Featured post

New Spider-Man: Brand New Day Poster Shows Tom Holland Suited Up For His Next Big Adventure

 *New Spider-Man: Brand New Day Poster Shows Tom Holland Suited Up For His Next Big Adventure* _Spider-Man: Brand New Day is set to release ...

Showing posts with label kaviperarsu Vairmuthu. Show all posts
Showing posts with label kaviperarsu Vairmuthu. Show all posts

Thursday, 14 February 2019

காதலர் தினத்தில் ஒரு காதல் பாடல்

காதலன் காதலியைக் கைவிடுவதுண்டு; காதலி காதலனைக் கைவிடுவதுண்டு. ஆனால், ஒரு காதல் படமே கைவிடப்பட்ட வருத்தத்திலிருக்கிறார் கவிஞர் வைரமுத்து. கைவிடப்பட்டதாகக் கருதப்படும் ‘வர்மா’ படத்தின் அத்தனை பாடல்களையும் கவிஞர் வைரமுத்து எழுதியிருக்கிறார். இளமையான காதல் கதை என்பதாலும், காதலர் தினத்தில் வெளியிடப்படவிருக்கிறது என்பதாலும் கூடுதல் ஆர்வத்தோடு எல்லாம் வரிகளையும் இளமை பொங்க எழுதியிருந்தார் கவிஞர் வைரமுத்து. பாலாவும் ரசித்து ரசித்து, வரிகளைச் சொல்லிச் சொல்லி உருகிப்போனார். இது மெட்டுக்குள் எழுதப்பட்ட கவிதையென்று இசையமைப்பாளர் ரதனும் பூரித்துப்போனார். நடிகர் விக்ரமுக்கு அறிமுகப் பாடல் எழுதிய கவிஞர் வைரமுத்து, அவரது மகன் துருவுக்கும் அறிமுகப் பாடல் எழுதியிருந்தார். இளம் காதலர்கள் முதல்முறையாக உணர்ச்சிவசப்பட்டு எல்லை தாண்டுகிற சூழலுக்குப் பாட்டு கேட்டபோது வைரமுத்து கொஞ்சம் யோசித்தாராம். கட்டிலில்கூடக் கலை இருக்கவேண்டுமே தவிர ஆபாசம் வந்துவிடக்கூடாது என்று கவனமாக வார்த்தைகளைக் கையாண்டாராம். ஆண் – பெண் நாடகத்தைப் பூடகமாகச் சொல்ல வந்த இந்தப் பாட்டு படப்பிடிப்புத் தளத்தில் பரபரப்பாகிவிட்டதாம். காதலும் படமும் கைவிடப்பட்டாலும், காதல் பாடல் கைவிடப்படுவதில்லை.
இதோ அந்தக் காதல் பாட்டு :
மழையில்லை மேகமில்லை – ஆயினும்
மலர்வனம் நனைகின்றதே                                                                                 திரியில்லை தீயுமில்லை – ஆயினும்                                                     திருவுடல் எரியுண்டதே
ஒருவரின் சுவாசத்திலே
இருவரும் வாழுகின்றோம்
உடல் என்ற பாத்திரத்தில்
உயிர்ப்பொருள் தேடுகின்றோம்
காற்றில் ஒலிபோலே
கடலில் மழைபோலே
இருவரும் ஒருவரில் ஒன்றினோம்
*
பூக்கள் ஒன்றுதிரண்டு                                      படைகூட்டி வருவதுபோல்                                        இன்பம் ஒன்றுதிரண்டு
என்மீது பாய்கிறதே
என் ஆவி பாதி குறைந்தால்
என் மேனி என்னாகும்?ஆகாயம் அசைகிறபோது
விண்மீன்கள் என்னாகும்?
தரையில் கிடந்தேனே
தழுவி எடுத்தாயே
தலைமுதல் அடிவரை நிம்மதி
*
பண்ணும் தொல்லைகளெல்லாம்                                                                                       துன்ப வாதை செய்கிறதே                             இன்னும் தொல்லைகள் செய்ய   பெண்ணின் உள்ளம் கெஞ்சியதே
திறக்காத ஜன்னல்கள் எல்லாம்
திடுக்கிட்டுத் திறக்கிறதே
எனக்குள்ளும் இத்தனை அறையா
எனக்கின்று புரிகிறதே
மழையில் தலைசாயும்
இலையின் நிலைபோல
எனதுயிர் உன்வசம் ஆனதே

Sunday, 10 February 2019

தமிழாற்றுப்படை - அவ்வையார் - கவிஞர் வைரமுத்து பேச்சு

‘தமிழாற்றுப்படை’என்ற தலைப்பில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் மூலம் தமிழ் மொழியின் மூவாயிரம் ஆண்டு ஆளுமைகளைஇளைய தலைமுறைக்கு அறிமுகம் செய்து    வருகிறார் கவிஞர் வைரமுத்துஅந்த வரிசையில் 22ஆம் ஆளுமையாக அவ்வையார்குறித்த கட்டுரையை நேற்று சென்னை, ராஜா அண்ணாமலை மன்றத்தில் அரங்கேற்றினார்மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தகைசால் பேராசிரியர் இரா.மோகன் விழாவுக்குத் தலைமை தாங்கினார்கவிஞர் கபிலன் வைரமுத்து தொடக்கவுரை ஆற்றினார்.
விழாவில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது :
தமிழ் இலக்கிய நெடுங்கணக்கில் அவ்வையார் என்பவர் ஒருவரல்லர்ஒன்றுக்கு மேற்பட்ட சிலர் அல்லது பலர் அவ்வையார்என்ற பெயரில் இயங்கியிருக்கலாம்சங்ககால அவ்வையார் என்றும் நீதிநூல் அவ்வையார் என்றும் அவ்வை இலக்கியத்தை நான்இரண்டாகப் பிரிக்கிறேன்.
ஆணாதிக்கச் சமுதாயத்தில் பெண்களுக்கான ஒழுக்க விதிகளையும் ஆண்களே தீர்மானித்த காலத்தில், ஆண்களுக்கான ஒழுக்கவிதிகளையும் எழுதிய பெண்ணியப் பெரும்புலவர் என்று சங்ககால அவ்வையைக் கொண்டாடலாம்நாடோ காடோ, பள்ளமோ மேடோஆடவர்கள் நல்வழியில் வாழ்ந்தால்தான் அந்த நிலம் நலம் பெறும் என்று சட்டம் வகுத்தவர் சங்ககால அவ்வை.
பிற்காலச் சோழர் காலத்தைச் சார்ந்தவராகக் கருதப்படும் பிற்கால அவ்வை அறம்பாடிச்சென்ற திறம்மிக்க பெருமாட்டி. சங்ககால அவ்வை பாடியது கற்றவரைச் சென்றடைந்த இலக்கியமானது. பிற்கால அவ்வையின் பாடல்களோ கல்லாதவர் வாயிலும் புழங்கிய பழமொழி போன்றது.
அவ்வையார் யாருக்கும் அஞ்சாத பெண்மணிவள்ளுவரும் இளங்கோவும் கம்பனும்கூட வரையறுக்காத ஒரு கருத்தைஅவ்வையார் சொல்லியிருக்கிறார். கற்பு என்றால் என்ன என்று எந்தப் புலவனும் வரையறுக்கவில்லைஅது பெண்ணின்உடலோடும் மனதோடும் சம்பந்தப்பட்டது என்று மட்டுமே கருதப்பட்டது. அது பெண்ணுக்கு மட்டுமே உரியது என்றுஓரவஞ்சனையுடன் உணர்த்தப்பட்டது. அவ்வையார் ஒருவர்தான் கற்புக்கு இலக்கணம் சொன்னார்
சொன்ன சொல் மாறாததன்மைதான் கற்பு” என்ற பொருளில் “கற்பெனப்படுவது சொல் திறம்பாமை” என்று ஓங்கி அடித்தார்ஆண் பெண் என்றஉடல்களைத் தாண்டி வாக்குத் தவறாத நேர்மைதான் கற்பு என்று மனிதகுலத்துக்கே பொதுவான அறமாக்கினார்அப்படிப்பார்த்தால் சொன்ன வார்த்தையைக் காப்பாற்றும் அனைவரும் கற்புடையவர்களே, தவறினால் அனைவரும் கற்பிழந்தவர்களேஎன்பது அவ்வையின் அளவுகோல்.
அவ்வையார் போன்ற அறிவுஜீவிகளையும் கூழுக்கு அலையவிட்டதுதான் தமிழ் உலகம் செய்த தவறுபாண்டிய மன்னனின்வீட்டுத் திருமணத்திற்கு சென்ற அவ்வையார் பந்தியில் இடம்பிடிக்கமுடியாமல் பட்டினி கிடந்திருக்கிறார். “நெருக்குண்டேன் தள்ளுண்டேன் நீள்பசியினாலே சுருக்குண்டேன் சோறுண்டிலேன்” என்று பாடியிருக்கிறார்.அவ்வையார் காலத்திலிருந்துஆண்ட்ராய்டு காலம் வரை நம்மால் பசியை ஒழிக்க முடியவில்லைஇன்னும் இந்தியாவில் 30 கோடி மக்கள் இரவு உணவுஇல்லாமல் படுக்கைக்குச் செல்கிறார்களாம்ஊட்டச்சத்து இல்லாமல் இந்தியாவில் ஐந்தில் ஒரு குழந்தைக்கு உயரத்திற்கேற்றஎடை இல்லையாம்ஆப்கானிஸ்தான் பாகிஸ்தானுக்குப் பிறகு ஆசியாவின் பட்டினிப் பட்டியலில் உள்ள மூன்றாம் நாடுஇந்தியாதானாம்பசியை ஒழிக்க வேண்டும்; இருப்பவன் இல்லாதவனுக்குக் கொடுக்கவேண்டும் என்று ஆயிரம் ஆண்டுகளுக்குமுன்பே “ஐயமிட்டு உண்”  என்று பாடினார் அவ்வையார். நமது நிதிநிலை அறிக்கைகள் வாக்கு வங்கிகளுக்காக இல்லாமல்வயிற்று வங்கிகளுக்காகத் தயாரிக்கப்பட வேண்டும்; அப்போதுதான் பசி ஒழியும்.
வருமானத்தை விடத் தன்மானமே பெரிது என்பார்கள் புலவர்கள்அதுதான் அவர்களுக்கு அறச்சீற்றம் தந்திருக்கிறது.அவ்வையார் அரசையும் கண்டித்திருக்கிறார்; ஆண்டவனையும் கண்டித்திருக்கிறார்கொடிய கணவனுக்குவாழ்க்கைப்பட்டிருந்தாள் ஒரு நல்ல மனைவிஇந்த இழிந்தவனுக்காக இவளைப் படைத்தாயே பிரம்மனே. உனக்கு நான்கு தலை;ஒருதலை ஏற்கனவே அற்றுப்போனதுஇப்படித் தவறு செய்த உன்னைப் பார்த்தால் மிச்சமுள்ள மூன்று தலைகளையும் நானேகிள்ளி எறிந்திருப்பேன் என்று உரிமையோடும் உணர்வோடும் கடவுளையே கண்டித்தவள் அவ்வை.
இன்றைய காலத்திற்குப் பொருந்தாத அவ்வையின் கருத்துகளைப் புறந்தள்ளுவோம்பொருந்தும் கருத்துகளைப் போற்றுவோம்;அவற்றை வாழ்க்கை படுத்துவோம்அவ்வையார் பெண்ணின் பெரும்பெருமை; தமிழர்களின் தனிஉரிமை.