Featured post

Yellow Movie Review

Yellow Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம yellow படத்தோட review அ தான் பாக்க போறோம். Hari Mahadevan இயக்கி இருக்கற இந்த படத்துல Poorni...

Friday, 21 November 2025

தமிழ் சினிமாவில் ‘ஜூடோபியா’ திரைப்படம் உருவானால் எந்த நடிகர்கள்

 *தமிழ் சினிமாவில் ‘ஜூடோபியா’ திரைப்படம் உருவானால் எந்த நடிகர்கள் படத்தின் கதாபாத்திரங்களில் பொருந்திப் போவார்கள்?*





‘ஜூடோபியா’ திரைப்படம் தமிழில் உருவாகும்போது உணர்வுப்பூர்வமான, ஸ்டைலிஷான அதிரடி சாகசங்களுடன் அதேசமயம் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இருக்கும். ’ஜூடோபியா’ திரைப்படத்தின் ஒவ்வொரு முக்கிய கதாபாத்திரத்திலும் எந்தெந்த தமிழ் சினிமா நடிகர்கள் பொருந்திப் போவார்கள் என்பதை இங்கு பார்க்கலாம். 


*ஜூடி ஹாப்ஸ் கதாபாத்திரத்தில் நடிகை நயன்தாரா:*

ஜூடி ஹாப்ஸ் கதாபாத்திரத்திற்கு தேவையான நிலையான உறுதிப்பாடு மற்றும் கருணை ஆகியவற்றை மிகச்சரியாக தன் நடிப்பில் பிரதிபலிப்பதில் திறமையானவர் நடிகை நயன்தாரா. தமிழ் சினிமா கதைப்படி ஜூடி தொடர்ந்து குறைத்து மதிப்பிடப்பட்டாலும், ஒரு போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்று கனவு காணும் தமிழ்நாட்டின் கடைக்கோடி கிராமத்தை சேர்ந்த ஒரு எளிய பெண். புத்திசாலித்தனம், தைரியம் மற்றும் வலிமையான உணர்வுகள் ஆகியவற்றை பிரதிபலிக்கும் பல கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் நயன்தாரா. ஜூடியாக அவரது வெர்ஷன் மிகவும் தீவிரமானதாகவும், நம்பிக்கையுடன் தனது கனவு நோக்கி பயணிக்கும் யதார்த்தமான பெண்ணை தனது நடிப்பில் சிறப்பாக கொண்டு வருவார். நீதி மற்றும் சமூக மாற்றத்தினை எதிர்நோக்கும் சக்திவாய்ந்த மற்றும் ஊக்கமளிக்கும் பயணமாக ஜூடி கதாபாத்திரத்தை நயன்தாரா மாற்றுவார்.


*நிக் வைல்ட் கதாபாத்திரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன்:*

இயல்பான நகைச்சுவை, வசீகரம், ஆண்களுக்கே உரித்தான குறும்பு என நிக் வைல்ட் கதாபாத்திரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மிகச்சரியாக பொருந்திப் போவார். மென்மையான பேச்சு, புத்திசாலித்தனம், தனது காயங்களை மனதிற்குள் மறைத்தல் போன்றவை நிக் கதாபாத்திரத்தின் தன்மை. இவற்றோடு நகைச்சுவை, உள்ளூர் பேச்சுவழக்கு மற்றும் உணர்ச்சிகரமான பல தருணங்களை தனது நடிப்பில் சிவகார்த்திகேயன் நிச்சயம் கொண்டு வருவார். விளையாட்டுத்தனமாகவும் பல உணர்வுகளையும் கொண்ட ஜூடி மற்றும் நிக் கூட்டணிக்கு நயன்தாரா மற்றும் சிவகார்த்திகேயன் சரியாகப் பொருந்திப் போவார்கள். 



*கேரி டி'ஸ்னேக் கதாபாத்திரத்தில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா:*

ஜூடி மற்றும் நிக் ஆகியோரால் துரத்தப்படும் கேரி ஒரு விரியன் பாம்பு என்பதால் இந்த கதாபாத்திரத்தில்  நடிகர் எஸ்.ஜே. சூர்யா மிகச்சரியாகப் பொருந்திப் போவார். உணர்வுகளை வெளிப்படுத்தும் எஸ்.ஜே. சூர்யாவின் குரல், வசீகரம் ஆகியவை கேரியின் ஆளுமைக்கு சரியாக பொருந்துகின்றன. தமிழ் வெர்ஷனில் கேரி வேகமாகப் பேசும் மற்றும் கணிக்க முடியாததாகவும் இருக்கும். அவர் தனது குடும்பத்தைக் காப்பாற்றும் விரக்தியில் மட்டுமே குற்றங்களைச் செய்கிறார் என்பதை வெளிப்படுத்தும் வரை அவர் நோக்கங்கள் தெளிவற்றதாகவும் இருக்கும். எஸ்.ஜே. சூர்யா நகைச்சுவையான, உணர்ச்சிவசப்பட்ட, சற்று குழப்பமான மற்றும் அனுதாபமுள்ள ஒரு கதாபாத்திரத்தை திரையில் சித்தரிக்க முடியும். இது தமிழ் சினிமா ரசிகர்கள் விரும்புபடியாகவும் இருக்கும். ஜூடி மற்றும் நிக்குடனான துரத்தலுடன் கேரியின் பயணம் தமிழ் சினிமா பாணியில் ஆடம்பரமாகவும், சஸ்பென்ஸாகவும், ஸ்டைலாக இருக்கும்.


*கெஸல் கதாபாத்திரத்தில் நடிகை ஆண்ட்ரியா ஜெரேமியா:*

கெஸல்லின் கவர்ச்சி, நளினம் மற்றும் இசை ஒளிக்கு நடிகை ஆண்ட்ரியா சரியாக பொருந்துகிறார். அவரது நம்பிக்கை, நவீன பிம்பம் மற்றும் பாடும் திறமை ஆகியவை கெஸல் கதாபாத்திரத்தின் கலை நுணுக்கத்தைப் பெறுவதோடு, ’ஜூடோபியா’ படத்தின் பாப்-ஸ்டார் அழகைத் தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது. ஆண்ட்ரியாவின் கெஸல் ஒரு நடிகையாக மட்டுமல்லாமல், மோதல்கள் நிறைந்த ’ஜூடோபியா’வில் ஒற்றுமையை ஊக்குவிக்க தனது குரலைப் பயன்படுத்தும் நபராகவும் இருப்பார். அவரது உலகளாவிய பாடல்களில் தமிழ் இசையையும் இணைக்க முடியும். 


*சீஃப் போகோ கதாபாத்திரத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ்:*

சீஃப் போகோ கதாபாத்திரத்திற்கு கட்டளையிடும் குரல், அதிகாரபூர்வமான நடத்தை, உறுதியான ஆனால் இறுதியில் நியாயமான தலைவராக நடிக்கும் திறன் தேவை. இந்த அனைத்து குணங்களையும் நடிகர் பிரகாஷ் ராஜ் சிறப்பாக திரையில் பிரதிபலிப்பார். போகோவின் அவரது வெர்ஷன் கண்டிப்பான, புத்திசாலித்தனமான காவல்துறை அதிகாரியாக இருக்கும். ஆரம்பத்தில் சிறியவளான ஜூடியை நிராகரித்தவர் பின்னர் படிப்படியாக அவளுடைய திறனை அங்கீகரிக்கிறார். தீவிரமான, பல உணர்வுகளுடன் மிகவும் வலுவான போகாவை திரையில் நடிகர் பிரகாஷ்ராஜ் பிரதிபலிப்பார். கதை அடுத்தடுத்து நகரும்போது, அவர் காவல்துறையின் சக்திவாய்ந்த அடித்தளமாக மாறுகிறார். இட்ரிஸ் எல்பாவின் அசல் தன்மையை கொண்டு வருவதுடன் தமிழ் சினிமாவுக்கும் ஏற்றபடி இந்தக் கதாபாத்திரத்தை பிரகாஷ் ராஜ் திறமையுடன் கையாள்வார்.

No comments:

Post a Comment