Featured post

மே 23ல் அதிக அளவு திரையரங்குகளில் வெளியாகும் ‘வேம்பு’

 *மே 23ல் அதிக அளவு திரையரங்குகளில் வெளியாகும் ‘வேம்பு’* *மலையாளப் படங்களை கொண்டாடுகிறோம்...தமிழ்ப்படங்களை விட்டுவிடுகிறோம்*  *-இயக்குநர் ஜஸ...

Tuesday, 23 May 2023

சத்தியபாமா நிகர்நிலை பல்கலைகழகத்திற்கு

 சத்தியபாமா நிகர்நிலை பல்கலைகழகத்திற்கு ‘ஏ++’ அங்கீகாரம் 'நாக்' கவுன்சில் வழங்கியுள்ளது.


சென்னை ஓஎம்ஆர் சாலை செம்மஞ்சேரியில் உள்ள சத்தியபாமா நிகர்நிலை பல்கலைகழகத்திற்கு 'ஏ பிளஸ் பிளஸ்' என்ற அதிகபட்ச அங்கீகாரத்தை ‘நாக்’ கவுன்சில் வழங்கியுள்ளது.

இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:




நிபுணர் குழுவின் பரிந்துரை அடிப்படையில் சத்தியபாமா நிகர்நிலை பல்கலைகழகத்திற்கு 'ஏ பிளஸ் பிளஸ்' (A++) என்ற உயர் தர அங்கீகாரத்தை 'நாக்' கவுன்சில் வழங்கியுள்ளது.

இந்த சாதனை படைக்க உறுதுணையாக இருந்த பேராசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள், பெற்றோர், தொழில் நுட்பங்களில் பல்கலைகழகத்தோடு இணைந்து செயல்படும் தொழிற்சாலைகள், நிறுவனங்கள் உள்ளிட்ட அனைவருக்கும் சத்தியபாமா நிகர்நிலை பல்கலைகழகத்தின் வேந்தர் முனைவர் மரியஜீனா ஜான்சன் அவர்கள் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறார்.


No comments:

Post a Comment