Featured post

Maria Movie Review

Maria Review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம maria படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்துல SaiShri Prabhakaran , Pavel Navageethan , Sid...

Sunday, 15 October 2023

விஜய் தேவரகொண்டா, பரசுராம், தில் ராஜுவின் 'VD13/SVC54' படத்தின்

 *விஜய் தேவரகொண்டா, பரசுராம், தில் ராஜுவின் 'VD13/SVC54' படத்தின் அதிகாரப்பூர்வ டைட்டில்  டீசருடன் அக்டோபர் 18ஆம் தேதி வெளியாகிறது!*


ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'விடி 13' என்று தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் 'சீதா ராமம்' புகழ் மிருணாள் தாக்கூர் கதாநாயகியாக நடிக்கிறார். இது எஸ்விசியின் 54வது படம். இயக்குநர் பரசுராம் பெட்லா குடும்ப பொழுதுபோக்கு கதையாக இந்தப் படத்தை உருவாக்கி வருகிறார். இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் இணைந்து தயாரிக்கின்றனர். கிரியேட்டிவ் தயாரிப்பாளராக வாசுவர்மா செயல்படுகிறார்.


படத்தின் அதிகாரப்பூர்வ டைட்டில் அக்டோபர் 18 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு சிறிய டைட்டில் டீசர் மூலம் அறிவிக்கப்படும் என்று தயாரிப்பாளர்கள் இன்று தெரிவித்தனர். இதுகுறித்து தயாரிப்பாளர்கள் தெரிவித்திருப்பதாவது, "உங்களுக்கு மிகப்பெரிய பிளாக்பஸ்டர் என்டர்டெய்னரை 'கீத கோவிந்தம்' படம் மூலம்  தந்த படக்குழுவிடம் இருந்து, இன்னும் சிறப்பான படத்தை நீங்கள் காண்பீர்கள். இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ பெயர் ஒரு சிறிய டைட்டில் டீசர் மூலம் அக்டோபர் 18 ஆம் தேதி அன்று மாலை 18:30 மணிக்கு அறிவிக்கப்படும்" என்றனர். 


வரும் சங்கராந்தி பண்டிகைக்கு 'VD13' பிரமாண்டமாக வெளியாக உள்ளது. 'கீத கோவிந்தம்' போன்ற சூப்பர் ஹிட் படத்திற்கு பிறகு விஜய் தேவரகொண்டா மற்றும் இயக்குநர் பரசுராம் பெட்லா கூட்டணியில் உருவாகி வரும் இப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பிளாக்பஸ்டர் பிராண்டான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரும் இந்தப் படத்தில் இணைந்திருப்பது படம் மீதான ஆர்வத்தை உயர்த்தியுள்ளது. இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகவுள்ளது.


*நடிகர்கள்*: விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாக்கூர்.


*தொழில்நுட்ப குழு*:

ஒளிப்பதிவு: கே.யு.மோகனன்,

இசை: கோபிசுந்தர்,

கலை இயக்குநர்: ஏ.எஸ்.பிரகாஷ்,

எடிட்டர்: மார்த்தாண்டன் கே வெங்கடேஷ்,

மக்கள் தொடர்பு : ஜிஎஸ்கே மீடியா, வம்சி காக்கா,

கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: வாசு வர்மா,

தயாரிப்பாளர்கள்: ராஜு - சிரிஷ்,

எழுத்து, இயக்கம்: பரசுராம் பெட்லா.

No comments:

Post a Comment