Featured post

சிக்மா’ திரைப்படம் தமிழ் திரையுலகில் எனக்கு மீண்டும் புதிய தொடக்கத்தை கொடுத்துள்ளது”- நடிகர் ஷிவ் பண்டிட்!

 *“‘சிக்மா’ திரைப்படம் தமிழ் திரையுலகில் எனக்கு மீண்டும் புதிய தொடக்கத்தை கொடுத்துள்ளது”- நடிகர் ஷிவ் பண்டிட்!* வசீகரமான தோற்றம் மற்றும் திற...

Sunday, 28 January 2024

தூக்குதுரை" நன்றி அறிவிப்பு கூட்டம் இன்று பிரசாத் லேபில் நடைபெற்றது

 "*தூக்குதுரை" நன்றி அறிவிப்பு கூட்டம் இன்று பிரசாத் லேபில் நடைபெற்றது*.






இதில் பட குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு பத்திரிக்கையாளர் மற்றும் பொதுமக்களுக்கு தங்கள் படத்திற்கு மாபெரும் வரவேற்பு கொடுத்து வெற்றி படமாக்கியதற்கு நன்றி தெரிவித்தனர். 


இந்த திரைப்படத்தை வாங்கி தமிழ்நாடு திரையரங்குகள் அனைத்திலும் வெளியிட்ட உத்திரா ப்ரொடக்ஷன்ஸ் கூறுகையில், நாளுக்கு நாள் திரையரங்குகள் அதிகமாகிறது என்றும் வசூல் ரீதியாகவும் நாளுக்கு நாள் அதிகமாகிறது என்றும் கூறினார். மேலும் இதுபோன்று குடும்பமாக பார்க்கும் நல்ல திரைப்படங்கள் தமிழ் திரையுலகில் மென்மேலும் வரவேண்டும் என்றும் கூறினார். 


படத்தின் தயாரிப்பாளர் அரவிந்த் வெள்ளை பாண்டியன் கூறுகையில், தமிழகம் முழுவதும் திரையிட்ட இடங்களில் எல்லாம் தூக்குதுரை திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைப்பதை கண்டு சந்தோஷம் அடைகிறேன், இது போன்ற சின்ன திரைப்படங்களுக்கு இன்னும் நிறைய திரையரங்குகள் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். 


இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத், இது குடும்பமாக பெண்கள் குழந்தைகளோடு சென்று திரையரங்கில் கண்டு களிக்க வேண்டிய பொழுதுபோக்கு திரைப்படம், பார்வையாளர்களை கவரும் வகையிலும் ரசிக்கும் வகையிலும் ஒரு நல்ல திரைப்படத்தை கொடுத்திருக்கிறேன் என்றும் அதற்கு இன்று நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது மிகுந்த ஆனந்தத்தையும் சந்தோஷத்தையும் அடைகிறேன் என்றார்.


மொத்தமாக படக்குழுவினர் தமிழகமெங்கும் திரையிட்ட இடங்களில் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதையும், நாளுக்கு நாள் திரையரங்குகள் அதிகரித்து வருவதையும், மக்கள் கூட்டமாக குடும்பத்தோடு சென்று திரையரங்கில் திரைப்படத்தை கண்டு ரசிப்பதை கண்டு சந்தோஷம் அடைகிறோம் என்று நன்றி கூட்டம் நடத்தி தங்களது நன்றியை தெரிவித்தனர்.

Saturday, 27 January 2024

வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தின் இசை வெளியீட்டு விழா

 *’வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தின் இசை வெளியீட்டு விழா!*












பீப்பிள் மீடியா ஃபேக்டரி, விஸ்வ பிரசாத் தயாரிப்பில் கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிகர்கள் சந்தானம், மேகா ஆகாஷ் நடித்துள்ளத் திரைப்படம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’. பிப்ரவரி 2ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. 


நிகழ்வில் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் நடராஜ் பிள்ளை பேசியதாவது, “கடந்த 2017 ஆம் ஆண்டில் இருந்து பீப்பிள் மீடியா ஃபேக்டரி இயங்கி வருகிறோம். இந்த ஏழு வருடங்களில் தெலுங்கில் ’கார்த்திகேயா2’, ‘வெங்கி மாமா’, ‘நிசப்தம்’ என நிறைய ஹிட் படங்களைக் கொடுத்துள்ளோம். இப்போது தமிழிலும் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படம் மூலம் இங்கு வந்திருக்கிறோம். எங்கள் தயாரிப்பாளர் விஸ்வா தெலுங்கில் மட்டுமல்ல பல மொழிகளிலும் படங்கள் தயாரித்துள்ளார். ’வடக்குப்பட்டி ராமசாமி’ படக்குழுவினருக்கும் நன்றியும் வாழ்த்துகளும்”.


நடிகர் சந்தானம் பேசியதாவது, “பீப்பிள் மீடியா ஃபேக்டரி தெலுங்கில் நிறைய படங்கள் செய்திருக்கிறார்கள். தமிழிலும் இரண்டு படங்கள் செய்திருக்கிறார்கள். அதில் முதல் படமாக ‘வடக்குப்பட்டி ராமசாமி’ வெளியாகிறது. 65 நாட்களும் இந்தப் படத்தின் படப்பிடிப்பை எந்தப் பிரச்சினையும் இல்லாமல் நேர்த்தியாக செய்து கொடுத்தார்கள். என்னை நம்பி இவ்வளவு பெரிய படம் எடுத்துள்ள விஸ்வா சாருக்கு நன்றி. ‘கே.ஜி.எஃப்’ எடுக்கும்போது நூறு கோடி ரூபாய் பட்ஜெட்டிற்கு யஷ் பெரிய ஹீரோவா என்றால் அப்போது இல்லை. ஆனால், அந்தக் கதையை நம்பி அந்தப் படம் எடுத்தார்கள். இதேதான், ‘பாகுபலி’ பிரபாஸூக்கும். அதுபோலதான், இந்தக்கதையை தயார் செய்துவிட்டு நாங்கள் தயாரிப்பாளர்களிடம் சென்றபோது, ‘சந்தானத்துக்கு இவ்வளவு பெரிய பட்ஜெட்டா’ எனப் பலரும் தயங்கினார்கள். ஆனால், இந்தக் கதையை மட்டுமே நம்பி பீப்பிள் மீடியா ஃபேக்டரி விஸ்வா சார் வந்தார். எனக்கு இதுதான் பெரிய முதல் பட்ஜெட் படம். கதையை நம்பிய தயாரிப்பாளர்கள் எப்போதுமே தோற்றதில்லை. இந்தப் படம் தயாரிப்பாளருக்கு நிச்சயம் வெற்றிக் கொடுக்கும். கார்த்திக் இந்தக் கதையை நேர்த்தியாக செய்திருக்கிறார். தியேட்டரில் பார்க்கும் போது நிச்சயம் மகிழ்வீர்கள். படம் நீங்கள் பார்த்துவிட்டு சொல்லுங்கள்!”


இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், “இந்தப் படத்தில் முதலில் நான் சந்தித்தது இயக்குநர் கார்த்திக் யோகியைதான். படத்தின் கதையை அவர் சொன்னபோது நாங்கள் எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தோம். நிச்சயம் நல்ல காமெடி எண்டர்டெயினர் படமாக இது இருக்கும். சந்தானத்தை பாடகாராக முதலில் பயன்படுத்திய இசையமைப்பாளர் நான் என்பது எனக்குப் பெருமை. அவருக்குப் பாட வரவில்லை என்றாலும் முயற்சி செய்து அதை சிறப்பாகவும் செய்துள்ளார். நான் சந்தானம் சார் படங்கள் நிறைய பார்த்திருக்கிறேன். ஆனால், இந்தப் படம் இன்னும் சிறப்பாக எல்லோருக்கும் பிடித்தவிதமாக வந்துள்ளது. இயக்குநர் கார்த்திக் நல்ல மனிதர். பெரிய பட்ஜெட்டில் நல்ல படமாக சவால்களைக் கடந்து கொண்டு வந்துள்ளார். படம் வெற்றிப் பெறும்”.


நடிகை மேகா ஆகாஷ், “எனக்கு இந்த வாய்ப்புக் கொடுத்த பீப்பிள் மீடியா ஃபேக்டரி விஸ்வா சாருக்கும் கிரியேட்டிவ் புரொடியூசர் நட்டி சாருக்கும் நன்றி. படப்பிடிப்பின்போது என் பாட்டி இறந்ததால் எனக்கு அப்போது சிரமமாக இருந்தது. அதை எல்லாம் புரிந்து கொண்டு எனக்கு ஆதரவு கொடுத்தார்கள். நிறைய நடிகர்களோடு இணைந்து பணியாற்றும் வாய்ப்பு இந்தப் படத்தில் கிடைத்தது. இயக்குநர் கார்த்திக் எனக்கு ‘கயல்’ என்ற வலுவான கதாபாத்திரம் கொடுத்துள்ளார். நன்றி. சந்தானம் சாருடைய நடிப்புக் குறித்து நான் தனியாக சொல்லத் தேவையில்லை. சிறந்த நடிகர் அவர். பிப்ரவரி 2 அன்று படம் திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தைப் பார்த்துவிட்டு ஆதரவு கொடுங்கள்”.


இயக்குநர், நடிகர் தமிழ், “இந்த வாய்ப்புக் கொடுத்த தயாரிப்புத் தரப்புக்கும் இயக்குநர் கார்த்திக்கும் நன்றி. 65 நாட்கள் என சிங்கிள் ஷெட்யூலில் இந்தக் கதையை நம்பி கார்த்திக் எடுத்து முடித்துள்ளார். படத்திற்கு கடின உழைப்பைக் கொடுத்துள்ளார். நிச்சயம் நல்ல படமாக வெற்றி அடையும். பிற்போக்குத்தனங்களைப் பேசும் படம் இது”.


நடிகர் ரவி மரியா, “இத்தனைப் படங்கள் வெற்றிப் பெற்றப் பின்பும் ஹீரோ என்ற தலைக்கனம் இல்லாதவர் நடிகர் சந்தானம். சந்தானம் சாருடைய ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இந்தப் படம் இருக்கும். அந்த அளவுக்கு காமெடி எண்டர்டெயினராக வந்திருக்கிறது. நான் நடிகரானதுக்குப் பிறகு சந்தானம் சாருடன் நல்ல கதாபாத்திரம் நடிக்க வேண்டும் என்று காத்திருந்தேன். அப்படி பல வருடங்கள் கழித்து கார்த்திக் எனக்கு நல்ல வாய்ப்புக் கொடுத்துள்ளார். படத்தில் எல்லோருமே சிறப்பாக நடித்துள்ளனர். தொழில்நுட்பக் குழுவும் சிறந்த பணி செய்துள்ளனர்”.


நடிகர் எம்.எஸ். பாஸ்கர், “’வடக்குப்பட்டி ராமசாமி’ அழகானத் தமிழ்ப் பெயர். ‘பார்க்கிங்’ படம் நடித்துக் கொண்டிருக்கும்போதுதான் எனக்கு இந்த வாய்ப்பு வந்தது.  அதற்கு இயக்குநர் கார்த்திக்கிற்கு நன்றி. எனக்கு நல்ல கதாபாத்திரம். காண முடிகின்ற உருவங்களில் நம்மால் கடவுளைக் காண முடியும். காண முடியாத சில விஷயங்களில் நம்மால் கடவுளை உணர முடியும். இந்த விஷயத்தை அற்புதமாக கார்த்திக் யோகி இந்தப் படத்தில் சொல்லி இருக்கிறார். படம் நிச்சயம் வெற்றி அடையும்”.


நடிகர் சேஷூ, “சந்தானம் படம் என்றாலே ஜாலிதான். நீங்களும் படம் பார்த்துவிட்டு ஜாலியாக, நிம்மதியாக, சந்தோஷமாக உணர்வீர்கள். வெற்றிப்படம் இது!”


நடிகர் கூல் சுரேஷ், “’வடக்குப்பட்டி ராமசாமி’ எனக்கு குலசாமி. சந்தானம் மூலம்தான் எனக்கு இந்த வாய்ப்பு வந்தது. இந்தப் படத்திற்குப் பிறகு நடிகராக எனக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும் என இயக்குநர் கார்த்திக் சொன்னார். அந்த அளவுக்கு நல்ல கதாபாத்திரம் கொடுத்த அவருக்கும் தயாரிப்பாளருக்கும் நன்றி”.


நடிகர் பிரஷாந்த், “படத்தில் என்னுடைய கதாபாத்திரம் ரொம்ப ஃபன்னாக இருக்கும். இயக்குநர் கார்த்திக், சந்தானம் என அனைவருக்கும் நன்றி. படக்குழு அனைவருமே கடின உழைப்பைக் கொடுத்துள்ளனர். விஜயகாந்த் சார் போல நாளை சந்தானம் என்று சொல்வார்கள். அந்த அளவுக்கு சரியாக எல்லோரிடமும் நடந்து கொள்வார்”.


நடிகை ஜாக்குலின், “இந்தப் படத்தில் வாய்ப்புக் கொடுத்த கடவுளுக்கும் இயக்குநர் கார்த்திக், தயாரிப்பாளர் விஸ்வா, நட்டி இவர்களுக்கு நன்றி. நான் சினிமாக்கு வந்து 13 வருடங்கள் ஆகிவிட்டது. சினிமாவில் கடின உழைப்பு, அதிர்ஷ்டம் என எல்லாமே ஒன்று கூடி வந்தால்தான் மேஜிக் நடக்கும். அது எனக்கு இந்தப் படம் மூலம் நடக்கும் என நம்பிக்கை உள்ளது”.


நடிகர் அல்லு சிரீஷ், “நடிகர் சந்தானம் நகைச்சுவை நடிகராக நடித்து வரும் காலத்தில் இருந்து அவரைக் கவனித்து வருகிறேன். அவருடைய படங்களில் நகைச்சுவை வெகுவாக ரசித்து இருக்கிறேன். படம் மட்டுமல்ல, அவருடைய பேட்டிகளும் எனக்குப் பிடிக்கும். விரைவில் உங்களுடன் இணைந்து நடிக்க ஆர்வமாக உள்ளேன். ஏவிஎம், சூப்பர் குட் ஃபிலிம்ஸ் என அப்போதுள்ள தயாரிப்பாளர்கள் தெலுங்கு நடிகர்களை வைத்துப் படம் எடுத்தார்கள். அந்த டிரெண்ட் கடந்த சில வருடங்களாக இல்லை. இப்போது அது மீண்டும் இந்தப் படம் மூலம் ஆரம்பித்துள்ளது. இதை ஆரம்பித்து வைத்த விஸ்வா சாருக்கு நன்றி. படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்”. 


நடிகர் அஸ்வின், “சந்தானம் சார் எங்க எல்லோருக்கும் பெரிய இன்ஸ்பிரேஷன். சந்தானம் சாரை வைத்து பெரிய பட்ஜெட் படம் என்ற நம்பிக்கை வைத்த நட்டி சார், விஸ்வா சாருக்கு நன்றி. இங்கு சிறப்பு விருந்தினர்களாக வந்திருக்கும் அல்லு சிரீஷ், ஆர்யா ப்ரோ எல்லோருக்கும் நன்றி. இயக்குநர் கார்த்திக்கிற்கு வாழ்த்துகள்”. 


டான்ஸ் மாஸ்டர் ஷெரிஃப், “ஒரு ஹீரோவாக நடிப்பு, நடனம் எனப் பலவற்றிலும் சந்தானம் சார் கடின உழைப்புக் கொடுத்து சிறப்பாக வந்துள்ளார். பெரிய இன்ஸ்பிரேஷன் இது. இயக்குநர் கார்த்திக் இவ்வளவு பெரிய நடிகர்கள், தொழில்நுட்பக் குழுவை சிறப்பாகக் கையாண்டுள்ளார். நம்பிக்கைக்கும் மூட நம்பிக்கைக்கும் இடையில் உள்ள வித்தியாசம்தான் இந்தப் படம். 70’ஸ் படம் என்பதால் சிறப்பாக வந்துள்ளது. படம் வெற்றிப் பெற வாழ்த்துகள்”.


இயக்குநர் மடோன் அஸ்வின், “’நாளைய இயக்குநர்’ செய்யும்போதில் இருந்தே நானும் கார்த்திக் யோகியும் நண்பர்கள். முதலில் நடிகராக இருந்து பிறகு இயக்குநரானார். படம் இயக்குவதில் திறமையானவர். நிறைய கற்றுக் கொண்டார். இந்த மேடை அவருக்குக் கிடைக்க பத்துவருடங்களுக்கு மேல் ஆகியிருக்கிறது. கடின உழைப்புக் கொடுத்து இந்த இடத்திற்கு வந்துள்ள அவருக்கு நிச்சயம் பெரிய வெற்றிக் காத்திருக்கிறது. அவருக்கு சிறந்த காமெடி சென்ஸ் உள்ளது. ‘டிக்கிலோனா’வில் அது வொர்க்கவுட் ஆனது. இந்தப் படமும் அப்படி உங்களுக்கு சிறப்பானதாக அமையும்”.


இயக்குநர் ஸ்ரீகணேஷ், “இந்தப் படத்தின் கதை எனக்குத் தெரியும். படம் நிச்சயம் உங்களை மகிழ்விக்கும். ’லொள்ளு சபா’ சமயத்தில் இருந்தே சந்தானம் சாரின் பெரிய ரசிகன் நான். அவர் படம் நடிக்க வந்ததும் நிறையப் படங்களைப் பார்த்து ரசித்திருக்கிறேன். கார்த்தி முதலில் சந்தானம் சாருக்கு கதை சொல்லப் போகிறேன் என்று சொன்னதும் எனக்கு ரொம்ப சந்தோஷம். இந்தப் படம் முக்கியப் படமாக அமைந்து பெரிய வெற்றிப் பெற வாழ்த்துகள்!”


இயக்குநர் ராம், “கார்த்திக் அண்ணா ரொம்ப ஜாலியான நபர். ‘டிக்கிலோனா’ படம் போல ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படமும் இன்னும் ஜாலியாக இருக்கும். சந்தானம் சாரும் இந்த காம்பினேஷனில் இருக்கும் போது நிச்சயம் தியேட்டர் கலகலப்பாக இருக்கும்”.


நடிகர் ஆர்யா, “’பாஸ் என்கிற பாஸ்கரன்’ படம் நடிக்கும்போது எனக்கும் சந்தானத்திற்கும் ஒரே கேரவன் தான். அப்போது கேரவனுக்குள்ளேயே சந்தானத்தைப் பார்க்க ரசிகர் ஒருவர் வந்துவிட்டார். அந்த அளவுக்கு சந்தானம் மீது ரசிகர்கள் அன்பாக உள்ளனர். நிச்சயம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ ஹிட்டாகும். இயக்குநர் கார்த்திக்கும் அதன் மீது நம்பிக்கை வைத்துள்ளார். இந்தப் படத்தைத் தயாரித்துள்ள விஸ்வா தெலுங்கில் நிறைய ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார். தமிழில் இந்தப் படமும் அவருக்கு ஹிட் கொடுக்கும். 65 நாட்கள் ஷூட்டிங் என்றதும் ஹெல்த் டிப்ஸ் எல்லாம் கேட்டார். நானும் சொன்னேன். பிறகு கேட்டால் அவர் மேகா ஆகாஷூடன் ஷெட்டில் ஆடிக்கொண்டிருக்கிறேன் என்றார். அந்த அளவுக்கு ஹெல்த் கான்ஷியஸ் அவருக்கு உண்டு. படத்தில் அனைவரும் சிறப்பாக உழைப்பைக் கொடுத்துள்ளனர். நானும் சந்தானமும் இணைந்து அட்வென்ச்சர் ஃபேண்டஸி கதையில் கார்த்திக் யோகி இயக்கத்தில் சீக்கிரம் நடிக்க இருக்கிறோம்” என்றார். 


நடிகர் சந்தானம், “எப்பவுமே ஆர்யா என்னை பார்த்தால் என் உடம்பை தான் முதலில் பார்ப்பான். என் இங்கே சதை போட்டு இருக்குன்னு திட்டுவான். ஒருமுறை புத்தாண்டு பார்ட்டிக்கு செல்லலாம் என யோசித்து ஆர்யாவுக்கு தெரியாமல் கால் செய்துவிட்டேன். புது வருஷம் அதுவுமாக என்னை ஜிம் போக வைத்துவிட்டான். எந்தவொரு ஃபைனான்ஸியரை பார்க்கப் போனாலும் ஆர்யா எப்படி இருக்கிறார் என என்னிடம் கேட்பார்கள். ஆர்யா போனால் சந்தானம் எப்படி இருக்கிறார் என கேட்பார்கள். நலம் விசாரிக்க அல்ல! நாங்க ரெண்டு பேரும் அந்த அளவுக்கு கடன் வாங்கியிருக்கோம். ஏதாவது படம் நடிக்கிறோமோ, படம் ஓடுதா, பணம் வருமான்னு தான் விசாரிப்பாங்க. தங்க முட்டை போடுற வாத்து ஒன்னு கிடைச்சிருக்குன்னு ஆர்யா ஒருமுறை சொல்லி விட்டு ஒருத்தரிடம் அழைத்துச் சென்றான். வாத்து முட்டை போடுதான்னு பின்னாடியே கை வச்சு பார்த்தா எங்களுக்குத் தான் பின்னாடி ரத்தம் வருது. அந்த வாத்து யாருன்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க” என்றார். 


இயக்குநர் கார்த்திக் யோகி, “’டிக்கிலோனா’ படத்திற்கு நீங்கள் கொடுத்த ஆதரவுதான் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ ஆரம்பிக்கக் காரணம். இதன் பட்ஜெட் ரொம்பவே பெருசு. தயாரிப்பாளர் விஸ்வா கதைக் கேட்டதும் பிடித்துப் போய் சம்மதித்தார். எனக்கு சிறப்பாக ஒத்துழைப்புக் கொடுத்த என்னுடைய உதவி இயக்குநர்களுக்கு நன்றி. ’டிக்கிலோனா’ படத்திற்கு சந்தானம் அண்ணன் கொடுத்த ஆதரவு பெரிது. மீண்டும் மீண்டும் சந்தானம் அண்ணாவுடன் படம் செய்வேன். அந்த அளவுக்கு அவர் என் மேல் அன்பு வைத்துள்ளார். படம் பார்த்துவிட்டு ஆதரவு கொடுங்கள்”.

Actor Prithvi Ready to Bowl Over Audiences in Blue Star

 Actor Prithvi Ready to Bowl Over Audiences in Blue Star






Actor Prithvi Pandiarajan combines his two great loves – cinema and cricket – in his latest project, Blue Star. Releasing on January 25, 2024, the film stars an ensemble cast including Ashok Selvan, Shanthnu Bhagyaraj, and Keerthi Pandian.Prithvi says, “I believe that Blue Star is a unique film that will appeal to everyone, whether they love cricket or not. 

There are multiple layers to the story as it explores the lives of the characters. I’m grateful to director Jayakumar, producers Ganesh Murthy and G Soundarya of Lemon Leaf Creations, and Pa Ranjith sir for the opportunity to play Sam. I look forward to watching the film on the big screen with the audience. I hope they will enjoy Blue Star as much as I enjoyed being part of it.”

சஸ்பென்ஸ் திரில்லர் கதையை புதிய கோணத்தில் சொல்லும் ‘அதோமுகம்

 *சஸ்பென்ஸ் திரில்லர் கதையை புதிய கோணத்தில் சொல்லும் ‘அதோமுகம்’*













*ரீல் பெட்டி மற்றும் தரிகோ பிலிம் ஒர்க்ஸ் இணைந்து தயாரிக்கும் புதிய சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படம் ‘அதோமுகம்’*


அதோமுகம் என்ற பழந்தமிழ் வார்த்தைக்கு மறைத்து வைத்திருக்கும் முகம் என்று பொருள். மனிதர்கள் மறைத்து வைத்திருக்கும் கோர முகங்கள் சில சமயங்களில் வெளிவரும் போது எந்தவிதமான வினோதங்கள், அசம்பாவிதங்கள் நிகழ்கிறது என்பதை அதோமுகம் புதிய கோணத்தில் திரைப்படமாக வடிவமைத்துள்ளனர்.


ஊட்டி, குன்னூர் மற்றும் அதை சுற்றிய பகுதிகளில் கதைகளம் அமைத்து படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். மலைகள், குளிர், மிஸ்ட் ஆகியவையுடன் டெக்னாலஜியுடன் கூடிய சஸ்பென்ஸ் திரில்லாராக படம் உருவாகியுள்ளது.  ஹீரோ  தனது மனைவி  மொபைல் போனில் அவருக்கு தெரியாமல் ஒரு ஸ்பை அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்ததால் அவனது வாழ்க்கை தலைகீழாக மாறுவது தான் கதை. இதை சுற்றி பல திருப்பங்களுடன் கூடிய திரைக்கதையை வடிவமைத்து அதோமுகம் படத்தை உருவாக்கியுள்ளார்கள்.


கதையின் நாயகனாக சித்தார்த் எஸ். பி. கதையின் நாயகி  சைத்தன்யா ஆகியோர் அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் அனந்த் நாக், சரித்திரன், நக்லைட்ஸ் கவி, வர்கீஸ், பிபின் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் அருண்பாண்டியன் நடித்திருக்கிறார்.


இத்திரைப்படத்தின் இயக்குனர் சுனில் தேவ், ஒளிப்பதிவு அருண் விஜயகுமார், எடிட்டர் விஷ்ணு விஜயன், பின்னணி இசை சரண் ராகவன், பாடல்கள் மணிகண்டன் முரளி என புதுமுக டெக்னிஷியன்கள் இணைந்து இந்த திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இதுவரை பட வினியோக வியாபாரத்தில் இருந்து வந்த ரீல் பெட்டி நிறுவனம் தரிகோ பிலிம் நிறுவனத்துடன் இணைந்து இத்திரைப்படத்தை தயாரித்திருக்கிறார்கள். 


நடிகர்கள் :

எஸ்.பி.சித்தார்த், சைதன்ய பிரதாப், அருண் பாண்டியன், மாத்யூ வர்கீஸ், ஆனந்த் நாக், J S கவி, பிபின் குமார், சரித்திரன்


படக் குழுவினர்:

எழுத்து & இயக்கம்: சுனில் தேவ்

ஒளிப்பதிவு: அருண் விஜய்குமார்

பாடல்கள்: மணிகண்டன் முரளி

பின்னணி இசை: சரண் ராகவன்

கலை இயக்குனர்:  சரவணா அபிராமன்

படத்தொகுப்பு: விஷ்ணு விஜயன்

ஒலி வடிவம்: திலக்ஷன் (Noise Nexus) 

ஒலி கலவை: T. உதயகுமார் (Knack Studios)

ஒப்பனை: நரசிம்மா, அம்மு பி ராஜ், சுப்ரமணி (அருண் பாண்டியன்)

பாடல்: சுனில் தேவ்

கிராபிக்ஸ்: Fix It In Post Studios

கலரிஸ்ட்: K. அருண் சங்கமேஸ்வர்

வண்ணம்: Firefox Studios    

மக்கள் தொடர்பு - ஆர்.குமரேசன்

Friday, 26 January 2024

நிதின், வெங்கி குடுமுலா, மைத்ரி மூவி

 *நிதின், வெங்கி குடுமுலா, மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணையும் "ராபின்ஹூட்"  படத்தின் டைட்டில்  கிளிம்ப்ஸ் வெளியாகியுள்ளது !!



முன்னணி நட்சத்திர நடிகர் நிதின், இயக்குநர் வெங்கி குடுமுலா இருவரும் இரண்டாவது முறையாக ஒரு மிகப்பெரும் திரைப்படத்தில் இணைகின்றனர்.  இப்படத்தினை மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.  அட்டகாசமான கூட்டணியில் இப்பட அறிவிக்கப்பட்ட  கணத்திலேயே, ரசிகர்களிடம் பெரும் உற்சாகத்தை விதைத்துள்ளது. தயாரிப்பு தரப்பு குடியரசு தின நன்னாளில் இப்படத்தின் டைட்டிலை வெளியிட்டுள்ளனர்.

இத்திரைப்படத்திற்கு ராபின்ஹுட் என்று பெயரிடப்பட்டுள்ளது. அனைத்து இந்தியர்களையும் தனது சகோதர சகோதரிகளாகக் நினைத்து, அவர்களிடமிருந்து பணத்தைத் திருட அனைத்து உரிமைகளும் தனக்கு இருப்பதாக நினைக்கும் நிதின் கதாப்பாத்திரத்தை அறிமுகப்படுத்தும், இந்த ராபின்ஹுட் டைட்டில் அந்த கதப்பாத்திரத்திற்கு மிகப்பொருத்தமானதாக அமைந்துள்ளது. 


எல்லாத் தீமைகளுக்கும் அடிப்படை பணம்தான் 


யாராவது பணம்  என்ன செய்யும் எனக் கேட்டால் ?

குடும்பத்திற்கு இடையே சண்டை மற்றும் பிரிவினையை ஏற்படுத்தும் என்பேன்

அதைத் தான் பணம் செய்கிறது 


ஒட்டுமொத்த தேசமும் எனது குடும்பம்

பணக்கார ஆண்கள்  அனைவரும் எனது சகோதரர்கள், பணக்கார பெண்கள் அனைவரும்

 என் சகோதரிகள்



எனக்கு தேவை இருந்ததால் அவர்களின் பாக்கெட்டிலிருந்து கொஞ்சம் எடுத்துக்கொள்வேன் 


ஆனால் அவர்கள் என் மீது கொள்ளையடித்தாக புகார் செய்கிறார்கள்


அதற்காக  நான் வருத்தப்படவில்லை, ஏனென்றால் என் குடும்பத்திடமிருந்து பணம் எடுக்க எனக்கு உரிமையிருக்கிறது . இந்தியா எனது நாடு இது  எனது அடிப்படை உரிமை. இந்தியர்கள் அனைவரும் எனது சகோதர சகோதரிகள். 

இந்த அழுத்தமான வசனத்தை பேசியபடி நிதின் கதாப்பத்திரம் வீடியோவில் அறிமுகமாகிறது. 


இந்த வீடியோவில் நிதினின் கெட்-அப் மற்றும் அவரது  தோற்றம் மிக வித்தியாசமாக இருக்கிறது. நிதின் தனது பையில் நிறைய பணம் மற்றும் தங்கத்துடன் சாண்டா கிளாஸாக நுழைகிறார். பைக்கின் முன்பகுதியில், ‘நான் இந்தியன்’ என்று எழுதப்பட்டுள்ளது, பின்பகுதியில், நான் அரிதானவன் என எனக்குத் தெரியும் என்று எழுதப்பட்டிருக்கிறது.  கடைசியாக, பணத்தை மறைவானதொரு இடத்தில் மறைத்து வைக்கிறார்.



நடிகர் நிதின், நவநாகரீக உடையில் ஸ்டைலான லுக்கில், மிகக் கூலாக வருகிறார். தனது முதல் இரண்டு படங்களில் வித்தியாசமான முயற்சியில் அசத்தலான படங்கள் தந்த இயக்குநர் வெங்கி குடுமுலா, இந்த முறையும் ஒரு புதிய முயற்சியுடன் வந்திருப்பது அறிமுக வீடியோவில்  தெரிகிறது. டைட்டில் வீடியோவிலேயே தனது முத்திரையை பதித்துள்ளார் இயக்குநர். நிச்சயமாக இந்த டைட்டில் வீடியோ, மிக வித்தியாசமான ஐடியாவாக முத்திரை பதிக்கிறது. காட்சியின் வடிவமைப்பு, பின்னணி, உடை வடிவமைப்பு, தொழில்நுட்ப நேர்த்தி அத்தனையிலும் பிரம்மாண்டமும், கச்சிதமும் மின்னுகிறது. 



நவீன் யெர்னேனி மற்றும் Y ரவிசங்கர் ஆகியோர் இப்படத்தினை தயாரிக்கிறார்கள், முக்கிய கதாபாத்திரங்களில் முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடிக்கவுள்ளனர். மிகச் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் இப்படத்தில் பணியாற்றவுள்ளனர். தேசிய விருது பெற்ற ஜி.வி.பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார், சாய் ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய, பிரவின் புடி படத்தொகுப்பாளராகவும், ராம் குமார் கலை இயக்குநராகவும் பணியாற்றுகிறார்கள் .


நடா கிரீட்டி ராஜேந்திர பிரசாத் மற்றும் வெண்ணிலா கிஷோர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.


நடிகர்கள்: நிதின், ராஜேந்திர பிரசாத், வெண்ணெலா கிஷோர் மற்றும் பலர்


தொழில்நுட்பக் குழு:

எழுத்தாளர், இயக்குநர்: வெங்கி குடுமுலா

தயாரிப்பு நிறுவனம் : மைத்ரி மூவி மேக்கர்ஸ்

தயாரிப்பாளர்கள் : நவீன் யெர்னேனி மற்றும் ஒய் ரவிசங்கர்

CEO : செர்ரி

இசை: ஜி.வி.பிரகாஷ் குமார்

ஓளிப்பதிவு : சாய் ஸ்ரீராம்

கலை இயக்குநர்: ராம் குமார்

நிர்வாக தயாரிப்பாளர்: ஹரி தும்மலா

லைன்புரடியூசர் : கிரண் பல்லாபள்ளி

விளம்பர வடிவமைப்பாளர்: கோபி பிரசன்னா

மக்கள் தொடர்பு - யுவராஜ்

மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ


https://youtu.be/RNuVnHlRjP0

Nithiin, Venky Kudumula, Mythri Movie Makers Film Titled Robinhood, Intriguing

Nithiin, Venky Kudumula, Mythri Movie Makers Film Titled Robinhood, Intriguing Title Glimpse Revealed



Hero Nithiin and talented maker Venky Kudumula joined forces for the second time for a bigger project being made on a larger scale with the leading production house Mythri Movie Makers backing it. This crazy project in the blockbuster combination grabbed the attention on the day it was announced. The makers, on the occasion of Republic Day, came up with a title reveal glimpse.


The movie is titled Robinhood and it’s an apt one judging by the glimpse that is meant to introduce the character of Nithiin who treats all Indians as his brothers and sisters, so that he feels he has all rights to steal money from them.


“Dabbu Chaala Cheddadi… Roopayi Roopayi Nuv Em Chesthaav Ante… Annadammula Madhya Akka Chellella Madhya Chichu Pedathanu Antadi… Annatte Chesindi… Desham Antha Kutumbam Naadi… Asthulunnollantha Naa Annadammulu… Abharanalesukunnollantha Naa Akka Chellellu… Avasaram Koddi Valla Jebullo Chethulu Pedithe… Family Member Ani Kuda Chudakunda Naa Meeda Case Lu Peduthunnaaru… Aynaa Nenu Hurt Avvaledu… Andukante Aina Valla Daggara Dabbulu Theesukovadam Naa Hakku… My Basic Right… Because India Is My Country… All Indians Are My Brothers and Sisters…” Nithiin introduces himself with this humorous dialogue.


His get-up and actions are also amusing and absorbing. Nithiin makes an entry as Santa Claus with loads of money and gold in his bag. While the front portion of the bike reads, ‘I’m an Indian’, the back portion reads, I’m aware that I’m rare. Finally, he hides the money in a hideout place.


Nithiin underwent a stylish makeover and he looks uber cool in a modish attire. Director Venky Kudumula depicted a serious scene in his style of entertaining format. Venky who attempted two different subjects in his first two movies is coming up with yet another intriguing project and he showed his mark in the title teaser cut. The concept video is a unique idea for sure and he has presented Nithiin in a first-of-its-kind role. This kickass title reveal glimpse makes a strong impact. The production design looked grand.


Naveen Yerneni and Y Ravi Shankar are the producers of the movie which will have a stellar cast in prominent roles and top-notch technicians taking care of different crafts. The movie has music by National Award Winner GV Prakash Kumar who provided the fascinating score for the glimpse. Sai Sriram handles the cinematography, while Prawin Pudi is the editor and Raam Kumar is the art director.


Nata Kireeti Rajendra Prasad and Vennela Kishore are playing important roles in the movie.


Cast: Nithiin, Rajendra Prasad, Vennela Kishore and others


Technical Crew:

Writer, Director: Venky Kudumula

Banner: Mythri Movie Makers

Producers: Naveen Yerneni and Y Ravi Shankar

CEO: Cherry

Music: GV Prakash Kumar

DOP: Sai Sriram

Art Director: Raam Kumar

Executive Producer: Hari Tummala

Line Producer: Kiran Ballapalli

Publicity Designer: Gopi Prasanna

PRO: Yuvraaj 

Marketing: First Show


https://youtu.be/RNuVnHlRjP0

இரண்டு காலக்கட்டங்களை இணைக்கும் உணர்வுபூர்வமான, சஸ்பென்ஸ்

 இரண்டு காலக்கட்டங்களை இணைக்கும் உணர்வுபூர்வமான, சஸ்பென்ஸ் மற்றும் ஃபேண்டஸியான காதல் கதை! - விரைவில் படப்பிடிப்பு ஆரம்பம்






போஸ்ட் production மற்றும் கார்பரேட், விளம்பர பட சேவைகளை வழங்கி கொண்டு இருக்கும் நிறுவனம் பிளாக் அண்ட் ஒயிட் மீடியா Solutions Private Limited நிறுவனத்தின் முதல் தயாரிப்பு

‘புரொடக்‌ஷன்ஸ் நம்பர் 1’! - ஃபேண்டஸியான காதல் கதையாக உருவாகிறது!


அறிமுக இயக்குநர் வீஜெ மீனாட்சி சுந்தரம் இயக்கத்தில், ரஜித் மேனன் நடிப்பில் உருவாகும் ஃபேண்டஸி காதல் கதை!


பிளாக் அண்ட் ஒயிட் மீடியா சொல்யூசன்ஸ் பிரைவேட் லிமிடெட் (Black and White Media Solutions Private Limited) நிறுவனம் சார்பில் ஜூட் ஆனந்த்.டே (D Jude Anantth) தயாரிப்பில், உருவாகும் புதிய படத்தின் அறிவிப்பு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது.


விளம்பர படங்கள் மற்றும் கார்ப்பரேட் திரைப்படங்களை இயக்கிய அனுபவம் கொண்ட இயக்குநர் வீஜெ. மீனாட்சி சுந்தரம், இப்படத்தின் மூலம் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகிறார்.


1983 மற்றும் 2023 என இரண்டு காலக்கட்டங்களை இணைக்கும் கதையை காதல் மற்றும் ஃபேண்டஸியாக சுவாரஸ்யமாகவும், ஜனரஞ்சகமாகவும் சொல்ல இருப்பதாக தெரிவித்த இயக்குநர், தற்போது படத்தின் அறிவிப்பு மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. படம் பற்றி மற்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும், என்றார்.


இதில் கதாநாயகனாக தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வரும் ரஜித்.CR நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக முன்னணி நடிகையை நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.


விருது பெற்ற கன்னட திரைப்படமான ‘கோழி எஸ்ரூ’ படத்தின் ஒளிப்பதிவாளர் பிரான்சீஸ் ராஜ்குமார்.ஏ (Francis Rajkumar A) ஒளிப்பதிவு, இசைத்துறையில் பல வருட அனுபவம் வாய்ந்த ஷீன் எல்.க்ளஃபோர்ட் (Shean L.Cleford) இசை, ‘யாத்திசை’ மற்றும் ‘ஞானசெருக்கு’ ஆகிய படங்களுக்கு படத்தொகுப்பு செய்த மகேந்திரன் கணேசன் படத்தொகுப்பு, என பலம் வாய்ந்த தொழில்நுட்ப கலைஞர்களைக் கொண்டு தரமான படமாகவும், கமர்ஷியல் ரீதியாக பிரமாண்டமாகவும் இப்படம் உருவாக உள்ளது.


கொடைக்கானலில் உள்ள கிராமம் ஒன்றில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ள படக்குழு பிப்ரவரி கடைசி அல்லது மார்ச் முதல் வாரத்தில் படப்பிடிப்பை தொடங்க முடிவு செய்துள்ளது.

A ‘Fantasy Love Story’ connecting two different time periods

 A ‘Fantasy Love Story’ connecting two different time periods: Shooting to start soon!






Black and White Media Solutions Private Limited is a company that has been providing services in the field of post-production work for movies and commercial advertisements. However, now the company is venturing into its own movie production for the first time!


The upcoming film, tentatively titled 'Productions Number#1', will be a 'Fantasy Love Story'. It will mark the directorial debut of V J Meenakshi Sundaram, with Rajith CR playing a prominent role as the actor.


The movie will be produced by D. Jude Ananth on behalf of Black and White Media Solutions Private Limited. The official announcement of this exciting news was made today, on Thursday, 25th January.


Director V J Meenakshi Sundaram has prior experience in directing advertisements and corporate movies, and this movie will serve as his directorial debut in the film industry.


The screenplay of the movie will connect two different eras, 1983 and 2023, in a fantasy format. The director explained that this unique concept will be presented in a popular and engaging manner.


Currently, only the announcement of the movie has been made. The director has assured that more details about the film will be revealed soon.


Rajith CR, who is currently active in Tamil and Malayalam movies, will be the lead actor in this film. Discussions are underway to finalize a popular actress as his co-star.


The cinematography for the movie will be handled by Francis Rajkumar, A., who previously worked on the award-winning Kannada movie 'Kozhi Ezroo'.


Shean L. Cleford, a renowned music director with extensive experience, will compose the music for the film.


Mahendran Ganesan, who has edited Tamil movies like 'Yathisai' and 'Gnanaccherukku', will be the editor for this project.


With a team of reputed and talented technicians, the movie is set to be produced on a grand commercial scale.


The production team has planned to begin shooting in a village in Kodaikkanal either by the end of February or early March.

ஜி.கே ரியால்டர்ஸ் மற்றும் இமயம் குழுமம் நிறுவனங் களின்

 ஜி.கே ரியால்டர்ஸ் மற்றும் இமயம் குழுமம் நிறுவனங் களின் தலைவர்








திரு.ஆர். ஜி குமார் அவர்களால் 3. 51 கோடி ரூபாய் செலவில் புனரமைப்பு 

செய்யப்பட்ட 

மாமல்லபுரம் ஸ்ரீ சயன பெருமாள் கோயில்

குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா!


தனியாரின் முயற்சியால் புனரமைக்கப்பட்டு மாமல்லபுரத்தில் ஸ்தல சயனப் பெருமாள் திருக்கோயில் கும்பாபிஷேகம்!


 அருள்மிகு ஸ்தல சயனப்பெருமாள் திருக்கோயில் மாமல்லபுரத்தில் இருக்கிறது.


இத் திருக்கோயில்

ஜி.கே ரியால்டர்ஸ் மற்றும் இமயம் குழுமம் நிறுவனங் களின் தலைவர்

திரு.ஆர். ஜி குமார் அவர்களால் 3. 51 கோடி ரூபாய் செலவில் புனரமைப்பு 

செய்யப்பட்டு குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா நடத்தி

அறநிலையத்துறையிடம் ஒப்படைக்கப்படுகிறது.


ஸ்ரீமன் நாராயணன் தனது திருப்பாற்கடல் என்னும் பாம்பணையைத் துறந்து அர்ச்சாவதார நிலையில் தரையில் ஸ்தல சயனமாய் கிடந்த திருக்கோலத்தில் காட்சி தரும் திவ்ய தேசம் தான் இந்தத் திருக்கடல் மல்லை என்னும் மாமல்லபுரம்.அந்த மாமல்லபுரத்தில் அமைந்துள்ள இக்கோயில்

பதினான்காம் நூற்றாண்டில் பராங்குச மன்னனால் கட்டப்பட்டது. இந்தக் கோயில் தென்னிந்திய கட்டடக் கலைக்குப் பெருமை சேர்க்கும் ஒன்றாக  விளங்குகிறது. இங்குள்ள கருங்கல் தூண்கள் கலை வடிவத்திற்குச் சான்றுகள்.


இந்த ஆலயம் 108 திவ்ய தேசங்களில் 63 வது திவ்ய தேசமாக மதிக்கப்படுகிறது. பூதத்தாழ்வார் அவதரித்த திருத்தலமாகவும் இது கருதப்படுகிறது.12 ஆழ்வார்களுக்கும் இங்கே தனித்தனி சன்னிதிகள் உண்டு.

பூதத்தாழ்வார் மற்றும் திருமங்கையாழ்வார் ஆகியோரின் பாடல் பெற்ற தலம் இது.


காலச் சூறாவளியில் களை இழந்து சிதிலமடைந்திருந்த

இந்த ஆலயம் ஜி . கே. ரியால்டர்ஸ் மற்றும் இமயம் குழுமம் நிறுவனங்களில் தலைவர் திரு ஆர்.ஜி.குமார் அவர்களால்

 3.51 கோடிரூபாய் செலவு புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது.

ஆலயத்தின் உட்புறம் மற்றும் வெளிப்பிரகாரங்கள் புதுப்பிக்கப்பட்டு இந்தக் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.


வருகிற பிப்ரவரி ஒன்றாம் தேதி வியாழக்கிழமை, தை மாதம் 18ம் தேதி, காலை 7.30 மணி முதல் 9 மணிக்குள் இந்தத் திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா நடைபெறுகிறது.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திருமிகு மு. க. ஸ்டாலின் அவர்களின் சீர்மிகு பொற்கால நல்லாட்சியில் நடைபெறும் இவ்விழாவில் மாண்புமிகு  திரு  துரைமுருகன், நீர்வளத்துறை அமைச்சர் ,மாண்புமிகு திரு தா.மோ.அன்பரசன், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர்,

மாண்புமிகு திரு பி.கே.சேகர்பாபு, இந்து சமய அறநிலை துறை மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக்குழு அமைச்சர் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.


இவ்விழாவில்

பாராளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்களும், இந்து சமய அறநிலைத்துறை முன்னணி அலுவலர்களும், ஆலய அறங்காவலர் குழுவினரும் கலந்து கொள்கிறார்கள்.


ஆலயத்தில் உற்சவமூர்த்தி ஸ்ரீ ஸ்தல சயனப் பெருமாள், ஸ்ரீ நில மங்கைத் தாயார், ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ பூதத்தாழ்வார், விமானங்கள் ,ராஜகோபுரம், த்வஜஸ்தம்பம்,  கருடாழ்வார், அனுமார் மற்றும் பரிவார சன்னிதிகளுக்கும் குடமுழுக்கு நன்னீராட்டு விழா நடைபெறும்.

கும்பாபிஷேகத்திற்குப் பிறகு இந்த ஆலயத்தை முறைப்படி எதிர்காலத்தின் தொடர் பராமரிப்புக்காக இந்து சமய அறநிலைத்துறையிடம் ஆயயத்தைப் புனரமைப்பு செய்த நிறுவனங்களின் தலைவர் ஆர்.ஜி. குமார் ஒப்படைக்கிறார்.


இந்த விழாவில் கலந்து கொண்டு ஸ்ரீமன் நாராயணன் அருள் பெறுமாறு புனரமைப்பு குழுவின் தலைவர் திரு.ஜி.கே.குமார் பக்தர்களிடம் வேண்டுகிறார். இந்து சமய அறநிலைத்துறையின் செயல் அலுவலர் திரு எம் .சக்திவேல், ஆய்வர் திரு நா. பாஸ்கரன், உதவி ஆணையர் திரு பொ. இலட்சுமி காந்த பாரதிதாசன், இணை ஆணையர் திருமதி வான்மதி ஆகியோரும் மக்களைக் குட முழுக்கு விழாவுக்கு வருமாறு அழைப்பு  விடுத்திருக்கிறார்கள்.