Featured post

From Fan Power to Social Power: Allu Arjun Fans Take HPV Awareness to 3 Lakh Girls Across India

 *From Fan Power to Social Power: Allu Arjun Fans Take HPV Awareness to 3 Lakh Girls Across India* 8 States. 820 School Awareness Events. 3 ...

Saturday, 13 July 2024

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2: தி ரூல்’ படத்தை ஏஜிஎஸ்

 *ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2: தி ரூல்’ படத்தை ஏஜிஎஸ் புரொடக்ஷன் தமிழகத்தில் வெளியிட உள்ளது!*



நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களை வெளியிடுவதற்கும் தயாரிப்பதற்கும் ஒரு தயாரிப்பு நிறுவனம் நிபந்தனையற்ற அர்ப்பணிப்பைக் காட்டும்போது சினிமா அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர்கிறது. தமிழ்த் திரையுலகில் அதுபோன்ற புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏஜிஎஸ் புரொடக்ஷன், பிரமாண்டமான படங்களைத் தயாரித்து வருகிறது. அதே நேரத்தில், 'கான்ஜூரிங் கண்ணப்பா' மற்றும் 'லவ் டுடே' போன்ற தனித்துவமான கதையம்சம் சார்ந்த திரைப்படங்களையும் தயாரித்து பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்து வருகிறது. 


செப்டம்பர் 5, 2024 அன்று, வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் 'GOAT' படம் மூலம் ரசிகர்களின் கவனத்தை மீண்டும் ஈர்த்துள்ளது இந்தத் தயாரிப்பு நிறுவனம். இதனையடுத்து, மிகவும் எதிர்பார்க்கப்படும் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனின் பான் இந்தியன் படமான 'புஷ்பா 2: தி ரூல்'-ஐ டிசம்பர்6, 2024 அன்று ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தமிழ்நாடு முழுவதும் வெளியிடுகிறது. 


வர்த்தக வட்டாரத்திலும் அனைத்துத் தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக 'புஷ்பா2: தி ரூல்' உள்ளது. படம் வெளியாக இன்னும் சில மாதங்கள் இருக்கும் நிலையில், சினிமாத்துறையின் வர்த்தக வட்டாரத்தில் இந்தப் படம் மிகப்பெரிய பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்‌ஷனை கொடுக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

No comments:

Post a Comment