Featured post

யோகி பாபு அப்படி செய்யும் நடிகர் இல்லை " ஸ்கூல் " பட இயக்குனர்

 யோகி பாபு அப்படி செய்யும் நடிகர் இல்லை " ஸ்கூல் " பட இயக்குனர் R. K. வித்யாதரன் Quantum Film Factory என்ற பட நிறுவனம் சார்பில் R....

Friday, 12 July 2024

ஆர். கண்ணன் இயக்கத்தில் சூப்பர்ஹிட் படம்*

 *ஆர். கண்ணன் இயக்கத்தில் சூப்பர்ஹிட் படம்* 

*“இவன் தந்திரன்” இரண்டாம் பாகம் ஆரம்பம்!* 






‘ஜெயம் கொண்டான்’ படம் மூலம் தமிழ் திரைப்பபட உலகில் இயக்குநராக அறிமுகமானவர் மணிரத்னத்தின் உதவியாளர் ஆர்.கண்ணன். வெற்றி பெற்ற இவரது பல படங்களில் ‘இவன் தந்திரன்’ படமும் மாபெரும் வெற்றி பெற்ற படம். ஏழு வருடங்களுக்கு பின் இதன் இரண்டாம் பாகத்தை உருவாக்குகிறார் ஆர்.கண்ணன். 


‘தள்ளி போகாதே’, ‘பூமராங்’, ‘இவன் தந்திரன்’, ‘காசேதான் கடவுளடா’, ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ போன்ற படங்களை தயாரித்த மசாலா பிக்சர்ஸ் சார்பில் ஆர்.கண்ணன் தயாரித்து இயக்கினார். 

இப்பொழுது ஜெ.ஜெயகிருஷ்ணன் நல்லாசியுடன், 

மசாலா பிக்சர்ஸ் சார்பில் 

“இவன் தந்திரன்-2”  படத்தை தயாரித்து இயக்குகிறார், ஆர்.கண்ணன். 


மணிரத்னம் அறிமுகம் செய்த கவுதம் கார்த்திக், ஷரத்தா ஶ்ரீநாத் இருவரும் ‘இவன் தந்திரன்’ படத்தில் நடித்திருந்தார்கள். இதன் இரண்டாம் பாகத்தில் சரண் நாயகனாக நடிக்கிறார். இவரை, ‘நீதானே என் பொன்வசந்தம்’ படத்தில் கவுதம் வாசுதேவ்மேனன் மாஸ்டர் நடிகராக அறிமுகப்படுத்தினார். மாஸ்டர் நட்சத்திரமாக பல படங்களில் நடித்த இவர், ‘சிங்கம்3’,

‘வடசென்னை’ படங்களில் முக்கிய கேரக்டரில் தன்னை அடையாளப் படுத்தினார். ‘கே.ஜி.எஃப்-2’ படம் மூலம் உலகம் முழுக்க பிரபலமானார். 

இப்பொழுது “இவன் தந்திரன்-2” வில் கதாநாயகனாக நடிக்கிறார். இவரின் ஜோடியாக நடிக்கும் நடிகை தேர்வு நடை பெற்றுவருகிறது. 

மேலும், சமுத்திரகனி, தம்பி ராமையா, ரெடின் கிங்ஸ்லி, ஆடுகளம் நரேன், கலைராணி மற்றும் பல முக்கிய நடிகர் நடிகைகள் நடிக்கிறார்கள். 


ரிச்சி ஸ்டிரீட் பாய்ஸ் ஆர் பேக்! 

Ritchie Street Boys Are Back ! 


இது தான் படத்தின் சப் டைட்டில்.. மையக்கரு. 

‘இவன் தந்திரன்’ படத்தின் தொடர்ச்சி தான் 

“இவன் தந்திரன்-2” என்கிறார் டைரக்டர் ஆர்.கண்ணன். 


இம்மாதம் 12ம் தேதி வெள்ளிக்கிழமை இப் படத்தின் பூஜை நடக்கிறது. அதை தொடர்ந்து விரைவில் படபிடிப்பு சென்னையில் ஆரம்பமாகிறது. 


கதை-திரைக்கதை-வசனம்-தயாரிப்பு & டைரக்‌ஷன் : ஆர்.கண்ணன்

இசை: தமன் 

ஒளிப்பதிவு: பால சுப்ரமணியெம்


ஏற்கனவே , ஹன்சிகா முதன் முதலாக இரட்டை வேடத்தில் கலக்கிய ‘காந்தாரி’ படத்தை இயக்கி வருகிறார். இப் படத்தை ஸ்பெஷல் ஷோ பார்த்த திரை உலகினர் சிலர் கண்ணனையும், ஹன்சிகாவையும் பாராட்டி வருகின்றனர். இப் பொழுது இதன் பிசினஸ் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. ஆகஸ்ட் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.


- Johnson PRO

No comments:

Post a Comment