Featured post

RSoft Technologies Inaugurates New Innovation Hub in Chennai Pattabiram TIDEL Park

 RSoft Technologies Inaugurates New Innovation Hub in Chennai Pattabiram TIDEL Park Celebrates 12th Anniversary with “12x12x12 Journey” Them...

Tuesday, 2 April 2024

கள்வன்' படத்திற்காக ஜி.வி.பிரகாஷ் குமாரின் அர்ப்பணிப்பு அலாதியானது

 *'கள்வன்' படத்திற்காக ஜி.வி.பிரகாஷ் குமாரின் அர்ப்பணிப்பு அலாதியானது” - இயக்குநர்-ஒளிப்பதிவாளர் பி.வி. ஷங்கர்!*


இயக்குநர்களின் கற்பனையை வசீகரிக்கும் காட்சிகளாக மாற்றும் திறமை படைத்தவர்கள் ஒளிப்பதிவாளர்கள். ஆனால், ஒளிப்பதிவு மற்றும் இயக்கம் இரண்டிலும் சிறந்து விளங்கும் ஒருவர் படம் இயக்கும்போது நிச்சயம் அது சிறப்பானதாக இருக்கும். அப்படித்தான் ஒளிப்பதிவாளர் பி.வி. ஷங்கர் இயக்குநராக அறிமுகமாகும் 'கள்வன்' படம் சிறப்பாக வந்துள்ளது. ஜி.வி.பிரகாஷ் குமார், பாரதிராஜா, இவானா மற்றும் தீனா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரியின் மதிப்பிற்குரிய ஜி. டில்லி பாபு தயாரிக்கும் இந்த பரபரப்பான அட்வென்ச்சர் - ஆக்‌ஷன் திரைப்படம் ஏப்ரல் 4, 2024 அன்று உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது.


ஒளிப்பதிவாளர்-இயக்குநர் பி.வி. ஷங்கர் கூறும்போது, ​​“சில ஜானர் படங்கள் மொழி மற்றும் பிராந்திய எல்லைகளைத் தாண்டி பார்வையாளர்களைக் கவரும். ஒரு ஒளிப்பதிவாளராக காடுகளை அடிப்படையாகக் கொண்டு வரக்கூடிய படங்கள் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதாக உணர்ந்தேன். ஆக்‌ஷன், அட்வென்ச்சர், எமோஷன் எனப் பல  த்ரில்லர் தருணங்களை ஒன்றாகக் கொண்ட இந்தப் படம் பார்வையாளர்களுக்குத் தரமான எண்டர்டெயின்மெண்ட் படமாக இருக்கும். அழகான காதல், நகைச்சுவை என ஒரு ஃபேமிலி எண்டர்டெயின்மெண்ட் படத்திற்கான அனைத்து அம்சங்களையும் இந்தப் படம் கொண்டுள்ளது. 


இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் ஜி.டில்லி பாபு சாருக்கு நன்றி. பலதரப்பட்ட ஜானர்களின் அடிப்படையில் பாராட்டத்தக்க பொழுதுபோக்குகளை கொடுக்க வேண்டும் என்ற அவரது ஆர்வத்தின் வெளிப்பாடுதான் இந்தப் படம். அவரிடமிருந்து ஒப்புதல் பெறுவதை விட, நான் கதையாக விவரித்ததை காட்சிப்படுத்துவது எனக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. ஆனால், படத்தின் அவுட்புட்டில் ஒட்டுமொத்த குழுவும் மகிழ்ச்சியாக இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. 'கள்வன்' படத்திற்காக, ஜி.வி.பிரகாஷ் குமாரின் அர்ப்பணிப்பு அளப்பரியது. ஒரே நேரத்தில் இசை மற்றும் நடிப்பு இரண்டிலும் கவனம் செலுத்துவது எளிதானது கிடையாது. ஆனால், இந்தப் படத்துக்கான இயல்பான நடிப்பு மற்றும் அழகான பாடல்கள் கொடுத்து எங்கள் எதிர்பார்த்ததை சிறப்பாக பூர்த்தி செய்துள்ளார். இவானாவும் திறமையான நடிகை. இந்தப் படத்தில் சிறப்பான நடிப்பைக் கொடுத்துள்ளார். பாரதிராஜா சாருடன் பணிபுரிய வேண்டும் என்பது பலருடைய கனவு. அந்தக் கனவு எனக்கு நிறைவேறி இருப்பதில் ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன்" என்றார்.


*நடிகர்கள்:* ஜி.வி.பிரகாஷ் குமார், பாரதிராஜா, இவானா, தீனா,

ஜி.ஞானசம்பந்தம், வினோத் முன்னா


*தொழில்நுட்ப குழு:*


தயாரிப்பு இல்லம் - ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி,

தயாரிப்பாளர்: ஜி.டில்லி பாபு,

ஒளிப்பதிவு & இயக்கம்: பி.வி. ஷங்கர்,

பாடல்கள் இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்,

பின்னணி இசை: ரேவா,

எடிட்டிங்: சான் லோகேஷ்,

கலை: என்.கே. ராகுல்

No comments:

Post a Comment