Karuppu Tamil Movie Revuew
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம கருப்பு படத்தோட review அ தான் பாக்க போறோம். R j balaji ஓட இயக்குதுல suriya , trisha , yogibabu Indrans, நட்டிSubramaniam, Swasika, Sshivada, Supreeth Reddy , r j balaji னு பலர் நடிச்சிருக்காங்க. இது suriya ஓட 45 ஆவுது திரைப்படம். சோ வாங்க இப்போ இந்த படத்தோட கதைக்குள்ள போலாம்.
ஏழு கிணறு எடத்துல இருக்கற ஒரு court அ தன்னோட control க்கு கொண்டு வந்து ஆட்டி வைக்குறாரு lawyer baby kannan அ நடிச்சிருக்க r j balaji . இவரோட control ல இருக்கற court க்கு ஒரே ஒரு goal தான். அதாவுது case கொண்டு வர மக்கள் பணத்தை கொண்டு வந்து குடுத்தாங்க ந அவங்க அந்த case ல ஜெயிக்கலாம் இல்லனா அவங்க பக்கம் நியாயமே இருந்தாலும் தோத்து தான் போவாங்க. பெரிய பெரிய background ல இருக்கற ஆட்கள் கிட்ட இருந்து பணத்தை வாங்கி அவங்கள தண்டனை ல இருந்து தப்பிக்க வைக்கறாரு baby kannan . கிட்டத்தட்ட இவரு court யே legal ஆனா கட்டப்பஞ்சாயத் அ நடத்திட்டு வராரு. இப்படி இருக்கற ஒரு எடத்துல தான் ஒரு case வருது. binu வா நடிச்சிருக்க anaga maya ravi க்கு ஒரு operation பண்ணனும் அதுக்கு பணத்தை ready பண்ணுறதுக்காக இந்த பொண்ணோட அப்பாவான indrans நகையை எடுத்துட்டு போறாரு. இந்த நகையை விக்க போற எடத்துல திடுருனு திருடன்க திருடிட்டு போயிடுறாங்க. கடைசில ஒரு வழியா இவரு police கிட்ட complaint பண்ணி நகையையும் மீட்டு எடுத்துடுறாரு. ஆனா இங்க தான் ஒரு சின்ன பிரச்சனை இருக்கு. இந்த காப்பாத்துன நகையை court ல வந்து தான் எடுத்துக்கணும் னு police இவருகிட்ட சொல்லிடுறாங்க.
வேற வழியே இல்லாம indrans யும் சரி னு சொல்லிட்டு baby kannan control ல இருக்கற அந்த court க்கு வராரு. இவருகிட்ட இருந்து பணத்தை பிடுங்கனும் ண்றதுக்காக என்னன்னவோ காரணம் சொல்லி அலைக்கழிக்குறாரு baby kannan. இப்படி இவரு பிரச்சனை ல இருக்கும்போது தான் lawyer saravanan அ நடிச்சிருக்க suriya இவரோட case அ வாதாட ஆஜர் ஆகுறாரு. இதுக்கு அப்புறம் என்ன நடந்துச்சு ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையா இருக்கு.
நல்லது vs கெட்டது, இந்த theme ல எத்தனையோ படங்களை பாத்திருப்போம். அதே மாதிரி தான் இந்த படமும். ஒரு பக்க commercial ஆனா mass masala குடுத்திருக்காரு director . suriya க்கே உரித்தான mass moments , அட்டகாசமான action sequences , colourful ஆனா visuals , னு எல்லாமே இந்த படத்துல amazing அ இருந்துச்சு.
இந்த படத்துல நடிச்சிருக்க actors ஓட performance னு பாக்கும்போது, suriya க்கு இந்த படம் ஒரு நல்ல comeback அ அமைச்சிருக்கு னு தான் சொல்லணும். இவரோட dialogues அ இருக்கட்டும், emotional scenes அ இருக்கட்டும், அதிரடியா சண்டை போடுறது னு எல்லாமே vintage suriya திரும்ப வந்த மாதிரியே தான் இருந்தது. r j balaji ஓட நடிப்பும் நல்ல இருந்தது. ஒரு பக்கம் நக்கலா பேசி மத்தவங்கள மடக்குறது, இன்னொரு பக்கம் வில்லத்தனமா மிரட்டுறது னு ஒரு புது அவதாரத்தை இந்த படத்துல காமிச்சிருக்காரு. trisha ஓட நடிப்பும் அட்டகாசமா இருந்தது. indhrans அப்புறம் anaga ஓட emotional scenes எல்லாம் நல்ல இருந்தது. natty nadaraj இன்னொரு villain அ வந்து மிரட்டிட்டு போயிருக்காரு. shivitha சின்ன character ல நடிச்சிருந்தாலும் அழகா நடிச்சிருந்தாங்க. மத்த supporting actors அ வந்த ஸ்வாசிகா, மாறன், ஜார்ஜ் மரியான், வேலா ராமமூர்த்தி, மன்சூர் அலிகான் இவங்களோட நடிப்பும் அட்டகாசமா இருந்தது.
இப்போ இந்த படத்தோட technical team அ பத்தி பாக்கலாம். sai abhayankar ஓட music , bgm இந்த படத்துக்கு பக்க பலமா அமைச்சிருக்கு. அப்புறம் g k vishnu ஓட cinematography யா பத்தி பேசியே ஆகணும். suriya ஓட mass moments , court room ல நடக்கற விவாதங்கள், fighting scenes னு எல்லாமே ரொம்ப கச்சிதமா camera ல பதிவு பண்ணிருக்காரு. kalaivanan ஓட editing யும் sharp and clear அ இருந்தது.
என்னதான் சட்டங்கள் மேல இருக்கற negative அ பத்தி இந்த படத்துல காமிச்சாலும் அதே சட்டத்தை வச்சு மக்களுக்கு எவ்ளோ நல்லது பண்ண முடியும் ன்றதையும் காமிச்சிருக்காங்க. அதுமட்டும் இல்ல கடவுள் மனுஷன் ரூபத்துல வந்து காப்பதும் ன்ற பழமொழியை கடவுளே வந்து மக்களை காப்பதும் றத்தை ரொம்ப அழகா இந்த படத்தோட கதையை கொண்டு வந்துட்டாரு r j balaji. கடவுள் ன்ற concept இருந்தாலும், கதை நேர்மை க்கு அநீதி க்கும் நடுவுல நடக்கற போராட்டமா தான் காமிச்சிருக்காங்க. இந்த படத்துல நெறய reference scenes யும் வச்சிருக்காங்க. அதெல்லாம் ரசிக்கிற விதமா அமைச்சிருக்கு.
மொத்தத்துல ஒரு mass ஆனா commercial படம் தான் இது. சோ miss பண்ணாம இந்த படத்தை theatre ல போய் பாருங்க.


No comments:
Post a Comment