Featured post

Carmeni Selvam Movie Review

 Carmeni Selvam  Tamil Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம carmeni selvam  படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்துல Samuthiraka...

Thursday, 2 April 2026

Yaan Foundation வழங்கும் “அகரவா மகரவா ” ஆன்மிக ஆல்பம் பாடல் வெளியானது!!

 Yaan Foundation வழங்கும் “அகரவா மகரவா ” ஆன்மிக ஆல்பம் பாடல் வெளியானது!!


காற்றோடு பட்டம் போல, நீலோத்தி பாடலை எழுதிய சாரதி எழுதியுள்ள சிவன் பாடல் " அகரவா மகாரவா "










இறைவன் சிவபெருமானின் பெருமை, தெய்வீக ஆற்றல் மற்றும் ஆன்மிக உணர்வுகளை உணர்த்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள “அகரவா மகரவா” என்ற புதிய ஆன்மிக ஆல்பம் பாடல் தற்போது வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. Yaan Foundation வழங்கியுள்ள இந்த பாடல், பக்தி மற்றும் ஆன்மிக சிந்தனைகளை அழகாக இணைக்கும் விதத்தில் உருவாகியுள்ளது.


இந்த பாடல் வெளியீட்டு விழா நேற்று பிரசாத் திரையரங்கில் நடைபெற்றது.  திண்டுக்கல் சிவபுர ஆதீனம்     ஸ்ரீலஸ்ரீ திருநாவுக்கரசு தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், திருமதி.தேச மங்கையர்கரசி, முனைவர் சிவ.சதீஷ்குமார் ,பல்கலை வித்தகி திருமதி.ரேகா மணி மற்றும்  திரைப்பட இயக்குனர்கள் இயக்குனர் ரோமியோ ஜூலியட் லஷ்மன், வசந்தமணி , சுகுமார் அழகர்சாமி, s.சாம் , ராஜவேல்  ஆகியோர் கலந்து கொண்டு இந்த ஆமீக பாடலை வெளியிட்டனர்.


இந்த பாடலை பிரபல ஆன்மிக பாடகர் கோல்ட் தேவராஜ் அவர்கள் ஆழ்ந்த உணர்வுகளுடன் பாடியுள்ளார். அவரது குரல், பாடலின் பக்தி உணர்வை மேலும் உயர்த்துகிறது.


பாடலின் வரிகளை, “நீலோத்தி”, “கற்றோடு பட்டம் போல” போன்ற மிக பிரபலமான சினிமா பாடல்களை எழுதிய சாரதி எழுதியுள்ளார். எளிய சொற்களிலும் ஆழமான அர்த்தங்களிலும் அமைந்துள்ள இந்த வரிகள், கேட்பவர்களின் மனதில் நீங்கா தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.


இந்த பாடலுக்கு இசையை கணேஷ் ராகவேந்திரா அமைத்துள்ளார். ஆன்மிகத்தையும், இசை நயத்தையும் இணைக்கும் வகையில் இசை வடிவமைக்கப்பட்டுள்ளது.


இயக்குனர் சமுத்திரக்கனி மற்றும் லக்ஷ்மன் இருவரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றிய  சாவியோ  இந்த பாடலை இயக்கியுள்ளார்.


எடிட்டிங் மற்றும் AI பணிகளை கௌதம் மேற்கொண்டுள்ளார். தயாரிப்பாளர்களாக பிரதீப் குமார் – தீபா செயல்பட்டுள்ள நிலையில், தயாரிப்பு நிர்வாகியாக முஹம்மது பிலால் ஆகியோர் இந்த ஆல்பத்தை முன்னெடுத்து வருகின்றார்.


மொத்தத்தில், “அகரவா மகரவா” ஆன்மிக பாடல், பக்தி இசையை விரும்பும் ரசிகர்களுக்கு சிவனின் பக்தர்களுக்கும் ஒரு சிறந்த அனுபவமாக அமைந்துள்ளது. இப்பாடல்  வெளியானவுடன் சமூக வலைதளங்களில் தற்போது நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.                                        இந்த பாடலை யான் அறக்கட்டளையின் YaanTamil என்ற youtube சேனலில் பார்த்து மகிழலாம்.  


song link  ;   https://youtu.be/fi0T5plA4II?si=WbTlGXviINTmSycl


No comments:

Post a Comment