Featured post

From the desk of Actor Vichu

 From the desk of Actor Vichu ஒரு கலைஞனின் வாழ்வில் விருதுகள் என்பது உற்சாக ஊற்று. என் நீண்ட நெடிய கலை வாழ்வில் நந்தினி தொலைக்காட்சி தொடரில்...

Tuesday, 23 May 2023

ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழா 2021ல் தளபதி

 *ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழா 2021ல் தளபதி விஜய்க்கு சிறந்த நடிகர் விருது*

*ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழா 2021ல்  மூன்று விருதுகளை வென்ற மாஸ்டர் திரைப்படம்*

சமீபத்தில் ஜப்பானில் ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட திருவிழா 2021 நடைபெற்றது. இந்த சர்வதேச திரைப்பட திருவிழா அந்த வருடத்தின் சிறந்த படங்களை வகைப்படுத்தி தேர்வு செய்தது. மாஸ்டர் படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த நடிகருக்கான விருது தளபதி விஜய்க்கு வழங்கப்பட்டது.







செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ மற்றும் XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான மாஸ்டர் திரைப்படம்  2021 பொங்கல் பண்டிகையினல் வெளியானது. இந்த படத்தில் மேலும் விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், சாந்தனு பாக்யராஜ், ஆண்ட்ரியா ஜெரமையா மற்றும் கவுரி ஜி கிஷன் ஆகியோரும் நடித்திருந்தனர்.


மாஸ்டர் திரைப்படம் ஒன்றல்ல, மூன்று விருதுகளை வென்றுள்ளது. வாத்தி கம்மிங் பாடலுக்கு சிறந்த நடன வடிவமைப்புக்கான விருதை தினேஷ்குமாரும் சிறந்த வில்லன் நடிகருக்கான விருதை விஜய்சேதுபதியும் வென்றனர்.

No comments:

Post a Comment