Featured post

புதுச்சேரி முதலமைச்சர் N. ரங்கசாமி அவர்கள் தக்க்ஷன் விஜய் நடித்த ‘துரோகம் பழகு’

 *புதுச்சேரி முதலமைச்சர் N. ரங்கசாமி அவர்கள் தக்க்ஷன் விஜய் நடித்த ‘துரோகம் பழகு’ திரைப்படத்தின் இரண்டாவது பார்வையை வெளியிட்டார்!* மகிழ் புர...

Thursday, 30 March 2023

On the auspicious occasion of Ram Navami, makers launch the divine poster of

 *On the auspicious occasion of Ram Navami, makers launch the divine poster of Adipurush*


_Releasing on 16th June 2023, the magnum opus boasts an ensemble cast of Prabhas, Kriti Sanon, Saif Ali Khan, Sunny Singh, amongst others_


With the gleam of lights and echo of the chants, the makers of ‘Adipurush’ release the glorious poster of the film on the auspicious occasion of Ram Navami. The poster depicts Prabhas as Raghav, Kriti Sanon as Janaki, Sunny Singh as Shesh, and Devdatta Nage bowing down to them as Bajrang. The film carries forward the virtue of Prabhu Shri Ram that entails Dharma, Courage and Sacrifice which rightly reflects in the elegant poster. 


As Ram Navami celebrates the birth anniversary of Lord Shri Ram and beginning of goodness, the makers reveal a significant symbol of divinity that marks the establishment of dharma to beat adharma. Indian epic Ramayana, Adipurush is all set to hit the big screen on 16th June, 2023 in



IMAX and 3D.


Adipurush, directed by Om Raut is produced by T- Series, Bhushan Kumar & Krishan Kumar, Om Raut, Prasad Sutar and Rajesh Nair of Retrophiles and will be releasing globally on 16th June 2023.

ராம நவமியை முன்னிட்டு 'ஆதி புருஷ்' படக்குழு வெளியிட்டிருக்கும்

 *ராம நவமியை முன்னிட்டு 'ஆதி புருஷ்' படக்குழு வெளியிட்டிருக்கும் தெய்வீகமான போஸ்டர்*


ஸ்ரீ ராமரின் பிறந்த நாள் ராம நவமி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. நன்மையின் தொடக்கத்தை குறிப்பிடும் இந்நன்னாளில் ராமாயண காவியத்தை தழுவி தயாராகி இருக்கும் 'ஆதி புருஷ்' எனும் திரைப்படத்தின் தெய்வீகம் ததும்பும் புதிய போஸ்டரை அப்பட குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள்.



படக்குழு வெளியிட்டிருக்கும் போஸ்டரில் ஸ்ரீ ராமராக பிரபாஸ், சீதா தேவியாக கிருத்தி சனோன், லக்ஷ்மணனாக சன்னி சிங், அனுமனாக தேவதத்தா நாகே ஆகியோர் தோன்றியிருக்கிறார்கள். தர்மம், தைரியம், தியாகம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஸ்ரீ ராமரின் நல்லொழுக்கத்தையும் மையப்படுத்தி இத்திரைப்படம் உருவாகி இருக்கிறது. இதனை இந்த போஸ்டர் நேர்த்தியான முறையில் பிரதிபலித்திருக்கிறது.

அதர்மத்தை வீழ்த்தி தர்மம் வெல்வதை அடையாளமாக குறிக்கும் இந்த ராமநவமி தினத்தன்று படக் குழுவினர் பிரத்யேக போஸ்டரை வெளியிட்டு, அனைவரின் கவனத்தையும் கவர்ந்திருக்கிறார்கள். 


இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் 'ஆதி புருஷ்'. இதில் பிரபாஸ், கிருத்தி சனோன், சையீப் அலி கான், சன்னி சிங் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். டி சீரிஸ் மற்றும் ரெட்ரோஃபைல்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் பூஷன் குமார், க்ரிஷன் குமார், ஓம் ராவத், பிரசாத் சுதார் மற்றும் ராஜேஷ் நாயர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் ஜூன் மாதம் 16ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த திரைப்படம் ஐமேக்ஸ் மற்றும் 3டி தொழில்நுட்பத்திலும், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது.

Wednesday, 29 March 2023

Actor Gautham Karthik on Pathu Thala

 *Actor Gautham Karthik on Pathu Thala* 


Actor Gautham Karthik looks completely excited as his much-awaited film ‘Pathu Thala’ is getting ready for the worldwide theatrical release on March 30, 2023. The actor shares his experience of working with actor Silambarasan, director Obeli N Krishna, and the entire team in this movie. 


Actor Gautham Karthik says, “Just like how a debut film is important for an actor, a breakthrough project becomes mandatory for them.  Pathu Thala is more of an emotional essence to me. The whole process has been so challenging and meaningful. It’s complete teamwork, and without a single team member, this project would have not been completed perfectly as planned. We had to go through lots of unbearable odds including a couple of pandemic phases. My heartiest thanks to producers Jayantilal Gada and K.E.Gnanavelraja for their kind gesture of supporting me. If not for Silambarasan brother, Pathu Thala would have remained an unfulfilled project. The way, he strained and went through excruciating challenges for my sake leaves me speechless. He had gone through a physical transformation, and I am not sure if anyone would boldly decide to gain weight again for a project. This is beyond imagination, and he made it happen. His dedication and passion for what he does is the reason why he enjoys such an amazing fan base. His screen presence and performance will be a magnificent treat for the fans. Priya Bhavani Shankar has been a wonderful co-star. Her punctuality and sincerity are inspiring. Director Krishna sir is the pillar and has carried the entire project on his shoulder. AR Rahman sir is considered the God Father of many actors, and I always look up as a great inspiration. It’s a blessing to be working with such an adorable icon, and I am cherishing the beautiful songs he has given for me in this movie.” 






Pathu Thala is produced by K.E.Gnanavelraja of Studio Green and Jayantilal Gada of Pen Studios and is directed by Obeli N Krishna. The film features Silambarasan TR, Gautham Karthik, Priya Bhavani Shankar, Gautham Vasudev Menon, Kalaiyarasan, Teejay Arunasalamm, Anu Sithara & others in the star cast. AR Rahman composed the music, Farook j Basha handled the cinematography, Praveen KL has taken care of editing and Milan is the art director of this film.

பத்து தல' படத்தில் நடித்தது குறித்து நடிகர் கெளதம் கார்த்திக்

 *'பத்து தல' படத்தில் நடித்தது குறித்து நடிகர் கெளதம் கார்த்திக்*


நடிகர் கௌதம் கார்த்திக் தனது மிகவும் எதிர்பார்க்கப்படும் படமான 'பத்து தல' உலகம் முழுவதும் மார்ச் 30, 2023 அன்று திரையரங்குகளில் வெளியாக தயாராகி வருவதால் உற்சாகமாக இருக்கிறார். நடிகர் சிலம்பரசன், இயக்குநர் ஓபிலி என் கிருஷ்ணா மற்றும் ஒட்டுமொத்த குழுவினருடன் இந்தப் படத்தில் பணிபுரிந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். 






நடிகர் கௌதம் கார்த்திக் கூறும்போது, ​​“ஒரு நடிகருக்கு அறிமுகப் படம் எப்படி முக்கியமோ, அதேபோன்று திருப்புமுனையை ஏற்படுத்தக் கூடிய ஒரு படமும் முக்கியமானது. 'பத்து தல' திரைப்படம் எனக்கு அப்படியான ஒரு உணர்வுப்பூர்வமான படம். முழு படமும் மிகவும் சவாலானதாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருந்தது. இது முழுமையான ஒரு டீம் வொர்க். அணியில் ஒருவர் இல்லாமல் கூட, இந்தப் படம் திட்டமிட்டபடி முழுமையாக முடித்திருக்க முடியாது. இரண்டு கொரோனா காலக்கட்டங்கள் உட்பட பல கடினமான விஷயங்களையும் நாங்கள் கடந்துதான் வந்திருக்கிறோம். இந்த சமயத்தில் எங்களுக்கு உறுதுணையாக இருந்த தயாரிப்பாளர்கள் ஜெயந்திலால் கடா மற்றும் கே.இ.ஞானவேல்ராஜா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். சிலம்பரசன் அண்ணன் இல்லாவிட்டால் 'பத்து தல' திரைப்படம் எங்களுக்கு நிறைவேறாத ஒன்றாகவே இருந்திருக்கும். எனக்காக அவர் சிரமப்பட்டு, கடினமான சவால்களைச் சந்தித்த விதம் என்னை வாயடைக்கச் செய்கிறது. அவர் உடல் அளவில் பல மாற்றங்களை கொண்டு வந்தார். ஒரு படத்திற்காக மீண்டும் எடையை அதிகரிக்க யாராவது தைரியமாக முடிவு செய்வார்களா என்று எனக்குத் தெரியவில்லை. இது கற்பனைக்கு அப்பாற்பட்டது! அவர் அதைச் செய்தார். அவர் என்ன செய்கிறார் என்பதற்கான அவரது அர்ப்பணிப்பும் ஆர்வமும் தான் இவ்வளவு அற்புதமான ரசிகர் பட்டாளத்தை அவருக்குத் தந்துள்ளது. அவரது நடிப்பு திரையில் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும். ப்ரியா பவானி சங்கர் ஒரு அற்புதமான கோ- ஸ்டார். படப்பிடிப்புக்கு சரியாக வரும் நேரமும் ஆர்வமும் நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. இயக்குநர் கிருஷ்ணா சார் தூணாக இருந்து முழு படத்தையும் தோளில் சுமந்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் சார் பல நடிகர்களின் காட் ஃபாதர். நான் எப்போதும் அவரை மிகப்பெரிய இன்ஸ்பிரேஷனாகவே பார்க்கிறேன். அத்தகைய ஜாம்பவானுடன் பணியாற்றுவது எனக்கு ஆசீர்வாதம்! மேலும் இந்த படத்தில் அவர் எனக்காக  அழகான பாடல்களை கொடுத்துள்ளார்".


ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜாவும், பென் ஸ்டுடியோஸ் சார்பில் ஜெயந்திலால் கடாவும் தயாரித்திருக்கும் படம் 'பத்து தல'. சிலம்பரசன் டிஆர், கெளதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கெளதம் வாசுதேவ் மேனன், கலையரசன், டீஜே அருணாசலம், அனு சித்தாரா மற்றும் பலர் நடித்துள்ள இந்தப் படத்தை ஓபிலி என் கிருஷ்ணா இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு ஃபரூக் ஜே பாஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவீன் கே.எல் படத்தொகுப்பாளராகவும் மிலன் கலை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளனர்.

ஆகஸ்ட் 16,1947 படத்தின் இசைவெளியீட்டு விழா!

 ‘ஆகஸ்ட் 16,1947 படத்தின் இசைவெளியீட்டு விழா! 


ஏ.ஆர்.முருகதாஸ் புரொடக்‌ஷன் சார்பில் ஏ.ஆர்.முருகதாஸ், ஓம் பிரகாஷ் பட் மற்றும் நர்சிராம் செளத்ரி தயாரித்திருக்கும் ‘ஆகஸ்ட் 16,1947’ திரைப்படத்தை பொன்குமார் இயக்கி இருக்கிறார். கெளதம் கார்த்தி, ரேவதி, புகழ் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா  (27.03.2023) அன்று நடைபெற்றது. 

படத்தொகுப்பாளர் சுதர்ஷன் பேசியதாவது, “இந்தப் படத்தில் வேலை பார்க்க வாய்ப்பு கொடுத்த முருகதாஸ் சாருக்கும் தயாரிப்பாளர் பொன்குமார் சாருக்கும் நன்றி. இந்தப் படம் நன்றாக வர உழைத்திருக்கும் அனைத்து நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் எல்லோருக்கும் எனது வாழ்த்துகள்”.














இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசியதாவது, “இந்தப் படத்தில் நான் இருக்க காரணமாக இருந்த முருகதாஸ் சாருக்கு நன்றி. இயக்குநர் பொன்குமார் இந்தப் படத்தின் கதை கூறும்போதே, கதையும் கதாபாத்திரமும் ஆர்வமூட்டுவதாக இருந்தது. சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் சிவகார்த்திகேயனுக்கு நன்றி. பீரியட் ட்ராமாவாக ஒரு படம் உருவாக்குவது கஷ்டம். அதை படக்குழு சிறப்பாக செய்துள்ளது. வாழ்த்துகள்!”.


நடிகை ரேவதி பேசியதாவது, “இது எனக்கு முதல் படம். இந்த வாய்ப்பு எனக்கு கொடுத்தது பொன்குமார் சார்தான். என்னுடைய புகைப்படத்தை நண்பர் ஒருவர் வாயிலாக பார்த்து முருகதாஸ் சார் பார்த்துவிட்டு ஆடிஷனுக்கு கூப்பிட்டு இருந்தார். நானாகத் தேடிப்போனது கிடையாது. இந்த வாய்ப்பு என்னை தேடி வந்த ஆசீர்வாதம். ஜிகே சார், பொன்குமார் சார், முருகதாஸ் சார் என இவர்கள் எல்லோருடனும் வேலை பார்த்தது மகிழ்ச்சி.  உதவி இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவருமே கடின உழைப்பைக் கொடுத்துள்ளனர். என் குடும்பத்திற்கு நன்றி”.


நடிகர் புகழ் பேசியதாவது, “இந்தப் படத்தில் எனக்கு முக்கியமான கதாபாத்திரம் நம்பி கொடுத்த முருகதாஸ் சாருக்கும் பொன்குமார் சாருக்கும் நன்றி. இதற்கு முன்பு சில படங்கள் நான் நடித்திருந்தாலும், இது எனக்கு முக்கியமான படம். படத்தில் பார்த்து பார்த்து நடித்திருக்கிறேன். நான் மட்டுமல்ல, இந்தப் படத்தில் நடித்திருந்த அனைவருமே முழு உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள். கெளதம் கார்த்திக் எனக்கு பல விஷயங்களில் நடிப்பில் உதவி செய்தார். இயக்குநர் என்றாலே இப்படித்தான் இருப்பார் என்று பார்த்திருக்கிறோம். ஆனால், பொன்குமார் இந்தப் படம் முழுக்க வெறித்தனமாக உழைத்திருக்கிறார். யாரிடமும் முகம் சுழிக்காமல் வேலை வாங்கி இருக்கிறார். இந்த நல்ல படத்தில் நான் வேலை செய்திருக்கிறேன் என்பது மகிழ்ச்சி”. 


இயக்குநர் பொன்குமார், “இந்தப் படத்தின் முதல் பார்வை வெளியிட்டதில் இருந்து, இப்போது சிறப்பு விருந்தினராக வந்து படத்திற்கு ஆதரவு கொடுத்திருக்கும் சிவகார்த்திகேயன் சாருக்கு நன்றி. இன்று விழா நாயகன் ஷான் ரோல்டன் இந்தப் படத்தின் இசையில் ஆரம்பம் முதலே ஈடுபாடு காட்டினார். புது இசைக்கருவிகளில் பழைய இசையை எடுத்து வந்தார். பாடலாசிரியர் மோகன்ராஜா, பாரதி மேம் சிறப்பான வரிகளோடு புது வார்த்தைகளைப் பயன்படுத்தி பாடலைக் கொடுத்துள்ளனர். தினேஷ் மாஸ்டர், லீலா மாஸ்டர், கேமரா மேன் செல்வகுமார் என அனைவருக்கும் நன்றி. ’தர்பார்’, சர்கார்’ ஆகிய படங்களின் ஆர்ட் டிரைக்டர் சந்தானம் சார் இன்று நம்முடன் இல்லை. கடினமான உழைப்பைக் கொடுத்துள்ளார். சத்யமங்கலம், வேலூர் எனப் பல இடங்களிலும் நாங்கள் இந்தப் படத்திற்கான லொகேஷன் பார்த்துக் கொடுத்துள்ளோம். என் உதவி இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் இந்தப் பயணத்தில் எனக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி. படத்தில் கெளதம் கார்த்திக் சார் வேற லெவலில் உழைப்பைக் கொடுத்துள்ளார். படத்தின் முக்கியமான தருணங்களில் எல்லாம் மிகச் சிறப்பான நடிப்பை தந்துள்ளார். வித்தியாசமான கெளதம் கார்த்திக்கை நாம் பார்க்கலாம். ரேவதி இந்தப் படத்தில் வழக்கமான கதாநாயகி கிடையாது. சிறப்பான நடிப்பைக் கொடுத்துள்ளார். முருகதாஸ் சாரிடம் உதவி இயக்குநராக சேர்ந்தாலே இயக்குநர் ஆகிவிடலாம். உழைத்துக் கொண்டே இருப்பார். நாம் எழுதுகிற எழுத்துக்கு ஒரு நேர்மை இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்துள்ளார். அவருக்கு எப்போதும் நன்றி. படம் பார்த்து ஆதரவு கொடுங்கள்”.


நடிகர் கெளதம் கார்த்திக் பேசியதாவது, “இயக்குநர் பொன்குமார் சொன்னதுபோல, இந்தப் படம் எங்கள் எல்லாருக்குமே முக்கியமானது. சிவகார்த்திகேயன் சார் இன்று வந்ததுக்கு நன்றி. இந்தப் படம் நான் ஒத்துக் கொள்ள முக்கிய காரணம் முருகதாஸ் சார்தான். ஒருக்கட்டத்தில் இந்தப் படம் என் கைவிட்டுப் போனது. அப்போது முருகதாஸ் சார், ‘என்னை நம்பி வாங்க’ என்று கூப்பிட்டார். அவருக்காக மீண்டும் இந்தப் பட வாய்ப்பு எனக்கு வந்தது. வேலூரில் படமாக்கினோம். அங்குள்ள மக்கள் எங்கள் படக்குழுவை அவ்வளவு நன்றாக பார்த்துக் கொண்டார்கள். அவர்களுக்கு நன்றி. இந்தப் படத்தில் அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் மிகச்சிறப்பான உழைப்பைக் கொடுத்துள்ளனர். தினேஷ் மாஸ்டர், லீலா மாஸ்டருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. இன்று விழா நாயகனான ஷான் ரோல்டன் சிறப்பான இசையைக் கொடுத்துள்ளார். ரொம்ப ஸ்மார்ட்டான இசையமைப்பாளர். இந்தப் படத்தின் மூலம் புகழுக்கும் எனக்கு நல்ல நட்பு உருவாகியுள்ளது. ரேவதி அறிமுக நடிகை என்று தெரியாத அளவுக்கு நன்றாக நடித்துள்ளார்.   ரசிகர்கள் அனைவரையும் திருப்திப் படுத்த வேண்டும் என்று நாங்கள் எல்லோரும் குடும்பமாக வேலைப் பார்த்துள்ளோம்”.



இயக்குநர் ராஜ்குமார் பேசியதாவது, “’துப்பாக்கி’ படத்தில் நான் உதவி இயக்குநராக இருந்தபோது, பொன்குமார் அங்கு ஆஃபிஸ் ஸ்டாஃப். அங்கிருந்து இப்போது இயக்குநராக வந்துள்ளார். அதற்கு முருகதாஸ் சாரின் மனதும் ஒரு காரணம். அவருடைய தயாரிப்பில் பொன்குமார் படம் இயக்கி இருப்பதற்கு வாழ்த்துகள். இந்தப் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு எனக்கு உள்ளது. கெளதம் அதிக திறமை கொண்டார். சீக்கிரம் முக்கியமான கதாநாயகனாக வருவார். முருகதாஸ் சாரிடம் உதவி இயக்குநராக இருந்தால் நிச்சயம் இயக்குநராக வரலாம். அவரே நம்மை ஊக்கப்படுத்தி வழிகாட்டுவார். அவரைப் பார்த்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன். ’ஜெய்பீம்’ படத்தில் சிறப்பான பின்னணி இசையைக் கொடுத்திருப்பார் ஷான். இதிலும் சந்தேகமில்லாமல் சிறப்பான இசையைதான் ஷான் கொடுப்பார். அனைவருக்கும் வாழ்த்துகள்”.


நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது, “முதலில் நான் படம் பற்றி சொல்லி விடுகிறேன். இந்திய விடுதலை எனும்போது தனி மனிதர் ஒவ்வொருவருக்குமே சொல்ல முடியாத வலி இருக்கும். அப்படி இருக்கும்போது அடிமைப் பட்டு கிடந்த ஒரு நாடு எனும்போது அந்த வலியை வார்த்தைகளால் சொல்ல முடியாது. அதை பொன்குமார் கடின உழைப்பைக் கொடுத்து படமாக்கி இருக்கிறார். முதல் படமே பீரியட் படம் எனும்போது அதில் உங்கள் நம்பிக்கையும் தெரிகிறது. சவாலை சந்திக்கத் தயாரானவன் தான் சாதனையும் செய்வான் என்று சொல்வார்கள். பொன்குமார் அதற்கு தகுதியானவர். படத்தை பார்க்க வேண்டும் கதையை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் இருக்கிறது. அனைவருக்கும் வாழ்த்துகள். ஷான் ரோல்டன் இசை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. ரேவதிக்கும் வாழ்த்துகள். புகழ் நல்ல கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பது ட்ரைய்லரில் தெரிந்தது. கெளதம் கார்த்திக்கை முதலில் லண்டனில்தான் சந்தித்தேன். எனக்கும் கார்த்திக் சாரை பிடிக்கும். யாருடைய சாயலும் இல்லாமல் அவரது நடிப்பு தனித்துவமாக இருக்கும். திருமணத்திற்கு கெளதம் என்னை கூப்பிட்டு இருந்தார். அவருடைய திருமணத்தில் அனைத்து வேலைகளையும் அவரே எடுத்து செய்திருந்தது சிறப்பான விஷயம். 

நல்ல குணம் என்பதுதான் நம் வாழ்க்கையை தீர்மானிக்கும். அப்படியான ஒருவர்தான் கெளதம். அடுத்தடுத்தப் படங்கள் வர இருக்கிறது. வாழ்த்துகள். திருமணத்திற்கு பிறகு பலரின் வாழ்க்கையும் நல்ல விதமாக மாறும். எனக்கும் அப்படி நல்ல விஷயங்கள் நடந்தது. என்னைப் போலவே உங்களுக்கும் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. இன்று இங்கு நான் வர முக்கிய காரணம் முருகதாஸ் சார்தான். அவருடைய படங்களுக்கு பெரிய ரசிகன் நான். அவர் தயாரிப்பில் ‘மான் கராத்தே’ படத்தில் நடித்திருக்கிறேன். இதற்கு முன்பு அவர் படங்களை தொகுத்து வழங்குவது, நிகழ்ச்சிக்கு ஸ்கிரிப்ட் எழுதித் தருவது போன்ற விஷயங்களை செய்திருக்கிறேன். அடுத்து முக்கியமான ஒரு கட்டம் இருக்கிறது. அது சீக்கிரம் நடக்கும். உதவி இயக்குநர்களுக்கு முருகதாஸ் சார் சிறப்பான ஆதரவு கொடுப்பார். கூட இருப்பவர்களை நாம் பார்த்துக் கொண்டால், நம்மை மேலே இருப்பவன் பார்த்துக் கொள்வான் என ‘வீரம்’ படத்தில் அஜித் சார் சொல்வதுபோல தான் முருகதாஸ் சாரும். உங்கள் தயாரிப்பில் நிறைய நல்ல கதைகள் பார்க்க இருக்கிறோம் என்பது மகிழ்ச்சி. படத்திற்கு வாழ்த்துகள்”.


இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், “எனக்கு இவ்வளவு நாட்கள் கொடுத்த அன்பையும் ஆதரவையும் இந்தப் படத்திற்கும் கொடுங்கள். சிவா இன்று வந்ததால், நிகழ்ச்சி மேலும் மெருகேறியுள்ளது. இந்தப் படத்தின் கதையை என் உதவி இயக்குநர் பாலாஜி படித்துவிட்டு என்னை படிக்க சொல்லி கொடுத்தார். பின்பு நான் படமாக்க முடிவு செய்தேன்.  கெளதம் கார்த்திக் அற்புதமான உழைப்பைக் கொடுத்துள்ளார். கார்த்திக் சாரை நினைக்காமல் ஒரு ரொமான்ஸ் காட்சியை உருவாக்க முடியாது. ‘துப்பாக்கி’ படத்தில் ஜெயராம் சார் வரும் ஒரு காட்சிக் கூட கார்த்திக் சாரை மனதில் வைத்துதான் உருவாக்கினேன். கெளதம் சாருக்கும் ஒரு நல்ல எதிர்காலம் இருக்கிறது. ரேவதி நன்றாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு பிறகு நிறைய நடிப்பதற்கு வாய்ப்பு வரும். படம் தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு, இந்தி என பான் இந்தியாவாக வருகிறது. அதனால், இன்றைய காலக்கட்டத்தில் புரோமோஷனுக்கு அனைவரும் வர வேண்டும். மனிதனால் கொடுக்க முடியாத விஷயத்தைத்தான் கடவுள் கொடுப்பார். அதனால், நம்மால் கொடுக்க முடிந்ததை நாம் கொடுக்க வேண்டும். எனக்கு அப்படி பல பேர் உதவி செய்திருக்கிறார்கள். அதனால், நானும் பலருக்கு உதவி செய்கிறேன்.  இந்தப் படம் நான் பார்த்துவிட்டேன். நன்றாக வந்திருக்கிறது. சந்தானம் சார் இல்லாதது எங்களுக்கு மிகப்பெரிய இழப்பு. விழா நாயகன் ஷான் ரோல்டன் சிறப்பான இசையக் கொடுத்துள்ளார். மூன்று பாடல்களும்  அழகாக வந்துள்ளது. படம் வெற்றிப்பெற படக்குழுவினருக்கு வாழ்த்துகள்”.

திரைப்பட நகைச்சுவை நடிகர் செந்தில் 70-வது வயது‌ பூர்த்தியை முன்னிட்டு உலக

 திரைப்பட நகைச்சுவை நடிகர் செந்தில் 70-வது வயது‌ பூர்த்தியை முன்னிட்டு உலக புகழ்பெற்ற மயிலாடுதுறை அருகே உள்ள திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் பீமரத சாந்தி விழா. மனைவி மற்றும் குடும்பத்தினருடன் பங்கேற்பு:-



மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில்

தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான

தேவாரப் பாடல் பெற்ற அபிராமி சமேத ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. அப்பர், சுந்தர், சம்பந்தர் ஆகிய மூவரால் தேவாரப்பாடல் பெற்றதும், பக்தர் மார்க்கண்டேயனுக்காக சிவபெருமான் காலசம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி எமனை காலால் எட்டி உதைத்து சம்ஹாரம் செய்தது உள்ளிட்ட பல்வேறு புராண நிகழ்வுகளை உள்ளடக்கிய உலகப்புகழ்பெற்ற திருத்தலமாக விளங்குகிறது. அட்ட வீரட்ட தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இத்தலத்தில் ஆயுள் ஹோமம் மற்றும் 60 வயது தொடங்குபவர்கள் உக்கிர ரத சாந்தி, 60 வயதில் பூர்த்தி அடைந்தவர்கள் சஷ்டியப்த பூர்த்தி, 70 வயதில் பீமரத சாந்தி, 80 வயது பூர்த்தி அடைந்தவர்கள் சதாபிஷேகம், 90 வயது அடைந்தவர்கள் கனகாபிஷேகம், 100 வயது பூர்த்தி அடைந்தவர்கள் பூர்ணாபிஷேகம் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம். வருடம் 365 நாட்களும் திருமணம் நடைபெறும் ஓரே தலமாகும்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த திருக்கடையூர் கோவிலுக்கு

திரைப்பட நகைச்சுவை நடிகர் செந்தில் தனது 70வது வயது பூர்த்தி அடைந்ததை முன்னிட்டு

நேற்று இரவு  கோவிலுக்கு மனைவி கலைச்செல்வி, மகன்கள் மணிகண்டபிரபு, ஹேமசந்திர‌ பிரபு மற்றும் மருமகள்கள், பேரக்குழந்தைகள்,  குடும்பத்தினர், உறவினர்களுடன் கோவிலுக்கு வந்து கஜபூஜை, கோபூஜை செய்து  முதல்கால யாகசாலை பூஜையில் பங்கேற்று சுவாமி அம்பாளை வழிபட்டு தரிசனம் செய்தனர். 

அதனை தொடர்ந்து இன்று கோவிலுக்கு வந்த நகைச்சுவை நடிகர் செந்திலுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.


தொடர்ந்து கோயில் மண்டபத்தில் 64 கலசங்கள் வைக்கப்பட்டு பீமரத சாந்தி சிறப்பு ஹோமங்கள் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டு பூர்ணாகுதி செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து நடிகர் செந்தில் அவரது மனைவி கலைச்செல்விக்கு கலச அபிஷேகம் செய்து வைக்கப்பட்டது. பின்னர் செந்தில் அவரது மனைவி கலைச்செல்வி மாலை மாற்றிக் கொண்டு இனிப்பு வழங்கி கொண்டனர். பூஜை ஏற்பாடுகளை அமிர்தகடேஸ்வரர் குருக்கள் செய்து வைத்தார். அதனை தொடர்ந்து குடும்பத்தினருடன் கோவிலை சுற்றி வந்து அமிர்தகடேஸ்வரர், கால சம்ஹார மூர்த்தி, அபிராமி அம்மன் சன்னதிகளுக்கு சென்று வழிபாடு நடத்தினார். 60 வயது பூர்த்தி அடைந்த போது நடிகர் செந்தில் இக்கோவிலில் சஷ்டியப்த பூர்த்தி விழா செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Mass Maharaja Ravi Teja, Vamsee, Abhishek Agarwal Arts’ Pan Indian Film Tiger

 *Mass Maharaja Ravi Teja, Vamsee, Abhishek Agarwal Arts’ Pan Indian Film Tiger Nageswara Rao Releasing Worldwide Grandly On October 20th*


Mass Maharaja Ravi Teja’s prestigious Pan India film Tiger Nageswara Rao being directed by Vamsee is one of the craziest projects releasing this year. This indeed is the most ambitious project of producer Abhishek Agarwal of Abhishek Agarwal Arts who delivered two back-to-back blockbusters The Kashmir Files and Kartikeya 2. He is mounting the movie on a massive budget with high production values and top-notch technical standards. A huge budget was allocated to recreate Stuartupuram village for the movie in a 5-acre land.



Meanwhile, the makers announced the theatrical arrival date of the movie. The box office hunt of Tiger Nageswara Rao begins from Dussehra with the movie releasing grandly worldwide on October 20th. Dussehra is one of the biggest seasons and an auspicious occasion. Moreover, the movie will cash in the long festival holidays. Ravi Teja can be seen standing on top of the steam train in the get-up of Tiger Nageswara Rao.


Tiger Nageswara Rao is a biopic on the notorious thief and is set in 70s in the village named Stuartpuram. Ravi Teja’s body language, diction and getup will be completely different and it will be never before character for the actor. Nupur Sanon and Gayathri Bharadwaj are roped in to play the leading ladies opposite Ravi Teja in the movie.


R Madhie ISC is the cinematographer and GV Prakash Kumar takes care of the music. Avinash Kolla is the production designer. Srikanth Vissa is the dialogue writer, while Mayank Singhaniya is the co-producer.


Cast: Ravi Teja, Nupur Sanon, Gayathri Bharadwaj and others

Writer, Director: Vamsee

Producer: Abhishek Agarwal

Banner: Abhishek Agarwal Arts

Presenter: Tej Narayan Agarwal

Co-Producer: Mayank Singhaniya

Dialogues: Srikanth Vissa

Music Director: GV Prakash Kumar

DOP: R Madhie

Production Designer: Avinash Kolla

PRO: Yuvraaj

மாஸ் மகாராஜா' ரவி தேஜா நடிக்கும் 'டைகர் நாகேஸ்வரராவ்' பட

 *'மாஸ் மகாராஜா' ரவி தேஜா நடிக்கும் 'டைகர் நாகேஸ்வரராவ்' பட வெளியீட்டு தேதி அறிவிப்பு*


'மாஸ் மகாராஜா' ரவி தேஜா- இயக்குநர் வம்சி -தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால் ஆகியோரின் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான 'டைகர் நாகேஸ்வரராவ்' எனும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. 


இயக்குநர் வம்சி இயக்கத்தில் 'மாஸ் மகாராஜா' ரவி தேஜா நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் 'டைகர் நாகேஸ்வரராவ்'. இந்தத் திரைப்படத்தில் 'மாஸ் மகாராஜா' ரவி தேஜா உடன் பாலிவுட் நடிகைகள் நூபுர் சனோன் மற்றும் காயத்ரி பரத்வாஜ் இணைந்து நடிக்கிறார்கள். ஆர். மதி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசைமைக்கிறார். 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' , 'கார்த்திகேயா 2' ஆகிய பிரம்மாண்டமான வெற்றி படங்களை வழங்கிய அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் பிரபல தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால் தயாரித்திருக்கிறார். ஸ்ரீகாந்த் விசா வசனம் எழுத, அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், மயங்க் சிங்கானியா இணை தயாரிப்பாளராகவும் பணியாற்றுகின்றனர்.



பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படத்திற்காக ஐந்து ஏக்கர் நிலத்தில் ஸ்டுவர்ட்புரம் எனும் கிராமம் பெரும் பட்ஜெட்டில் பிரம்மாண்டமான முறையில் உருவாக்கப்பட்டது. 1970களில் ஸ்டூவர்ட்புரம் எனும் கிராமத்தில் வாழ்ந்த டைகர் நாகேஸ்வரராவ் என்னும் திருடனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி தயாராகும் இந்த திரைப்படத்தில் டைகர் நாகேஸ்வரராவ் எனும் கதாபாத்திரத்தில் 'மாஸ் மகாராஜா' ரவிதேஜா வித்யாசமான கெட்டப்பில் நடிக்கிறார். 


தற்போது இந்த திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. 'டைகர் நாகேஸ்வரராவ்' எனும் திரைப்படம் நவராத்திரி திருவிழா கொண்டாடும் தருணமான அக்டோபர் 20ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது. இதற்காக வெளியிடப்பட்டிருக்கும் போஸ்டரில் 'மாஸ் மகாராஜா' ரவி தேஜா டைகர் நாகேஸ்வரராவின் கெட்டப்பில் நீராவி ரயில் மீது நின்றிருப்பது ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. 


தசரா விடுமுறையின் போது 'மாஸ் மகாராஜா' ரவி தேஜாவின் 'டைகர் நாகேஸ்வரராவ்' திரைப்படம் வெளியாவதால் வசூல் ரீதியாக பெரும் வெற்றியை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Phoenix Marketcity to witness the live in concert of Havoc Brothers

 Phoenix Marketcity to witness the live in concert of Havoc Brothers

Soothing hip – hop & rap love songs by Havoc Mathan and Havoc Naven


 Phoenix Marketcity one of the premium malls in Chennai is all set to host a live in concert by Havoc Brothers on the 1st of April 2023(Saturday) at 6:00 PM at its Courtyard premises. The duo popularly known for their Rap Music are based out of Malaysia and predominantly sing Tamil Hip Hop, Rap, folk and love-based songs. Havoc Brothers Mathan and Naven started their journey in the year 2008 and since then have produced 40 + songs. The havoc brothers are extremely young and passionate rappers being an inspiration among many young artists. 



To enjoy this weekend with family and friends don’t miss out the young music sensation Havoc Brothers at Phoenix Marketcity Chennai, Velachery. To book tickets visit Paytm Insider link: https://insider.in/havoc-brothers-live-in-chennai-apr1-2023/event