Freedom Movie Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம freedom ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்துல Sasikumar, Lijomoljose, Malavika Avinash, Bosevenkat, Rameshkhanna, Sudevnair, Manikandan னு பலர் நடிச்சிருக்காங்க. இந்த படத்த இயக்கி இருக்கிறது satyasiva. சோ வாங்க இந்த படத்தோட கதை என்னனு பாக்கலாம்.
உண்மை சம்பவங்கள தழுவி எடுக்க பட்ட திரைப்படம் தான் freedom னு சொல்லலாம். ஒரு gripping ஆனா political thriller படமா கொண்டு வந்திருக்காங்க. 90 ல நம்ம நாட்டோட prime minister அ இருந்த rajiv gandhi அவர்கள assasinate பண்ணாங்க னு உங்க எல்லாருக்கும் தெரியும். இந்த விஷயத்தை base பண்ணி webseries படம் னு நெறய வந்திருச்சு. அதே வரிசைல இந்த சம்பவத்துக்கு அப்புறம் நடக்கற investigation அதோட தாக்கம் எப்படி இருந்தது ன்றது தான் இந்த படத்தோட
கதையா இருக்கு.
இந்த assasination நடந்துக்கு அப்புறம் srilanka ல இருந்து நெறய மக்கள் இந்தியா க்கு அகதிகளா வந்திருப்பாங்க. இவங்க எல்லாரும் முதல ராமேஸ்வரம் ல தான் தங்கி இருப்பாங்க. இவங்க எல்லாரும் LTTE ன்ற military group அ சேந்தவங்க ன்ற சந்தேகத்தின் அடிபடைல இவங்கள vellore fort ல arrest பண்ணி investigate பண்ணறாங்க.
ஆன investigation ன்ற பேர்ல அந்த அகதிகள அடிச்சு கஷ்டபடுத்துறாங்க. இந்த investgation ல இருந்து தப்பிக்கிறதுக்காக அந்த இடத்துல இருந்து underground ல ஒரு tunnel அ உருவாக்கி அங்க இருந்து இந்த அகதிகள் தப்பிக்கறாங்க. இந்த investigation எப்படி நடக்குது, கைது பண்ணி வச்சிருக்க 43 பேர் என்ன ஆகுறாங்க ன்றது தான் இந்த படத்தோட முழு கதையை இருக்கு னு சொல்லாம்.
இந்த படத்துல நடிச்சிருக்க actors ஓட performance அ பாத்தோம்னா. சசிகுமார் ஓட் நடிப்பை பத்தி சொல்லியே ஆகணும். இவரு தொடர்ந்து நல்ல நல்ல படங்களா unique ஆனா realistic ஆனா கதைகளை தேர்ந்து எடுத்து நடிச்சிட்டுருக்காரு. அந்த வகைல இந்த படமும் இவரோட career ல one of the best movie னு சொல்லாம். அந்த அளவுக்கு super அ நடிச்சிருக்காரு. இவரும் அந்த 43 அகதிகளை ஒருத்தர். இந்த இடத்துலயே அடைப்பட்டு இருந்த கண்டிப்பா செத்துருவோம் னு தைரியத்தை வர வளச்சு அங்க இருந்து தப்பிக்கற வரைக்கும் அவ்ளோ எமோஷனல் அ நடிச்சிருக்காரு.
அடுத்ததா lijomol jose, இவங்க நடிக்கற படங்கள் எல்லாமே விதயசமா தான் இருக்கும். இந்த படத்துல இவங்க character க்கு அவ்ளோ detail குடுக்கலானாலும் இவங்க வந்துட்டு போற எல்லா scenes யுமே அவ்ளோ super அ இருக்கு. sudev nair தான் police officer அ நடிச்சிருக்காரு. இவரு அகதிகள அடிக்கிறது அவங்கள டார்ச்சர் பண்றது னு ஒரு வில்லத்தனமான நடிப்பை வெளி படுத்தி இருக்காரு னு தான் சொல்லணும்.
இந்த படத்துக்கு மிக பெரிய plus point ன அது கண்டிப்பா ghibran ஓட music அண்ட் bgm. ஓவுவுரு எமோஷனல் scenes க்கும் பின்னாடி வர இந்த மியூசிக் அப்படியே இந்த கதையோட உலகத்துக்கு audience அ எடுத்துட்டு போகுது னு சொல்லாம். அடுத்து பாத்தீங்கன்னா இந்த படத்தோட cinematography . ஓவுவுறு characters ஓட emotional side மக்களுக்கு நல்ல புரியனும் ண்றதுக்காக நெறய closeup shots எடுத்திருக்காங்க. அந்த அகதிகளோட பயம், சந்தேகம், கவலை னு எல்லாமே அவ்ளோ துல்லியமா camera ல பதிவு பண்ணிருக்காங்க னு தான் சொல்லனும்.
ஓரூ historical event அ choose பண்ணி, genuine அ இந்த கதையை கொண்ட வந்த விதம் துக்கு நம்ம கண்டிப்பா director அ பாராட்டி ஆகணும். இந்த படத்தோட technical aspects அ இருக்கட்டும், sincere ஆனா கதைக்களம், actors ஓட strong ஆனா performance னு ஒரு தரமான படத்தை தான் குடுத்திருக்காங்க. இந்த படத்தை பாக்கும் போது ஒரு memorable ஆனா experience கிடைக்கும். நாளைக்கு அதாவுது 10th july அன்னிக்கு release ஆகுது. சோ கண்டிப்பா இந்த படத்தை theatre ல போய் பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.
No comments:
Post a Comment