Featured post

Maria Movie Review

Maria Review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம maria படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்துல SaiShri Prabhakaran , Pavel Navageethan , Sid...

Monday, 29 July 2024

ரிபெல் ஸ்டார் பிரபாஸ், பீப்பிள் மீடியா ஃபேக்டரி மற்றும் மாருதி இணையும்


*ரிபெல் ஸ்டார் பிரபாஸ், பீப்பிள் மீடியா ஃபேக்டரி மற்றும் மாருதி இணையும் பான் இந்திய பிரம்மாண்ட திரைப்படமான "தி ராஜா சாப்" படத்தின் க்ளிம்ப்ஸ் வெளியாகியுள்ளது !*



பாக்ஸ் ஆபிஸில் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து, ரிபெல் ஸ்டார் பிரபாஸ் நடிப்பில்,  மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியப் படமான 'தி ராஜா சாப்' படத்திலிருந்து, ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக,  தயாரிப்பாளர்கள் ஒரு அருமையான க்ளிம்ப்ஸ்  வீடியோவை வெளியிட்டுள்ளனர். இந்த க்ளிம்ப்ஸ்ல் அசத்தலான விண்டேஜ் லுக்கில் இளமை துள்ளலுடன் ஜொலிக்கிறார் பிரபாஸ். 


'தி ராஜா சாப்' திரைப்படம் 10 ஏப்ரல் 2025 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது எனும் அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தந்துள்ள, க்ளிம்ப்ஸ் ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. விண்டேஜ் காரில் காட்சியளிக்கும் பிரபாஸ், ரொமாண்டிக் ஹாரர் காமெடி மூலம் அனைவரையும் வசீகரிக்க தயாராக இருக்கிறார். மாருதி பிரபாஸை ஸ்டைலான தோற்றத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறார்.  இது திரைப்பட ஆர்வலர்களுக்கும், ரசிகர்களுக்கும் விருந்தாக அமைந்துள்ளது.


தற்போது, படத்தின் 40% படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் மற்றொரு பிரமாண்ட ஷெட்யூல் தொடங்க உள்ளது. இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் எஸ் எஸ் தமன் இசையமைக்கிறார், ராம் லக்ஷ்மன் மாஸ்டர்ஸ் மற்றும் கிங் சாலமன் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கின்றனர். பாகுபலி புகழ் கமலகண்ணன் ஆர்.சி. VFX பணிகளைக் கவனிக்கிறார். மிக சிறப்பான தொழில்நுட்பக் குழு  ஒரு புதுமையான, தரமான சினிமா அனுபவத்தை உறுதி செய்கிறது. 


மாருதி இயக்கத்தில், பீப்பிள் மீடியா ஃபேக்டரியின் சார்பில் விஸ்வ பிரசாத் தயாரிக்கும்,  “தி ராஜா சாப்” திரைப்படம், தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகிறது. குடும்ப பொழுதுபோக்கு படமான ‘பிரதி ரோஜு பாண்டேஜ்’, முதல் தெலுங்கு ஹாரர் காமெடி படமான ‘பிரேம கதா சித்ரம்’ மற்றும் காதல் நகைச்சுவை படமான ‘மஹானுபாவுடு’ போன்ற சூப்பர்ஹிட்கள் மூலம் புகழ் பெற்ற மாருதி, பிரபாஸுடன் இணைந்து, மீண்டும் ஒரு அட்டகாசமான படத்துடன் வருகிறார். 


‘கார்த்திகேயா 2’ மற்றும் ‘தமக்கா’ போன்ற சூப்பர்ஹிட் கமர்ஷியல் படங்களை வழங்கிய  தெலுங்குத் துறையில், முன்னணித் தயாரிப்பாளரான டிஜி விஸ்வ பிரசாத் இந்தத் திரைப்படத்தை, பெரும் உற்சாகத்துடன் தயாரித்து வருகிறார்.  பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனத்தின் சார்பில் இதுவரை இல்லாத அளவிலான  பிரம்மாண்டமான படமாக  “ராஜா சாப்” படம் தயாராகி வருகிறது.


பீப்பிள் மீடியா ஃபேக்டரி பற்றி: மதிப்புமிக்க தயாரிப்பு நிறுவனமான பீப்பிள் மீடியா ஃபேக்டரியை தயாரிப்பாளர் டி.ஜி. விஸ்வ பிரசாத் நிறுவினார், இந்நிறுவனத்தின் சார்பில் முன்மாதிரியான பல திரைப்படங்களைத் தயாரித்து, வழங்கி வருகிறார். 



தொழில்நுட்பக்குழு


படத்தொகுப்பு - கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் 

ஒளிப்பதிவு - கார்த்திக் பழனி 

இசை - தமன் எஸ் 

ஃபைட் மாஸ்டர் - ராம் லக்ஷ்மன் & கிங் சாலமன் 

VFX - ஆர்.சி. கமலகண்ணன்

தயாரிப்பு வடிவமைப்பாளர் - ராஜீவன்

 கிரியேட்டிவ் தயாரிப்பாளர் - எஸ்.கே.என்

 மக்கள் தொடர்பு - யுவராஜ்

இணை தயாரிப்பாளர் - விவேக் குச்சிபோட்லா

தயாரிப்பாளர் - டிஜி விஸ்வ பிரசாத் 

எழுத்து இயக்கம் - மாருதி.





*

No comments:

Post a Comment