Featured post

The RajaSaab Trailer: Prabhas Starrer Horror Fantasy Drama is a Visual Spectacle Blended with Laughter, Drama & Emotions

 *The RajaSaab Trailer: Prabhas Starrer Horror Fantasy Drama is a Visual Spectacle Blended with Laughter, Drama & Emotions* Rebel Star P...

Monday, 16 October 2023

டெவில்” படத்தில் அரசியல்வாதியாக மிரட்டும் மாளவிகா நாயர்

 *“டெவில்” படத்தில் அரசியல்வாதியாக மிரட்டும் மாளவிகா நாயர் !* 


*“டெவில்”  படத்திலிருந்து மாளவிகா நாயர் கதாப்பாத்திர ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு*



*நந்தமுரி கல்யாண் ராமின் ஸ்பை த்ரில்லர் படமான ‘டெவில்’ படத்தில் சக்திவாய்ந்த அரசியல்வாதியாக மிரட்டும் மாளவிகா நாயர் !*



நந்தமுரி கல்யாண் ராம் தனது திரைவாழ்க்கையின் தொடக்கத்திலிருந்தே தனித்துவமான ஸ்கிரிப்ட்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் பெயர் பெற்றவர், தற்போது மிக சுவாரஸ்யமான ஒரு படத்தோடு ரசிகர்களை மகிழ்விக்க வருகிறார். கதாநாயகனின் மூர்க்கத்தனத்தைக் குறிக்கும்  வகையில் “டெவில்” எனப்  பெயரிடப்பட்ட இப்படம், பிரிட்டிஷ் சீக்ரெட் ஏஜென்ட் என்ற டேக்லைனுடன் வருகிறது. இந்தப் படத்தை இயக்குநர் அபிஷேக் நாமா இயக்குகிறார்.


சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீஸர், படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் நவம்பர் 24, 2023 அன்று திரையரங்குகளில் வெளியிடப்படவுள்ளது. இந்த ஞாயிற்றுக்கிழமை, தயாரிப்பாளர்கள் இந்த படத்திலிருந்து சக்திவாய்ந்த அரசியல்வாதி வேடத்தில் நடிக்கும் கதாநாயகி மாளவிகா நாயரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ரசிகர்களுக்காக பிரத்யேகமாக வெளியிட்டனர்.


இப்படத்தில் மணிமேகலா எனும் கதாப்பாத்திரத்தில் மாளவிகா நாயர் நடிக்கிறார். இவரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில்  வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் அரசியல்வாதியாக தோன்றும் இவரது கதாப்பாத்திர பின்னணியில் , அமைதியை வெளிப்படுத்தும் புறாக்கள் போஸ்டரில் காணப்படுகின்றன. 'டெவில்' படத்தில் நந்தமுரி கல்யாண் ராம், மிகவும் கடினமான ஒரு ரகசியத்தைத் கண்டுபிடிக்கும் பிரிட்டிஷ் ரகசிய ஏஜென்டாக ரசிகர்களை வசீகரிக்கவுள்ளார்.


குறிப்பிடத்தக்க மெகா ஹிட் படங்களை தந்த அபிஷேக் பிக்சர்ஸ் நிறுவனம் “டெவில்”  படத்தை வழங்குகிறது. தயாரிப்பு வடிவமைப்பாளரான காந்தி நதிக்குடிகர் பார்வையாளர்களுக்கு ஒரு அற்புதமான காட்சி அனுபவத்தை உருவாக்க விடாமுயற்சியுடன் பணியாற்றியுள்ளார். சௌந்தர் ராஜன்.S ஒளிப்பதிவும், தம்மிராஜின் படத்தொகுப்பும் வெள்ளித்திரையில் கதைக்கு உயிர் கொடுத்துள்ளது. 


பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஸ்ரீகாந்த் விசாவின் திறமையான குழு கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை அழகாக வடிவமைத்துள்ளது. இந்த ஸ்பை த்ரில்லர் படம் பற்றிய கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும்.



அபிஷேக் பிக்சர்ஸ் இப்படத்தை வழங்குகிறார்கள் 


நடிகர்கள்: நந்தமுரி கல்யாண் ராம், சம்யுக்தா மற்றும் பலர்


பேனர்: அபிஷேக் பிக்சர்ஸ் 

வழங்குபவர்: தேவன்ஷ் நாமா 

தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர்: அபிஷேக் நாமா 

கதை, திரைக்கதை, வசனம்: ஸ்ரீகாந்த் விசா 

ஒளிப்பதிவு: சௌந்தர் ராஜன்.எஸ் 

இசை: ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் 

தயாரிப்பு வடிவமைப்பாளர்: காந்தி நதிக்குடிகர் 

எடிட்டர்: தம்மிராஜு 

தலைமை நிர்வாக அதிகாரி: பொதினி வாசு 

கதை உதவி : பிரசாந்த் பரடி 

இணை இயக்குநர்: சலசனி ராமராவ் 

ஆடை வடிவமைப்பாளர்: விஜய் ரத்தினம் MPSE

ரீ ரெக்கார்டிங் மிக்ஸ் : ஏ எம் ரஹ்மத்துல்லா ஏ. எம். ரஹ்மத்துல்லா 

சண்டைக்காட்சி: வெங்கட் மாஸ்டர் 

போஸ்டர் வடிவமைப்பு: கன்னி ஸ்டுடியோஸ் 

டிஜிட்டல் மார்க்கெட்டிங்: வால்ஸ் & டிரெண்ட்ஸ்

மக்கள் தொடர்பு : யுவராஜ்

ஆடை வடிவமைப்பு: அஸ்வின் ராஜேஷ்

No comments:

Post a Comment