Featured post

Antony Varghese Pepe Ignites the Screen in a Fiery Mass Avatar; “Kattalan” First Look Out Now

 Antony Varghese Pepe Ignites the Screen in a Fiery Mass Avatar; “Kattalan” First Look Out Now!** The first look poster of the grand action ...

Friday, 1 April 2022

சிரஞ்சீவி, மோகன்லால் & சிம்பு இணைந்து நடிகர் கிச்சா சுதீப்

 சிரஞ்சீவி, மோகன்லால் & சிம்பு இணைந்து நடிகர் கிச்சா சுதீப் நடிக்கும்  விக்ராந்த் ரோணா படத்தின் டீசரை ஏப்ரல் 2 ஆம் தேதி  காலை  9:55 மணிக்கு வெளியிடுகிறார்கள்




 பாட்ஷா கிச்சா சுதீப் நடிப்பில், பிரமாண்ட பட்ஜெட்டில்   3-D  அட்வென்ச்சர், மிஸ்டரி திரில்லராக உருவாகியுள்ள, “விக்ராந்த் ரோணா” திரைப்படம், உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாக தயாராகி வருகிறது. தயாரிப்பாளர்கள் படத்தின் புரமோசன் வேலைகளை பிரமாண்ட வகையில்  மும்முரமாக துவங்கியுள்ளார்கள். 


இந்த வார இறுதியில் 'விக்ராந்த் ரோனா' படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவிக்கும் அற்புதமான டீசரை, வெவ்வேறு மொழி  திரைத்துறைகளைச் சேர்ந்த மூன்று சூப்பர் ஸ்டார்கள்  இணைந்து  வெளியிட உள்ளனர். இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் முறையே சிரஞ்சீவி, மோகன்லால் மற்றும் சிம்பு ஆகியோர்  இணைந்து இப்படத்தின் டீசரை வெளியிட உள்ளனர்.


பாட்ஷா கிச்சா சுதீப் நடிப்பில், பிரமாண்ட பட்ஜெட்டில்   3-D  அட்வென்ச்சர், மிஸ்டரி திரில்லராக உருவாகியுள்ள, “விக்ராந்த் ரோணா” திரைப்படம், இந்த ஆண்டில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் படங்களுல் ஒன்றாகும். கடந்த ஆண்டு தயாரிப்பாளர்கள் படத்தின் கிளிம்ப்ஸே காட்சித்துணுக்கை, நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் 3டியில் வெளியிட்டது முதல், கிச்சாவின் ரசிகர்கள் மத்தியில், டீஸர் மற்றும் டிரெய்லரைப் பார்க்க பெரும்  ஆவலை கிளப்பியுள்ளது. 


கிச்சாவின் பிறந்தநாளான செப்டம்பர் 2 அன்று, படத்திற்கான எதிர்பார்ப்பை உயர்த்திய முதல் கிளிம்ப்ஸே காட்சியை தயாரிப்பாளர்கள் வெளியிட்டனர், இது விக்ராந்த் ரோனா என்ற எதிரிகளை பயமுறுத்தும் இருளின் அரசனுடைய அறிமுகத்தை தருவதாக அமைந்திருந்தது.


பான் வேர்ல்ட் 3டி படமான ‘விக்ராந்த் ரோணா’ இந்திய நாட்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும். துபாயின் புர்ஜ் கலீஃபாவில் டைட்டில் வெளியீட்டு விழா,  ஜாக்குலின் பெர்னாண்டஸ் நாயகியாக ஒப்பந்தம், அதனுடன்  50 க்கும் மேற்பட்ட நாடுகளில் படம் வெளியிடப்படும் என்று அறிவித்தது வரை, 'விக்ராந்த் ரோணா' படத்தின் ஒவ்வொரு அறிவிப்பும் பிரமாண்டமாக அமைந்திருந்தது.



Zee Studios, Shalini Artss உடன் இணைந்து  தனது அடுத்த மெகா முயற்சியை, பான் வேர்ல்ட் 3D படத்தை அறிவித்தது - 'விக்ராந்த் ரோணா' படத்தில் கிச்சா சுதீப் முதன்மை பாத்திரத்தில் நடிக்க ஜாக்குலின் பெர்னாண்டஸ், நிருப் பண்டாரி மற்றும் நீதா அசோக் ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள். 


பான் வேர்ல்ட் 3டி திரைப்படமான “விக்ராந்த் ரோணா”  கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியாகிறது, மேலும் அரபு, ஜெர்மன், ரஷ்யன், மாண்டரின், ஆங்கிலம் உட்பட இன்னும் பல  மொழிகளிலும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இயக்குநர் அனுப் பண்டாரி இயக்கத்தில் கிச்சா சுதீபா, ஜாக்குலின் பெர்னாண்டஸ், நிரூப் பண்டாரி மற்றும் நீதா அசோக் நடித்துள்ள “விக்ராந்த் ரோணா” படத்தை ’ Zee studios வழங்க, Shalini Artss சார்பில்  ஜாக் மஞ்சுநாத் தயாரிக்கிறார், Invenio Origins சார்பில்  அலங்கார பாண்டியன் இணை தயாரிப்பு செய்துள்ளார்.

No comments:

Post a Comment