Featured post

பறந்து போ’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

 *’பறந்து போ’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!*  ஜியோ ஹாட்ஸ்டார் - ஜிகேஎஸ் புரொடக்‌ஷன் - செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப...

Tuesday, 8 July 2025

புதுமுகங்களுடன் சையாரா படத்தை உருவாக்கும் எண்ணத்தை கைவிட்டிருந்தேன், ஏனெனில் நடிப்புத் திறனுடைய

 *"புதுமுகங்களுடன் சையாரா படத்தை உருவாக்கும் எண்ணத்தை கைவிட்டிருந்தேன், ஏனெனில் நடிப்புத் திறனுடைய புதுமுகங்களை நான் கண்டுபிடிக்கவில்லை ": மோஹித் சூரி*



சையாரா திரைப்படம் நீண்ட காலத்திற்குப் பிறகு பாலிவுட் திரையுலகில் புதுமுக நடிகர்களுடன் உருவாகியுள்ள படம் . யஷ் ராஜ் பிலிம்ஸ்  இன்று சையாராவின் டிரெய்லரை வெளியிட்டனர். தற்போது இந்த ட்ரைலர்  இணையத்தில் வைரலாகி வருகிறது.


மோஹித் சூரி கூறுகையில், "ஒரு கட்டத்தில், நடிப்புத் திறனுடைய புதுமுகங்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால், புதுமுகங்களுடன் சையாராவை உருவாக்கும் எண்ணத்தை கைவிட்டிருந்தேன். ஆனால், அஹான் பாண்டே மற்றும் அனீத் பட்டாவின் திறமையான நடிப்பால் எனது எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்தது " என மகிழ்ச்சியுடன் கூறுகிறார் மோஹித்.


மேலும், இது குறித்து மோஹித் கூறுகையில், "அஹான் பாண்டே மற்றும் அனீத் பட்டா போன்ற திறமையான நடிகர்களைக் கண்டுபிடிக்காவிட்டால் நான் சையாரா படத்தை உருவாக்கியிருக்க முடியாது. இளம் காதல் கதையை உருவாக்குவதற்காக யஷ் ராஜ் நிறுவனத்தில் அஹான் மற்றும் அனீத்தை தயார் செய்து கொண்டிருந்தபோது, அவர்களை வைத்து வேறு ஏதாவது ஒரு படத்தை உருவாக்குவது பற்றி யோசித்தேன்.


"புதுமுகங்களுடன் ஒரு காதல் கதையை உருவாக்கும்போது, அவர்கள் உணர்ச்சிகரமான நடிப்பு நம்பகத்தன்மையுடன் இருக்க  வேண்டும், இதனால் காதல் கதை மக்களுக்கு உண்மைக்கு நெருக்கமாக தோன்றும். புதுமுகங்கள் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் அளவிற்கு நடிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை, ஆனால் அவர்கள் திரையில் தங்களைத் தாங்கி நிற்கக்கூடிய நடிகர்களாக இருக்க வேண்டும்."


மோஹித் மேலும் கூறுகையில், "வணிக ரீதியான வியாபாரத்திற்காக பிரபல நடிகர்களுக்காக இந்தக் கதையை மாற்றியிருந்தேன். ஆனால், சையாரா படத்தின் திரைக்கதைக்காக சற்று நேரம் எடுத்தது, பின்னர் யஷ் ராஜ் நிறுவனத்தை சந்தித்தேன். அஹான் மற்றும் அனீத்தின் ஆடிஷன்களைப் பார்த்து, அவர்களின் நடிப்பு, அறிவு மற்றும் உணர்ச்சி ஆழத்தை உறுதிப்படுத்த அவர்களுடன் சில நேரங்களை செலவிட்டேன்.புதுமுகங்களுடன் ஒரு காதல் கதையை உருவாக்குவது மிகவும் புத்துணர்ச்சி அளிக்கிறது.இவர்கள் இருவரையும் இந்த படத்திற்காக கண்டதற்கு நான் மகிழ்ச்சியடைகிறேன் ''என கூறினார்.


 

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சையாரா படத்தின் இசை ஆல்பம் இந்த ஆண்டிற்கான சிறந்த ஆல்பமாக உள்ளது. பஹீம் அர்ஸ்லானின் சையாரா டைட்டில் ட்ராக் பாடல், ஜூபின் நௌதியாலின் பர்பாத் பாடல், விஷால் மிஸ்ராவின் தும் ஹோ தோ பாடல், சச்சேத்-பரம்பராவின் ஹம்சஃபர், மற்றும் அர்ஜித் சிங், மிதூனின் தூன் ஆகியவை இந்தியளவில் சையாரா இசை ஆல்பம் இடம்பெற்றது. 


யஷ் ராஜ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி அக்ஷய் விதானி, சையாரா பட தயாரிப்பாளர் கூறுகையில் , " யஷ் ராஜ் நிறுவனம், மக்களின் மனதில் நீண்ட காலம் நிலைத்திருக்கும் காதல் கதைகளை உருவாக்குவதற்கு பெயர் வாய்ந்தது .யஷ் நிறுவனம்.  இன்றைய இளைஞர்களின் உணர்வுகள், உணர்ச்சிகள் மற்றும் அர்ப்பணிப்புகளின் ஆழத்தைக் காட்டி, அவர்களுடன் இணைந்து ஒரு உண்மையான காதல் கதையைச் கூற விரும்பினோம், மேலும் சையாரா படத்தை தயாரித்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்."


அவர் மேலும் கூறுகையில், "இது யஷ் ராஜ் நிறுவனத்திலிருந்து உருவான இயல்பான காதல் கதையாகும், ஆனால்  கடந்த 20 ஆண்டுகளாக அனைவரும் விரும்பிய விண்டேஜ் மோஹித் சூரி காதல் கதையின் அனைத்து அம்சங்களும் இந்த படத்தில் உள்ளது .புதுமுகங்களுடனான ஒரு தீவிர காதல் கதை நீண்ட காலமாக உருவாக்கப்படவில்லை.எங்கள் பார்வையாளர்கள் இந்த படத்தை மிகவும் புத்துணர்ச்சியாகக் காணுவார்கள் என்று நம்புகிறோம்."


சையாரா, அஹான் பாண்டேயை யாஷ் ராஜ் நிறுவனம் ஹீரோவாக அறிமுகப்படுத்துகிறது. மிகவும் பாராட்டப்பட்ட பிக் கேர்ள்ஸ் டோன்ட் க்ரை என்ற தொடரில் தனது அற்புதமான நடிப்பால் இதயங்களைக் கவர்ந்த அனீத் பட்டாவை யஷ் ராஜ் நிறுவனம் கதாநாயகியாக தேர்ந்தெடுத்துள்ளது.


சையாரா திரைப்படம் வருகின்ற ஜூலை 18ந் தேதியன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியாகிறது.

No comments:

Post a Comment