Featured post

சிக்மா’ திரைப்படம் தமிழ் திரையுலகில் எனக்கு மீண்டும் புதிய தொடக்கத்தை கொடுத்துள்ளது”- நடிகர் ஷிவ் பண்டிட்!

 *“‘சிக்மா’ திரைப்படம் தமிழ் திரையுலகில் எனக்கு மீண்டும் புதிய தொடக்கத்தை கொடுத்துள்ளது”- நடிகர் ஷிவ் பண்டிட்!* வசீகரமான தோற்றம் மற்றும் திற...

Thursday, 30 July 2026

சினிமா மீதான தீராத காதல்… மீண்டும் வெள்ளித்திரைக்கு வரத் தயாராகும் யுவா புஷ்பாகர்

 சினிமா மீதான தீராத காதல்… மீண்டும் வெள்ளித்திரைக்கு வரத் தயாராகும் யுவா புஷ்பாகர்





சென்னை: வெற்றிகரமான தொழிலதிபராக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட பிறகு, நடிகர் யுவா புஷ்பாகர் மீண்டும் சினிமாவில் தனது பயணத்தைத் தொடங்கத் தயாராகி வருகிறார். வாழ்க்கையில் பெற்ற அனுபவம், தொழில்முறை ஒழுக்கம் மற்றும் சினிமா மீதான தீராத காதலுடன் அவர் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்க உள்ளார்.


திரைப்படங்களில் அறிமுகமாகும் முன்பே, தொலைக்காட்சி மற்றும் விளம்பரத் துறையில் யுவா புஷ்பாகர் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியிருந்தார். HSBC, Ponds, Carlsberg, Aircel, 7UP உள்ளிட்ட பல முன்னணி தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களின் விளம்பரங்களில் நடித்ததன் மூலம், கேமரா முன் இயல்பாக நடிக்கும் அனுபவத்தையும் தன்னம்பிக்கையையும் பெற்றார். அதுவே நடிப்பை முழுநேரப் பயணமாக மாற்ற வேண்டும் என்ற கனவையும் வலுப்படுத்தியது.


ஒரு முழுமையான நடிகராக உருவாக வேண்டும் என்ற நோக்கில், தென்னிந்திய திரையுலகின் பல முன்னணி நடிகர்களுக்கு பயிற்சி அளித்துள்ள பாண்டியன் மாஸ்டர் அவர்களிடம் நடனம் மற்றும் சண்டைப் பயிற்சிகளை முறையாகக் கற்றார். அதிகாலை நேரங்களில் நடைபெற்ற கடுமையான பயிற்சிகள், உடற்தகுதி, சண்டைக் காட்சிகள் மற்றும் நடிப்பு ஆகியவற்றில் அவருக்கு ஒழுக்கத்தையும் தன்னம்பிக்கையையும் அளித்தன. அந்த அனுபவம் இன்றும் அவரது நடிப்புப் பயணத்தில் உறுதுணையாக உள்ளது.


2009-ஆம் ஆண்டு இயக்குநர் சரண் இயக்கிய ‘மோதி விளையாடு’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான யுவா, ‘மதன்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். வினய், காஜல் அகர்வால், கலாபவன் மணி, சந்தானம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த அவர், தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.


அதன்பிறகு சினிமாவில் தொடர்ந்து நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தபோதும், தனது தொழில்முனைவோர் வாழ்க்கையில் கவனம் செலுத்த அவர் முடிவு செய்தார். ஆனால் அந்த இடைவெளி சினிமா மீதான அவரது ஆர்வத்தை ஒரு நாளும் குறைக்கவில்லை.


சிறு வயதிலிருந்தே உலக சினிமாவின் தீவிர ரசிகரான யுவா, பல்வேறு நாடுகளின் திரைப்படங்களை தொடர்ந்து பார்த்து, அவற்றின் கதை சொல்லும் முறை, திரைப்பட உருவாக்கம், நடிகர்களின் நடிப்பு ஆகியவற்றை ஆர்வத்துடன் கற்றார். குறிப்பாக கொரிய திரைப்படங்களைப் பார்ப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து DVD-களையே வரவழைத்தது அவரது சினிமா மீதான ஈடுபாட்டை வெளிப்படுத்துகிறது.


கமல்ஹாசன், ரஜினிகாந்த் மற்றும் மலையாள திரையுலகின் பெருமை மோகன்லால் ஆகியோரின் திரைப்பயணம் யுவாவுக்கு மிகப்பெரிய உத்வேகமாக இருந்துள்ளது. ஒரு குறிப்பிட்ட இமேஜுக்குள் சிக்காமல், பல்வேறு கதாபாத்திரங்களில் தனது திறமையை நிரூபிக்கும் நடிகராக உருவாக வேண்டும் என்பதே அவரது இலக்கு.


இதுகுறித்து யுவா புஷ்பாகர் கூறுகையில்,


“சினிமா எப்போதும் என் வாழ்க்கையின் மிகப்பெரிய காதல். வாழ்க்கையில் சந்தித்த ஒவ்வொரு அனுபவமும் என்னை மேலும் முதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. இன்று நான் அதிகமான அனுபவத்துடனும், மனிதர்களைப் பற்றிய ஆழமான புரிதலுடனும், என் கலை மீது இன்னும் அதிக அர்ப்பணிப்புடனும் திரும்பி வருகிறேன். மக்களை சிந்திக்க வைக்கும், மகிழ்விக்கும், மனதில் நீண்ட காலம் நிற்கும் கதைகளின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்,” என்றார்.


கடந்த சில ஆண்டுகளாக தனது மறுபிரவேசத்திற்காக உடற்தகுதியை மேம்படுத்துவதில் தீவிரமாக கவனம் செலுத்தியுள்ள யுவா, அதே நேரத்தில் சமகால திரைப்படங்கள், திரைக்கதைகள் மற்றும் இந்திய சினிமாவின் புதிய போக்குகளையும் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறார்.


தற்போது தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களுக்கான பல கதைகளை கேட்டு வரும் அவர், கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்கள், ஆக்ஷன் டிராமாக்கள், உளவியல் த்ரில்லர்கள் மற்றும் வலுவான உள்ளடக்கம் கொண்ட திரைப்படங்களில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.


மேலும், தனது உடற்தகுதி மாற்றம் மற்றும் சினிமாவுக்கான தயாரிப்புகள் தொடர்பான பதிவுகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார். அதற்கு ரசிகர்களிடமிருந்து நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது.


தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் பல திரைக்கதைகளை தற்போது பரிசீலித்து வரும் யுவா புஷ்பாகர், தனது அடுத்த திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளார்.


யுவா புஷ்பாகரின் இந்த வருகை, வெறும் மறுபிரவேசம் மட்டுமல்ல; அனுபவம், அர்ப்பணிப்பு மற்றும் சினிமா மீதான அழியாத காதலால் தொடங்கும் புதிய அத்தியாயமாகவும் பார்க்கப்படுகிறது.

Vikkals Vikram and Arathy Krishna's Lightweight, Baby! wraps 45-day shoot; first look to be unveiled in August

 *Vikkals Vikram and Arathy Krishna's Lightweight, Baby! wraps 45-day shoot; first look to be unveiled in August* 



The makers of the upcoming Tamil romantic entertainer *Lightweight, Baby!,* starring stand-up comedian *Vikkals Vikram* and fitness personality *Arathy Krishna,* have officially wrapped principal photography after a 45-day shoot spanning four schedules across *Chennai, Bengaluru, and Mysore.* 


 *Lightweight, Baby!* is a genre-blending entertainer set in the world of competitive fitness, where romance, family expectations, and personal ambition collide in a story filled with humor, heart, and high-stakes competition.


The film marks *Vikkals Vikram's first outing as a leading man,* following his popularity as a stand-up comedian and his appearance on the reality show Bigg Boss. He also pens the film's dialogues. Starring opposite him is Arathy Krishna, a well-known name in the fitness and bodybuilding community, in her first major screen role. The unconventional pairing has already sparked curiosity among audiences following the film's title announcement earlier this year.


Written and directed by *KC Guru,* the film is produced by *Hitha Studios,* with *Sagara Sandesh* serving as co-producer. The technical team includes *Pramod Kotiyan* as cinematographer, *Sarvanaa Subramaniam* as music director, *Harish Komme* as editor, and dialogues by *Vikkals Vikram.* 


 *Director KC Guru said:* 


"It's been an incredible journey over the last 45 days. Every schedule and every city brought something unique to this film. What started as an idea about two people from completely different worlds has now become a story we're genuinely proud of. While the shoot may be complete, another exciting phase begins in the edit room. We can't wait to introduce these characters to audiences."


 *Vikkals Vikram said:* 

"Playing a hero for the first time has been one of the most exciting experiences of my career. Getting the opportunity to write the dialogues alongside acting made the journey even more special. It's rare to shape a character both in front of the camera and on paper. I'm grateful to the entire team for this experience, and I genuinely believe audiences are in for a fun and heartfelt entertainer."


 *Arathy Krishna said:* 

"Fitness has always challenged me physically, but acting challenged me emotionally in completely new ways. Playing this character helped me discover a different side of myself, and I'm thankful to the entire team for making my first major film such a memorable experience. I'm excited for audiences to see the film."


With filming now complete, the team has shifted its focus to post-production. The *first look of Lightweight, Baby! will be unveiled in the second week of August,* with the film slated for a theatrical release later this year.

 

CAST


 *Vikkals Vikram* (First film as Hero) 


 *Arathy Krishna* (First Major Screen Role)

 

 *TECHNICAL CREDITS* 


 *Produced by:* Hitha Studios 


 *Written & Directed by* : KC Guru 


 *Co-Producer* : Sagara Sandesh 


 *Director of Photography* : Pramod Kotiyan 


 *Music* : Sarvanaa Subramaniam 


 *Editor* : Harish Komme 


 *Dialogues* : Vikkals Vikram 


 *Co-Director* : Kiran Tumbakere 


 *Executive Producer* : Sharath Kumar N 


 *Art Director* : Shankaragouda 


 *Assistant Directors* : Ahmad Varadharajan, Prem Chandran  


 *PRO* : Navaneetha Krishnan

லைட் வெயிட் பேபி! ( Light Weight Baby) : விக்கல்ஸ் விக்ரம் - ஆரத்தி கிருஷ்ணா நடிக்கும் படத்தின் 45 நாள்

 *லைட் வெயிட் பேபி! ( Light Weight Baby) : விக்கல்ஸ் விக்ரம் - ஆரத்தி கிருஷ்ணா நடிக்கும் படத்தின் 45 நாள் படப்பிடிப்பு நிறைவு : ஆகஸ்டில் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு* 



ஸ்டாண்ட் -அப் காமெடியன் 'விக்கல்ஸ்' விக்ரம் மற்றும் ஃபிட்னஸ் ஸ்பெஷலிஸ்ட் ஆரத்தி கிருஷ்ணா ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கும் 'லைட் வெயிட் பேபி- Light Weight Baby ' என்ற தமிழ் ரொமான்டிக் என்டர்டெய்னர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. சென்னை, பெங்களூரூ மற்றும் மைசூர் ஆகிய நகரங்களில் நான்கு கட்டங்களாக நடைபெற்ற 45 நாள் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. 


போட்டிகள் ஏராளமாக உள்ள உடற்பயிற்சிக்கான ஃபிட்னஸ் உலகத்தை பின்னினியாகக் கொண்ட இப்படம்-  பல உணர்வுகளின் கலவையாக அமைந்துள்ளது. காதல்- குடும்பம்- எதிர்பார்ப்புகள்- தனிப்பட்ட லட்சியங்கள் -ஆகியவை மோதிக் கொள்ளும் வகையில் இப்படத்தின் கதை எழுதப்பட்டுள்ளது. நகைச்சுவை, உணர்வு பூர்வமான தருணங்கள் மற்றும் விறுவிறுப்பான போட்டிகள் நிறைந்ததாக திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. 


ஸ்டாண்ட்- அப் காமெடியனாகவும், 'பிக்பாஸ்' ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டவராகவும் பிரபலமான 'விக்கல்ஸ்' விக்ரம் இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவரே இப்படத்திற்கான வசனங்களையும் எழுதியுள்ளார். அவருக்கு ஜோடியாக உடற்பயிற்சி மற்றும் பாடி பில்டிங் துறையில் நன்கு அறியப்பட்ட ஆரத்தி கிருஷ்ணா நடிக்கிறார். இது அவருக்கு அறிமுக திரைப்படமாகும். முற்றிலும் மாறுபட்ட பின்னணியை கொண்ட இந்த ஜோடி - படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்ட போதே... பார்வையாளர்களிடத்தில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. 


கே. சி. குரு ( K.C.Guru)  எழுதி, இயக்கும் இப்படத்தை ஹிதா ஸ்டுடியோஸ் ( Hitha Studios) நிறுவனம் தயாரிக்கிறது. சாகரா சந்தேஷ் ( Sagara Sandesh) இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். தொழில்நுட்ப குழுவில் ஒளிப்பதிவாளராக பிரமோத் கோட்டியன் - இசையமைப்பாளராக சரவணன் சுப்பிரமணியம் - படத்தொகுப்பாளராக ஹரிஷ் கொம்மே மற்றும் வசனகர்த்தாவாக 'விக்கல்ஸ்' விக்ரம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 


படத்தைப் பற்றி இயக்குநர் கே சி குரு தெரிவித்ததாவது....


''கடந்த 45 நாட்கள் ஒரு அற்புதமான பயணமாக அமைந்தன. ஒவ்வொரு படப்பிடிப்பு கட்டமும்... ஒவ்வொரு நகரமும்... இப்படத்திற்கு தனித்துவமான சிறப்பம்சங்களை சேர்த்தன. முற்றிலும் மாறுபட்ட உலகங்களை சேர்ந்த இருவரை பற்றிய ஒரு சிந்தனையாக தொடங்கிய இந்த கதை... தற்போது நாங்கள் உண்மையிலேயே பெருமைப்படும் ஒரு படைப்பாக உருவெடுத்துள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்தாலும், பட தொகுப்பு அறையில் மற்றொரு உற்சாகமான கட்டம் தொடங்குகிறது. இந்த கதாபாத்திரங்களை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்த நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்''.



நாயகன் 'விக்கல்ஸ்' விக்ரம் தெரிவித்ததாவது..


''எனது திரை பயணத்தில் முதன்முறையாக நாயகனாக நடித்தது மிகவும் உற்சாகமான அனுபவங்களில் ஒன்றாகும். நடிப்பதுடன் வசனங்களையும் எழுதும் வாய்ப்பு கிடைத்தது இந்த பயணத்தை மேலும் சிறப்பானதாக மாற்றியது. கேமராவிற்கு முன்னாலும் ...அதே சமயம் எழுத்து வடிவிலும்... ஒரு கதாபாத்திரத்தை வடிவமைப்பது அரிதான ஒன்று. இந்த அனுபவத்திற்காக ஒட்டுமொத்த குழுவிற்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். பார்வையாளர்களுக்கு இது ஒரு மகிழ்ச்சியான மற்றும் மனதிற்கு நெருக்கமான பொழுதுபோக்கு திரைப்படமாக அமையும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்''.


ஆரத்தி கிருஷ்ணா தெரிவித்ததாவது...


''ஃபிட்னஸ் என்பது எனக்கு எப்போதும் உடல் ரீதியான சவாலாகவே இருந்து வந்துள்ளது. ஆனால் நடிப்பு என்னை உணர்வு ரீதியாக முற்றிலும் புதிய வழிகளில் சவாலுக்கு உட்படுத்தியது. இந்த கதாபாத்திரத்தில் நடித்தது எனக்குள் இருந்த வேறொரு பரிமாணத்தை கண்டறிய உதவியது. எனது முதல் மற்றும் முக்கியமான இந்த திரைப்படத்தை இவ்வளவு மறக்க முடியாத அனுபவமாக மாற்றி அமைத்த ஒட்டுமொத்த குழுவினருக்கும் நான் நன்றி கூறுகிறேன். பார்வையாளர்கள் இப்படத்தை பார்ப்பதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்".


படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் படக் குழுவினர் தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். லைட் வெயிட் பேபி - Light Weight Baby ' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஆகஸ்ட் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் வெளியிடப்படும். இப்படம் இந்த ஆண்டின் பிற்பகுதியில் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.






*நடிகர்கள்* 


 *விக்கல்ஸ் விக்ரம்* – கதாநாயகனாக அறிமுகமாகும் முதல் திரைப்படம்


 *ஆரத்தி கிருஷ்ணா* – முதல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம்


 *தொழில்நுட்பக் குழு* 


 *தயாரிப்பு* : ஹிதா ஸ்டூடியோஸ் (Hitha Studios)


 *கதை, திரைக்கதை மற்றும் இயக்கம்:* கே.சி. குரு


 *இணைத் தயாரிப்பாளர்* : சாகரா சந்தேஷ்


 *ஒளிப்பதிவு* : பிரமோத் கொட்டியன்


 *இசை* : சர்வனா சுப்பிரமணியம்


 *படத்தொகுப்பு* : ஹரிஷ் கொம்மே


 *வசனம்* : விக்கல்ஸ் விக்ரம்


 *இணை இயக்குநர்* : கிரண் தும்பகெரே


 *நிர்வாகத் தயாரிப்பாளர்* : ஷரத் குமார் என்


 *கலை இயக்குநர்* : சங்கரகௌடா


 *உதவி இயக்குநர்கள்* : அகமது வரதராஜன், பிரேம் சந்திரன்


 *மக்கள் தொடர்பு* (PRO): நவநீத கிருஷ்ணன்

Wednesday, 29 July 2026

A Lifelong Love for Cinema: Yuva Pushpakar Set to Return to the Silver Screen

 A Lifelong Love for Cinema: Yuva Pushpakar Set to Return to the Silver Screen




After establishing himself as a successful entrepreneur, actor Yuva Pushpakar is preparing for a return to cinema, bringing with him years of life experience, professional discipline, and an enduring passion for the art of filmmaking.


Long before making his film debut, Yuva built a strong foundation in front of the camera through an extensive career in television and commercial advertising. He appeared in campaigns for several leading national and international brands, including HSBC, Ponds, Carlsberg, Aircel, 7UP, and many others. The experience not only enhanced his confidence and screen presence but also strengthened his ambition to pursue acting as a career.


Determined to prepare himself as a complete performer, Yuva underwent professional training in dance and stunt choreography under the renowned Pandian Master, who has trained and worked with several prominent actors in the South Indian film industry. His training involved early morning practice sessions focused on action choreography, stunt techniques, physical conditioning, and performance—an experience that instilled discipline and continues to influence his approach to acting.


Yuva made his mark in Tamil cinema with Modhi Vilayadu (2009), directed by acclaimed filmmaker Saran. Portraying the character “Madhan,” he shared screen space with Vinay, Kajal Aggarwal, Kalabhavan Mani, Santhanam, and several other well-known actors. His natural performance earned appreciation from audiences and introduced him as a promising talent.


Despite receiving opportunities to continue in films, Yuva chose to focus on building his entrepreneurial career. While his professional journey took a different direction, his interest in cinema remained constant.


A passionate student of world cinema from a young age, Yuva devoted much of his free time to studying films from different countries. His enthusiasm even led him to source DVDs from Korea to explore international cinema, storytelling techniques, filmmaking styles, and performances. This continuous learning deepened his understanding of the craft and reinforced his desire to return to acting.


Inspired by the remarkable careers of Kamal Haasan, Rajinikanth, and Malayalam cinema legend Mohanlal, Yuva has always aspired to build a career defined by versatility rather than image. His focus has consistently been on portraying meaningful, layered, and challenging characters across different genres.


Reflecting on his journey, Yuva says:


“Cinema has always been my greatest passion. Every experience in my life has helped shape me into the person I am today. I’m returning with greater maturity, a deeper understanding of people and life, and a stronger commitment to my craft. My goal is to be part of stories that inspire, entertain, and leave a lasting impact on audiences.”


Over the past few years, Yuva has been preparing for his return through an intensive fitness transformation while continuing to study contemporary filmmaking, analyze scripts, and stay connected with the changing landscape of Indian cinema.


Having successfully established himself in business, he now believes the time is right to fully pursue the artistic journey he has always envisioned. He is currently exploring opportunities in both Tamil and Malayalam cinema, with a particular interest in character-driven stories, action dramas, psychological thrillers, and content-oriented films that offer meaningful creative challenges.


Yuva has also been sharing glimpses of his preparation and transformation through his social media platforms, where his renewed commitment to cinema has received an encouraging response from followers.


He is currently evaluating multiple scripts from the Tamil and Malayalam film industries, and an official announcement regarding his next project is expected in the near future.


For Yuva Pushpakar, this marks not simply a return to acting, but the beginning of a new chapter—one shaped by experience, preparation, and a lifelong passion for cinema.

சாய் வினோத் ஜெயக்குமார் வழங்கும் Movietron Production தயாரிப்பில் ஜெயராம்–அஷ்வின் நடிக்கும் “குட் நியூஸ்”

 சாய் வினோத் ஜெயக்குமார் வழங்கும் Movietron Production தயாரிப்பில் ஜெயராம்–அஷ்வின் நடிக்கும் “குட் நியூஸ்” திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு!






சாய் வினோத் ஜெயக்குமார் வழங்கும் Movietron Production தயாரிப்பில், ஜெயராம் மற்றும் அஷ்வின் இணைந்து நடிக்கும் “குட் நியூஸ்” திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு திட்டமிட்டபடி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. படக்குழுவின் ஒற்றுமை, அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பை வெளிப்படுத்தும் வகையில், இந்த முதல் கட்ட படப்பிடிப்பு உற்சாகமான சூழலில் நிறைவுபெற்றுள்ளது.


இந்த முதல் கட்ட படப்பிடிப்பின் முக்கிய அம்சமாக, அனைத்து துறையினரின் சிறப்பான ஒத்துழைப்பும் ஒருங்கிணைப்பும் அமைந்தது. நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், இயக்குநர் குழு, தயாரிப்பு நிர்வாகம், ஒளிப்பதிவு, கலை இயக்கம், ஆடை வடிவமைப்பு, நடன அமைப்பு மற்றும் உதவிக் குழுவினர் என அனைவரும் முழு ஈடுபாட்டுடன் பணியாற்றி, படப்பிடிப்பை எந்த சிக்கலும் இல்லாமல் வெற்றிகரமாக முடித்துள்ளனர். படப்பிடிப்பு தளத்தில் நிலவிய உற்சாகமான சூழலும், அனைவரின் ஒற்றுமையும் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.


தயாரிப்பாளர் சாய் வினோத் ஜெயக்குமார் மற்றும் இணைத் தயாரிப்பாளர் சாய்பிரபு ஜெயக்குமார் தலைமையிலான தயாரிப்புக் குழுவின் திட்டமிடல், தொடர் ஒத்துழைப்பு மற்றும் சிறப்பான நிர்வாகம் காரணமாக, அனைத்துத் துறையினரும் தங்களது பணியில் முழு கவனத்துடன் செயல்பட முடிந்தது.


முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்த அறிமுக இயக்குநர் நாகேந்திரமுருகன், தயாரிப்பாளர், இணைத் தயாரிப்பாளர், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். அனைவரின் ஒற்றுமை, உற்சாகம் மற்றும் அர்ப்பணிப்பே ஒரு சிறந்த குடும்ப பொழுதுபோக்கு திரைப்படத்தை உருவாக்கும் நம்பிக்கையை மேலும் அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.


“குட் நியூஸ்” திரைப்படத்தின் மற்றொரு முக்கிய சிறப்பம்சமாக, பிரபல இயக்குநர் பாண்டிராஜ் இப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். குடும்பக் கதைகளை உணர்வுபூர்வமாகவும், இயல்பாகவும் சொல்லும் தனித்துவம் கொண்ட பாண்டிராஜின் வசனங்கள், இந்த திரைப்படத்திற்கு கூடுதல் பலம், நகைச்சுவை மற்றும் இயல்பான உணர்வுகளை வழங்கும் என்று படக்குழு நம்புகிறது.


Movietron Production தயாரிக்கும் இந்த திரைப்படத்தில், திரைத்துறையின் முன்னணி நடிகர் ஜெயராம் மற்றும் அஷ்வின் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். கதாநாயகியாக கல்யாணி அனில் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார். மேலும் ஆஷா சரத், முத்துக்குமார், ஜாபர், குரேஷி, தீபா, வினோதினி, திவ்யா, மணிமேகலை, ஜென்சன் திவாகர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


படத்தின் தொழில்நுட்பக் குழுவில் பிரவீன்குமார் ஒளிப்பதிவாளராகவும், சித்துகுமார் இசையமைப்பாளராகவும், ஷெரீப் மாஸ்டர் நடன இயக்குநராகவும், கார்த்திக்வாசன் கலை இயக்குநராகவும், அர்ஜுன் பாபு படத்தொகுப்பாளராகவும் பணியாற்றுகின்றனர். எல். எம். தனசேகர் நிர்வாகத் தயாரிப்பாளராகவும், அரவிந்தன் இரண்டாம் நிர்வாகத் தயாரிப்பாளராகவும் உள்ளனர். திரைப்படத்தின் மக்கள் தொடர்பு பணிகளை பி.ஆர்.ஓ. ரேகா கவனித்து வருகிறார்.


முதல் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், “குட் நியூஸ்” திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு தயாராகி வருகிறது. இந்த சிறப்பான தொடக்கத்தைத் தொடர்ந்து, உணர்வுகள், நகைச்சுவை மற்றும் குடும்ப உறவுகளை அழகாகச் சொல்லும் ஒரு தரமான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக “குட் நியூஸ்” ரசிகர்களை கவரும் என்ற நம்பிக்கையில் படக்குழு உள்ளது.

MITTAI MAZHAI’ FROM AOT RELEASED ON DULQUER SALMAAN’S BIRTHDAY

 MITTAI MAZHAI’ FROM AOT RELEASED ON DULQUER SALMAAN’S BIRTHDAY*



The makers of AOT celebrated Dulquer Salmaan’s birthday by unveiling the film’s first single, “Mittai Mazhai.”


Composed by GV Prakash Kumar, Mittai Mazhai is a feel-good melody that beautifully captures the emotional heartbeat of the story. Told from the heroine’s perspective, the song portrays her dream of touching the stars and the silent encouragement of the man who helps her move forward. It is a touching tribute to a unique bond that transcends traditional definitions of love.


Penned by Balaji Venugopal and sung by Ramya Behara, the song is enriched with poetic metaphors that symbolize perseverance, hope, and the quiet power that drives every dream.


Starring Dulquer Salmaan, Satvika Veeravalli, and Shruti Haasan, Aakasamlo Oka Tara is directed by Pavan Sadineni, produced by Sandeep Gunnam and Ramya Gunnam under Lightbox Media. The film is presented by Swapna Cinema and Geetha Arts.


https://www.youtube.com/watch?v=_Fy4eK09pWM

துல்கர் சல்மானின் பிறந்தநாளில் 'AOT' படத்தின் 'மிட்டாய் மழை' பாடல் வெளியீடு

 *துல்கர் சல்மானின் பிறந்தநாளில் 'AOT' படத்தின் 'மிட்டாய் மழை' பாடல் வெளியீடு*



துல்கர் சல்மான் பிறந்தநாளன்று பொழிந்த 'மிட்டாய் மழை' !


நடிகர் துல்கர் சல்மானின் பிறந்தநாளை முன்னிட்டு ஏ ஒ டி - AOT திரைப்படக் குழுவினர் - அப்படத்தில் இடம்பெறும் முதல் பாடலான 'மிட்டாய் மழை- Mittai Mazhai' யை வெளியிட்டுள்ளனர்.‌


ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள 'மிட்டாய் மழை' பாடல் கதையின் உணர்வு பூர்வமான சாராம்சத்தை அழகாக வெளிப்படுத்தும் ஒரு இனிமையான மெல்லிசை பாடல் ஆகும். கதாநாயகியின் பார்வையில் அமைக்கப்பட்ட இந்தப் பாடல்... நட்சத்திரங்களை தொடும் அவளது கனவையும், அவளை முன்னேற்ற தூண்டும் ஆணின் அமைதியான ஊக்கத்தையும் சித்தரிக்கிறது. காதலுக்கான வழக்கமான வரையறைகளை கடந்த ஒரு தனித்துவமான பிணைப்பிற்கு இது ஒரு நெகிழ்ச்சியான சமர்ப்பணமாக அமைந்துள்ளது. 


பாடலாசிரியர் பாலாஜி வேணுகோபாலின் வரிகளில்... பின்னணி பாடகி ரம்யா பெஹாரா பாடியுள்ள இந்தப் பாடல்... விடா முயற்சி- நம்பிக்கை மற்றும் ஒவ்வொரு கனவையும் முன்னெடுத்துச் செல்லும் அமைதியான ஆற்றல் - ஆகியவற்றை உணர்த்தும் கவித்துவமான உவமைகளால் மெருகூட்டப்பட்டுள்ளது.‌


துல்கர் சல்மான், சாத்விகா வீரவள்ளி,  ஸ்ருதிஹாசன் ஆகியோர் முதன்மையான வேடத்தில் நடித்துள்ள 'ஆகாசம்லோ ஒக தாரா- Aakasamlo Oka Thara- AOT' திரைப்படத்தை பவன் சடினேனி இயக்கியுள்ளார். லைட் பாக்ஸ் மீடியா ( Lightbox Media) நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் சந்தீப் குன்னம் மற்றும் ரம்யா குன்னம் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். ஸ்வப்னா சினிமா மற்றும் கீதா ஆர்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை வழங்குகின்றன.‌

https://www.youtube.com/watch?v=_Fy4eK09pWM

*‘

Mythri Movie Makers' Modha Rathiri Set to Bring the Biggest Wedding Madness to Theatres on August 21*

 *Mythri Movie Makers' Modha Rathiri Set to Bring the Biggest Wedding Madness to Theatres on August 21*



_*One Wedding. One Night. Endless Confusion. Unlimited Laughter.*_


Some weddings create memories. Some create complete madness. This August, Mythri Movie Makers invites audiences to witness one unforgettable night with Modha Rathiri, a wholesome rural comedy entertainer that is all set for a grand worldwide release on August 21.


Directed by Raja Karuppasamy, Modha Rathiri transforms an ordinary village wedding into an extraordinary rollercoaster of hilarious misunderstandings, unexpected twists and heartwarming emotions. Set entirely over the course of a single night, the film keeps the laughs coming as one surprise leads to another, proving that sometimes life's biggest celebrations arrive wrapped in absolute chaos. Rishikanth, who has been gaining appreciation for his good roles is debuting as hero through this film. After winning laurels and accolades for her outstanding performance in ‘Sirai’ and ‘Youth’, actress Anishma Anilkumar is playing the female lead role in this movie. 


Packed with colourful characters, infectious humour and moments every family can relate to, Modha Rathiri promises the kind of entertainer that is best enjoyed with a packed theatre, where every laugh becomes louder and every twist lands even better.


Producer Naveen Yerneni of Mythri Movie Makers says, "The very first narration made us laugh, smile and imagine how audiences would react inside a theatre. That's when we knew this story deserved to be made. 'Modha Rathiri' has everything we enjoy as movie lovers: humour, emotions, relatable characters and endless entertainment. Raja Karuppasamy has brought that energy beautifully onto the screen & our entire cast and crew have worked with incredible passion to complete the film on schedule. We are excited to bring this entertainer to audiences worldwide on August 21, and we hope theatres are filled with laughter from beginning to end.”


Director Raja Karuppasamy says, "I couldn't have asked for a better beginning to my journey as a filmmaker. My heartfelt thanks to producers Naveen Yerneni sir & Y. Ravi Shankar sir for believing in me and trusting this story. Working with Mythri Movie Makers, a banner known for delivering some of Indian cinema's biggest blockbusters, has been both an honour and a huge responsibility. Their encouragement gave me the confidence to tell this story exactly the way I imagined it. Every actor, every technician and every member of our crew became part of this journey with complete dedication. More than anything else, I hope audiences walk out of theatres smiling, laughing and talking about these characters long after the film ends.”


The ensemble star-cast of this film includes  Rishikanth, Anishma Anilkumar, Chetan, A. Venkatesh, Bucks, Abdool Lee, Shelly Kishore, Sangeetha Balan, Banupriya, Sumithra Devi L., Varshini Karmegham, Karthikeyan, Velan, and Kowshik Kabilan among others. The technical crew comprises Surendran Paranjothi as cinematographer, Ashok Arjunan as editor, and Bharath Sankar composing the music. Poornima Ramaswamy (Costume Designer), A. Balumahendra (Art Director), and Viyaki (Publicity Designer) are the others int he technical crew. 


Directed by Raja Karuppasamy,  produced by Mythri Movie Makers, and co-produced by Anil Yerneni, Modha Rathiri blends rural charm, laugh-out-loud comedy, heartfelt emotions and unexpected surprises into a complete family entertainer.


This August 21, get ready for a wedding where nothing goes as planned... and that's exactly what makes it unforgettable.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

 *மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!*



*ஒரு திருமணம்! ஒரு இரவு! முடிவில்லா குழப்பம்! வயிறுவலிக்க சிரிக்கலாம்!!*


சில திருமணங்கள் இனிய நினைவுகளை உருவாக்கும். சில திருமணங்கள் மறக்க முடியாத கலகலப்பையும் குழப்பத்தையும் உருவாக்கும். அப்படிப்பட்ட ஒரு மறக்க முடியாத இரவை திரையரங்குகளில் கொண்டாட ரசிகர்களை அழைக்கிறது மைத்ரி மூவி மேக்கர்ஸ். முழுக்க முழுக்க குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய நகைச்சுவை பொழுதுபோக்கு திரைப்படமான ‘மொத ராத்திரி’ ஆகஸ்ட் 21 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது.


இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் எதிர்பாராத திருப்பங்கள், வேடிக்கையான தவறான புரிதல்கள், மனதை தொடும் உணர்வுகள் மற்றும் இடைவிடாத நகைச்சுவை என ஒரு சாதாரண கிராமத்து திருமணத்தை அசாதாரண அனுபவமாக மாற்றுகிறது. முழுக் கதையும் ஒரே இரவில் நடைபெறுவதால், ஒவ்வொரு காட்சியும் சிரிப்பையும் புதுமையான திருப்பங்களையும் கொண்டிருக்கும். வாழ்க்கையின் மிகப்பெரிய கொண்டாட்டங்கள் பல நேரங்களில் எதிர்பாராத குழப்பங்களோடு வருவதுதான் அதன் சிறப்பு என்பதை இந்த படம் சுவாரஸ்யமாகச் சொல்கிறது. சிறப்பான கதாபாத்திரங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் ரிஷிகாந்த், இந்தப் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். ‘சிறை’ மற்றும் ‘யூத்’ திரைப்படங்களில் தனது சிறந்த நடிப்புக்காக பாராட்டுகளைப் பெற்ற அனிஷ்மா அனில்குமார், இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.


வண்ணமயமான கதாபாத்திரங்கள், கலகலப்பான நகைச்சுவை, ஒவ்வொரு குடும்பமும் தொடர்புபடுத்திக் கொள்ளக்கூடிய தருணங்கள் என ‘மொத ராத்திரி’ திரைப்படம் திரையரங்குகளில் ரசிகர்களுடன் சேர்ந்து ரசிக்க வேண்டிய முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது. மனம் விட்டு சிரித்து மகிழும் அனுபவத்தை இந்தப் படம் நிச்சயம் வழங்கும்.


மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் நவீன் யெர்னேனி கூறுகையில், “இந்தக் கதையை முதன்முதலாகக் கேட்டபோதே நாங்கள் சிரித்து, ரசித்தோம். இந்தக் கதையை திரையில் பார்த்தால் ரசிகர்கள் எப்படி மகிழ்ச்சியடைவார்கள் என்பதையும் அறிந்தோம். அதனால், உடனே இந்தக் கதை திரைப்படமாக உருவாக வேண்டும் என்று முடிவு செய்தோம். ஒரு திரைப்பட ரசிகராக நாம் விரும்பும் நகைச்சுவை, உணர்வுகள், நம்மைச் சுற்றியிருக்கும் கதாபாத்திரங்கள், முழுமையான பொழுதுபோக்கு என அனைத்தும் ‘மொத ராத்திரி’ திரைப்படத்தில் உண்டு. இயக்குநர் ராஜா கருப்பசாமி அந்த உணர்வை மிக அழகாக திரையில் கொண்டு வந்துள்ளார். நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் அனைவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்து திட்டமிட்ட நேரத்தில் படத்தை நிறைவு செய்துள்ளனர். ஆகஸ்ட் 21ஆம் தேதி இந்த திரைப்படத்தை உலகம் முழுவதும் ரசிகர்களிடம் கொண்டு செல்ல ஆவலாக இருக்கிறோம். படம் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை ரசிகர்கள் சிரித்து மகிழ வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்" என்றார். 


இயக்குநர் ராஜா கருப்பசாமி கூறுகையில், “ஒரு திரைப்பட இயக்குநராக எனது பயணத்தை இதைவிட சிறப்பாகத் தொடங்க முடியாது. இந்தக் கதையை நம்பி என்னை ஊக்குவித்த தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி சார் மற்றும் ஒய். ரவி சங்கர் சார் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றி. இந்திய சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களை வழங்கிய மைத்ரி மூவி மேக்கர்ஸ் போன்ற முன்னணி நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றியது எனக்கு பெருமை மட்டுமல்ல, பொறுப்பும் கூட. அவர்கள் அளித்த நம்பிக்கையும் ஊக்கமும் தான் இந்தக் கதையை நான் நினைத்தபடியே சொல்லும் தைரியத்தை அளித்தது. நடிகர்கள் முதல் தொழில்நுட்பக் கலைஞர்கள் வரை அனைவரும் முழு அர்ப்பணிப்புடன் இருந்தனர். இந்தப் படம் முடிந்த பிறகும் ரசிகர்கள் இந்தக் கதாபாத்திரங்களைப் பற்றி பேசிக்கொண்டும், சிரித்துக்கொண்டும் திரையரங்குகளை விட்டு வெளியேற வேண்டும் என்பதே என் மிகப்பெரிய ஆசை” என்றார்.


*நடிகர்கள்:* இந்தப் படத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், சேத்தன், ஏ. வெங்கடேஷ், பக்ஸ், அப்துல் லீ, ஷெல்லி கிஷோர், சங்கீதா பாலன், பானுப்ரியா, சுமித்ரா தேவி எல்., வர்ஷினி கார்மேகம், கார்த்திகேயன், வேலன், கௌஷிக் கபிலன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


*தொழில்நுட்பக்குழு விவரம்:*


இயக்கம்: ராஜா கருப்பாமி,

தயாரிப்பு பேனர்: மைத்ரி மூவி மேக்கர்ஸ்,

தயாரிப்பாளர்கள்: அனில் யெர்னேனி, ஒளிப்பதிவாளர்: சுரேந்திரன் பரஞ்சோதி, படத்தொகுப்பாளர்: அசோக் அர்ஜுனன், இசையமைப்பாளர்: பரத் சங்கர்,  

ஆடை வடிவமைப்பாளர்: பூர்ணிமா ராமசாமொ,

கலை இயக்கம்: ஏ. பாலுமகேந்திரா (கலை இயக்கம்),

விளம்பர வடிவமைப்பு:  வியாகி 


வரும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள இந்த திருமண கொண்டாட்ட திரைப்படத்தை காண தவறாதீர்கள்.