Featured post

Indie Music Sensation Keneeshaa Marks Her Malayalam Debut with Mud Fish

 *Indie Music Sensation Keneeshaa Marks Her Malayalam Debut with Mud Fish* _*Singer Expands Her Musical Horizons with a Promising Mollywood ...

Monday, 15 April 2019

நடிகர் கார்த்தி நிதி உதவி. மரம் கருணாநிதிக்கு - உழவன் பவுண்டேசன் சார்பில் 50ஆயிரம் வழங்கினார். "மரம் கருணாநிதி" .



விழுப்புரம் மாவட்டம் அனந்தபுரம் பேரூராட்சி சங்கீதமங்கலம் என்ற கிராமத்தில் பிறந்தவர் கருணாநிதி.  சிறு வயதில் இருந்தே மரங்களின் மீதும் இயற்கையின் மீது பேரன்பு கொண்ட இவருக்கு சிறுவயதில் பசுமை போர்த்திய ஊராக இருந்த தன் ஊர் எல்லாம் மாறி மரங்களே இல்லாத சூழ்நிலை இருக்கிறதே என்று மனம் வெறுப்பினார். ஏன் நாம் மரக்கன்றுகளை போகும் இடங்கள் எல்லாம் நடக்கூடாது என்று யோசித்தவர்தான். 

இன்று 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டுள்ளார். ஆதலால் இவர் பெயரோடு "மரம்" என்ற சொல்லும் இணைந்து மரம் கருணாநிதி என்றே  அழைக்கப்படுகிறார். 

55 வயதான மரம் கருணாநிதிக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். எப்போதும் இயற்கையை பற்றிதான் கவலை. எங்கே சென்றாலும்,  யார் வீட்டுக்கு சென்றாலும் மரக்கன்றுகள் கொடுப்பது இவரது  வழக்கம். 

இதுவரை இவர் மற்றவர்களுக்கு வழங்கிய மரக்கன்றுகளுக்கோ அல்லது இவரிடம் இருந்து மற்றவர்கள் வாங்கிச் சென்ற மரக்கன்றுகளுக்கோ இவர் பணம் வாங்கியதில்லை. 

விசேஷ நாட்களில் வேலைக்கு செல்வது,  தன்னுடைய சம்பளத்தில் இருந்து  மரக்கன்றுகள் வாங்குவது இப்படிதான் இவர் மரக்கன்றுகளை இலவசமாக அளித்தும்,  நட்டும் வருகிறார். 

அவர் இயற்கை மீது கொண்ட பற்றால் தன்னுடைய சம்பளத்தை செலவு செய்வதால் பல நேரங்களில் பொருளாதார நெருக்கடியும் ஏற்படுகிறது. ஆனால் எந்த நிலை என்றாலும் மரக்கன்றுகள் வழங்குவதையும் நடுவதையும் இவர் கைவிடுவதேயில்லை.

இவரது சேவையை பாராட்டியும் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டும் உழவன் பவுண்டேசன் சார்பில் அதன் நிறுவனர் நடிகர் கார்த்தி ரூபாய் 50 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கி கெளரவித்துள்ளார்.

No comments:

Post a Comment