Featured post

Maanbumigu Parai Movie Review

Maanbumigu Parai Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம manmubigu parai படத்தோட review அ தான் பாக்க போறோம். Leo Siva Kumar, Gayathri rema ...

Wednesday, 24 July 2024

நடிகர்கள் அனைவரும் எங்களுக்கு மிகப்பெரிய ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.

 நடிகர்கள் அனைவரும் எங்களுக்கு மிகப்பெரிய ஒத்துழைப்பு கொடுத்தார்கள். குறிப்பாக காயத்ரியின் ஒத்துழைப்பு சாதாரணமல்ல. அவரை தவிர வேறு யாராவது நடித்திருந்தால் நிச்சயம் இரண்டு நாட்களில் படப்பிடிப்பு நின்று போயிருக்கும், அந்த அளவுக்கு கடினமான் நிலப்பரப்பு அது, அதில் எந்தவித கஷ்ட்டத்தையும் வெளிக்காட்டாமல் நடித்துக் கொடுத்தார். நல்ல குழு அமைந்தாலே நமக்கு பெரிய நம்பிக்கை வரும், அப்படி ஒரு நம்பிக்கையை படத்தில் பணியாற்றைய அனைவரும் கொடுத்தார்கள்.  பாலசரவணன் பண்ணையாரும் பத்மினியும் படத்தில் இருந்தே நண்பர். ஏதோ வந்தோம், நடித்தோம் என்று அவர் இருக்க மாட்டார். ஒரு கதாபாத்திரம் என்று சொன்னால் அதன் வசனம் உள்ளிட்ட அனைத்தையும் முன் கூட்டியே வங்கிக்கொண்டு, அந்த கதாபாத்திரத்தை எப்படி இன்னும் சிறப்பாக செய்யலாம், என்று யோசிக்க தொடங்கி விடுவார். அவரை காமெடி வேடத்தில் காட்டாமல் வித்தியாசமான வேடத்தில் காட்ட வேண்டும் என்று நினைத்தோம். ஆனால், அதை அவர் விலங்கு தொடரில் செய்துவிட்டார். அதன் பிறகு இந்த படத்தில் செய்திருக்கிறார்.







படம் முடிந்துவிட்டது, அதன் பிறகு அந்த படத்தின் மீது ஒரு ஒளி விழ வேண்டும் அல்லவா அது தான் வெரூஸ் நிறுவனம், முஜீப்,  சஞ்சய், ராஜராஜன், டனிஸ் ஆகியோருக்கு நன்றி. முஜீப் சார் வந்த பிறகு தான் இந்த படம் பெரிய அளவில் உருவானது. நான் பல வருடங்களாக உங்களை சந்தித்துக் கொண்டிருக்கிறேன், நீங்கள் அனைவருக்கும் உங்களது ஆதரவை பலருக்கு கொடுத்து வருகிறீர்கள், எங்களுக்கும் உங்கள் ஆதரவு தேவை என்று கேட்டுக்கொள்கிறேன். ‘பேச்சி’ ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகிறது, திரையரங்குகளில் சென்று பாருங்கள் நன்றி.” என்றார்.

No comments:

Post a Comment