Featured post

#STR49 Movie Launched with a Grand Pooja Ceremony!

 #STR49 Movie Launched with a Grand Pooja Ceremony! Kicking off with a grand pooja ceremony, the much-awaited film #STR49—starring the ever-...

Thursday, 3 April 2025

விக்ரம் பிரபு நடிக்கும் 'லவ் மேரேஜ்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

 *விக்ரம் பிரபு நடிக்கும் 'லவ் மேரேஜ்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு*

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான விக்ரம் பிரபு நடிக்கும் 'லவ் மேரேஜ்' படத்தில் இடம்பெற்ற திரையிசையுலகின் சென்சேஷனல் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் எழுதி, இசையமைத்து பாடிய பாடலும், அவரே திரையில் தோன்றி நடனமாடும் ப்ரமோஷனல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில் உருவாகியுள்ள ' லவ் மேரேஜ் ' எனும் திரைப்படத்தில் விக்ரம் பிரபு , கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மம்முட்டி நடித்த 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' பட புகழ் நடிகை சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜ ராஜ், முருகானந்தம்,  கோடாங்கி வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் சத்யராஜ் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். மதன் கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் கவனிக்க , தயாரிப்பு வடிவமைப்பை எம். முரளி மேற்கொண்டிருக்கிறார். கிராமிய பின்னணியில் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை அஸ்யூர் பிலிம்ஸ் - ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் டாக்டர் ஸ்வேதா ஸ்ரீ மற்றும் ஸ்ரீநிதி சாகர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். 

எதிர்வரும் கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை கவர்ந்தது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற 'கல்யாண கலவரம் 'எனும் முதல் பாடலும், பாடலுக்கான ப்ரமோஷனல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தப் பாடலை பாடலாசிரியரும் இசையமைப்பாளருமான ஷான் ரோல்டன் எழுதி, பாடியிருக்கிறார். உற்சாகத்தை பரவச் செய்யும் பெப்பியான பாடலாக உருவாகி இருக்கும் இந்த பாடல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக ஈர்த்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் டீசர் வெளியீடு உள்ளிட்ட  புதிய அப்டேட்டுகளை விரைவில் வெளியிட உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

https://youtu.be/v6GTVhiIBn4*விக்ரம் பிரபு நடிக்கும் 'லவ் மேரேஜ்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு*

https://youtu.be/v6GTVhiIBn4

No comments:

Post a Comment