Featured post

Basil Joseph, Tovino Thomas & Vineeth Sreenivasan Unite for the Ultimate Mass Entertainer – 'Athiradi'. Title Teaser out now

 *Basil Joseph, Tovino Thomas & Vineeth Sreenivasan Unite for the Ultimate Mass Entertainer – 'Athiradi'. Title Teaser out now* ...

Monday, 22 May 2023

மாஸ் மஹாராஜா ரவி தேஜா, வம்சி, அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் இணைந்து

 *மாஸ் மஹாராஜா ரவி தேஜா, வம்சி, அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் இணைந்து வழங்கும் பான் இந்தியப் பிரமாண்ட படைப்பு  “டைகர் நாகேஸ்வர ராவ்” படத்தின்  ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகர்கள்  வெங்கடேஷ், ஜான் ஆபிரகாம், சிவ ராஜ்குமார், கார்த்தி, துல்கர் சல்மான் ஆகியோர் இணைந்து வெளியிட உள்ளனர் !!!*


மாஸ் மஹாராஜா ரவி தேஜாவின் நடிப்பில் பெருமை மிகு  பான் இந்தியா திரைப்படமாக உருவாகிறது “டைகர் நாகேஸ்வர ராவ்”.  இயக்குநர் வம்சி இயக்கத்தில்,  தி காஷ்மீர் ஃபைல்ஸ் மற்றும் கார்த்திகேயா 2 என இரண்டு அடுத்தடுத்த பிளாக்பஸ்டர்களை வழங்கிய அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் அபிஷேக் அகர்வால்- இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் அதிரடியான பர்ஸ்ட் லுக் மே 24ல் வெளியாகவுள்ளது. 



இந்திய திரையுலகின் ஐந்து மொழிகளைச் சேர்ந்த  ஐந்து சூப்பர் ஸ்டார்கள் இணைந்து இப்படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடவுள்ளனர். தெலுங்கு பதிப்பின் போஸ்டரை வெங்கடேஷ் வெளியிட, ஜான் ஆபிரகாம், சிவ ராஜ்குமார், கார்த்தி மற்றும் துல்கர் சல்மான் ஆகியோர் இந்தி, கன்னடம், தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளின்  பர்ஸ்ட் லுக்கை வெளியிடவுள்ளனர்.


டைட்டில் ரோலில் இதுவரை கண்டிராத வகையில்  முரட்டுத்தனத்துடன் மரண மாஸான   தோற்றத்தில் ரவி தேஜா இப்படத்தில் தோன்றவுள்ளார். ஃபர்ஸ்ட் லுக் மிக அசத்தலாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.


“டைகர் நாகேஸ்வர ராவ்” திரைப்படம் 70களில் ஸ்டூவர்ட்புரம் என்ற கிராமத்தில் வாழ்ந்த  மிகப்பிரபலமான பலே கில்லாடியான திருடனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட கதையாகும். இப்படத்தில் ரவி தேஜாவின் உடல் மொழி, வசனம் மற்றும் கெட்அப் இதுவரை பார்த்திராத வகையில் இருக்கும். ரவிதேஜா முன் எப்போதும் ஏற்றிராத கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தில் ரவி தேஜாவுக்கு ஜோடியாக நூபுர் சனோன் மற்றும் காயத்ரி பரத்வாஜ் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.


ஒளிப்பதிவாளர் R மதி ISC ஒளிப்பதிவு செய்ய, GV பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பாளராக பணிபுரிகிறார். ஸ்ரீகாந்த் விசா வசனம் எழுத, மயங்க் சிங்கானியா இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.


டைகர் நாகேஸ்வர ராவின் பாக்ஸ் ஆபிஸ் வேட்டை அக்டோபர் 20 ஆம் தேதி உலகம் முழுவதும்,  பிரமாண்டமாகத் தசரா  பண்டிகையுடன் துவங்கவுள்ளது.


நடிகர்கள்: ரவி தேஜா, நூபுர் சனோன், காயத்ரி பரத்வாஜ் மற்றும் பலர். 


எழுத்து - இயக்கம் : வம்சி 

தயாரிப்பாளர்: அபிஷேக் அகர்வால் 

தயாரிப்பு நிறுவனம் : அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் 

வழங்குபவர்: தேஜ் நாராயண் அகர்வால் 

இணை தயாரிப்பாளர்: மயங்க் சிங்கானியா 

வசனம்: ஸ்ரீகாந்த் விசா 

இசையமைப்பாளர்: GV பிரகாஷ் குமார் 

ஒளிப்பதிவு : R மதி 

தயாரிப்பு வடிவமைப்பாளர்: அவினாஷ் கொல்லா 

மக்கள் தொடர்பு : யுவராஜ்

No comments:

Post a Comment