Featured post

Karuppu Pulsar Tamil Movie Review

 Karuppu Pulsar Movie Review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம  karuppu pulsar படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது mu...

Monday, 2 October 2023

பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜரின் 48வது நினைவு நாளை

 *பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜரின் 48வது நினைவு நாளை முன்னிட்டு அன்னதானம்*






*இயக்குநர் சீனு ராமசாமி, 'காமராஜ்' திரைப்பட இயக்குநர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்பு*


தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், பெருந்தலைவர் என்றும் கர்மவீரர் என்றும் மக்களால் பெரிதும் போற்றப்படுபவருமான காமராஜர் அவர்களின் 48வது நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்பட்டது. 


காமராஜரின் நினைவை போற்றும் விதமாக சென்னையில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் இன்று அன்னதானம் வழங்கப்பட்டது. 


பிரபல இயக்குநர் சீனு ராமசாமி அன்னதானத்தை தொடங்கி வைத்தார். 'காமராஜ்' திரைப்படத்தின் இயக்குநரான அ. பாலகிருஷ்ணன், சீனு ராமசாமி உடன் இணைந்து அங்கிருந்தவர்களுக்கு உணவு வழங்கினார். 


காமராஜர் நினைவு இல்லத்தில் அமைந்துள்ள பெருந்தலைவரின் திருவுருவ சிலைக்கு சீனு ராமசாமி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 


இது குறித்து பேசிய இயக்குநர் சீனு ராமசாமி, "நாடு போற்றும் நல்ல தலைவரான பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் நினைவு நாள் நிகழ்ச்சியில் அவர் இல்லத்தில் கலந்து கொண்டு  அவரது நினைவை போற்றுவதில் பெருமை அடைகிறேன்.தமிழரின் கல்வித் தந்தை தூய்மை அரசியலின் பிதா  கர்மவீரரின் புகழ் வாழ்க " என்று கூறினார். 


***

No comments:

Post a Comment