Featured post

Manidhargal : A Night of Twists Begins With a Powerful First Look

 "Manidhargal : A Night of Twists Begins With a Powerful First Look" "Debut Director Raam indhra’s 'Manidhargal' Grab...

Thursday, 1 August 2019

சென்னை கிருஷ்ணா கான சபாவில் செல்வி அக்ஷயா ராஜேஸ்வரியின் பரதநாட்டிய அரங்கேற்றம்

 
சென்னை கிருஷ்ணா கான சபாவில் செல்வி அக்ஷயா ராஜேஸ்வரியின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது. அரங்கேற்ற நிகழ்வை  அக்ஷயா ராஜேஸ்வரியின் குடும்பத்தினர் மிகச் சிறப்பாக நடத்தினர். நிகழ்வை அக்ஷயா ராஜேஸ்வரியின் குருவான திருமதி Dr. லக்ஷ்மி கணேஷ் (நிறுவனர் சிவானந்தா கலயாலயம், வேளச்சேரி) திறம்படி நடத்தினார்.

பரதநாட்டியத்தில் நாட்டியத்திற்கான பாடலைப் திருமதி பத்மா இனிமையாகப் பாட, மிருதங்கம் வாசிப்பை  திரு. தென்திருப்பேரை  N.V  பாலாஜி  சிறப்பாக கையாண்டார். வயிலின் வாசிப்பில் திரு. கோவிந்தபுரம் V. பாலாஜி பார்வையாளர்களை ரசிக்க வைத்தார். புல்லாங்குழல் வாசிக்கும் பணியை திரு. கடப்பா ராகவேந்திரன் அருமையாக செய்து நிகழ்வை சிறப்பாக்கினார். நிகழ்ச்சியை மிக அழகான தமிழ்சொற்களால் தொகுத்து வழங்கினார் திரு. கணேஷ் சண்முகம். எல்லாவற்றையும் விட தன் பரதநாட்டியத்தால் பார்வையாளர்கள் அனைவரையும் பிரம்மிக்க வைத்தார் செல்வி. அக்ஷயா ராஜேஸ்வரி.

Dr. பாரதி மகாதேவன் பேசியதாவது,
"செல்வி அக்ஷயாவின் முதல் குரு திரு. முரளி ராமச்சந்திரன் இங்கே இருக்கிறார். அதுபோல் திரு. ஷேசாத்ரி அவர்களின் திறமையைச் சொல்லி மாளாது. செல்வி. அக்ஷயா ராஜேஸ்வரியின் குடும்பம் அந்தக்குழந்தைக்கு எவ்வளவு சப்போர்ட் பண்ணி இருக்காங்க என்பதை உணர முடிகிறது. இந்தக்குழந்தையின் குரு லக்ஷ்மி கணேஷ் அவர்கள் போற்றுதலுக்குரியவர். அவர் அவரது குருவிடம் இருந்து கிரகித்ததை அப்படியே அவரது மாணவிக்கும் கொடுத்து இருக்கிறார். நான் இதுவரை அவர் ஆடிதான் பார்த்திருக்கிறேன். அவரது மாணவி ஆடி இப்பொழுது தான் பார்க்கிறேன். பிரமாதமாக இருந்தது. லக்ஷ்மி போல குரு கிடைத்ததிற்கு  அக்ஷயா ராஜேஸ்வரி கொடுத்து வைத்திருக்கணும். சதிஸ்வரம், சப்தம் போன்ற நாட்டியத்தில் அக்ஷயா காட்டிய பாவம் ரொம்ப நல்லா இருந்தது. அக்ஷயாவின் இந்தத் திறமைக்குப் பின்னால் நிறைய உழைப்பு இருக்கிறது. அவள் சைக்காலஜி படித்து கொண்டுயிருந்தாலும் இந்த நாட்டியத்துறையிலும் பெரிய இடத்திற்கு வர மீனாட்சி சுந்தரேஸ்வரைப் பிரார்த்திக்கிறேன்" என்றார்


"மிருதங்க சக்கரவர்த்தி சீனாக்குட்டி அவர்களின் புதல்வர் திரு. ஷேசாத்ரி பேசியதாவது,
"மாதா பிதா குரு தெய்வம். இதில் குரு கிடைப்பது தான் பெரும் பாக்கியம். அக்ஷயாவிற்கு லக்ஷ்மி கணேஷ்  குருவாக கிடைத்தது பாக்கியம். லயம் தெரிந்தால் தான் ஜதி செய்வதில் பிரச்சனை இருக்காது. லயம் என்பது பாடலுக்கு, புல்லாங்குழலுக்கு என எல்லாவற்றுக்கும் தேவைப்படும். அக்ஷயா ராஜேஸ்வரியின் அரங்கேற்றம் மிகப் பிரம்மாதமாக இருந்தது. இந்த கச்சேரியில் பங்குபெற்ற அனைவரும் தங்கள் பணியைச் சிறப்பாக செய்தார்கள்" என்றார்


திரு.முரளி ராமச்சந்திரன் பேசியதாவது,

"இந்த அரங்கேற்றத்தில் முதல்வெற்றி இந்த அக்ஷயா ராஜேஸ்வரி தாத்தாவின் ஆசை இன்று நிறைவேற்றப்பட்டது. டீச்சர் லக்ஷ்மி கணேஷ் இந்த நிகழ்வில் நிகழ்ச்சி நடத்தும் போது மிருதங்கம் வாசிப்பவர் உள்ளிட்ட மேடையில் இருக்கும் ஐவரையும் கண்களாலே வழி நடத்தினார். இப்படி ஒரு டீச்சர் கிடைத்ததிற்கு அக்ஷயா பெருமைப்படலாம். இந்த அக்ஷயா ராஜேஸ்வரி ஒரு பாடலுக்கு நாட்டியம் ஆட வரும்போது எப்படி சிரித்த முகத்தோடு வந்தாளோ அதேபோல தான் பாட்டு முடிந்ததும் சிரித்தபடியே  சென்றார். அதற்கு காரணம் அவளின் ஈடுபாடு. இந்தக் குழந்தையை வாழ்த்துவதற்கு நான் பெருமைப் படுகிறேன்." என்றார்.

நிகழ்ச்சியின் முடிவில் அக்ஷயா ராஜேஸ்வரியின் குடும்பத்தார் அனைவருக்கும் நன்றி சொல்லி மகிழ்ந்தார்கள்

No comments:

Post a Comment