சன்ஸைன் பள்ளி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment