Featured post

கிங்டம் திரைப்படத்தை திரையிட எவரேனும் இடையூறு விளைவித்தால்

 கிங்டம் திரைப்படத்தை திரையிட எவரேனும் இடையூறு விளைவித்தால் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்ற...

Wednesday, 31 May 2023

நடிகர் விஷால் ஆண்டு தோறும் +2 தேர்வில்

 நடிகர் விஷால் ஆண்டு தோறும் +2 தேர்வில் தேர்ச்சி அடைந்து நல்ல மதிப்பெண் எடுத்தும் மேற்கொண்டு படிக்க முடியாத விவசாய குடுபத்தினார்கள், தாய் தந்தை இல்லாதவர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள் மற்றும் ஏழை, எளிய 







 குடும்பத்தின் மாணவ மாணவிகளுக்கு உயர்கல்வி படிப்பதற்காக தனது தேவி அறக்கட்டளை சார்பில் உதவி செய்து வருகிறார். அதே போன்று இந்த வருடம் +2 தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றும் மேற்கொண்டு படிக்க முடியாத ஏழை குடும்பம் சார்ந்த மாணவ மாணவிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் சென்னையில் இரண்டு நாட்கள்  நடைபெற்றது, இந்த கலந்தாய்வில் தமிழகம் முழுவதும் உள்ள மாணவ, மாணவிகள் பெற்றோருடன் கலந்துகொண்டார்கள்

No comments:

Post a Comment